அமலனாதி பிரான்-முதல் பாசுரம் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

திரு கமல பாதம் வந்து

ஆழ்வாரின் மைத்ரேயர்  அவரின் அவா-ஆசை தான் அது உந்த உந்த பாசுரம் வெள்ளி இட்டார் -இவர் உடைய தளிர் புரியும் திருவடிகள் இருந்த படி –

திரு கமலம்- பெருக்காற்றில்  இழுவார் தெப்ப கட்டை போல தாமரை திருஷ்டாந்தம். ஆதித்யனால் மலரும் தாமரை.. ஆஸ்ரிதர் கூட்டத்தால் மலரும் இந்த திருவடி தாமரை

வந்து-வருகை கால்களின் வியாபாரம்.. அதனால் இதில் வந்து-வந்தது

வந்து-வந்தது வழி வந்தானும் தானே பற்றினவனும் அவனே
திரு= சுத்தி கமல= போக்கியம் இரண்டும் இருக்கும் பாதம்

அம்மான் =சுவாமி

பிராப்தமும் பிராபஹமும் போக்யமும் அவனும் ..வந்து உபாய பூர்த்தி

நீதி வானவன் -அவர்களால் பார்க்க பட்ட திருவடிகள் என் கண்ணில் உள்ளன ..தப்பிக்க பார்த்தாலும் தொடர்ந்து வந்து கண்ணை நிர்பந்தமாக திறந்து-கண்ணில் உள்ளன– திறந்து புகுந்தன ..தாழ்ந்த கண்களால் பார்க்க கூடாது என்று மூடினார்.. வெளியில் உள்ள திருவடிகள் உள் புகுந்து ஒளி விட தொடங்கின கிடைத்த பக்தனை விட மாட்டாமல்

ஒக்கினதே-சமம் போல இருந்தது/ லாபம் இருவருக்கும் பயன் இருவருக்கும் ஆனா பின்பு -அமுதனார் …பிரத்யட்ஷம் போல இருந்தது..தாழ்ந்த கண்ணுக்கு இலக்கு ஆனா பின்பும் முன் நிலையை போல இருந்தனவே..அவன் பெருமைக்கு ஒக்கின்றதே இவர் கிடைத்தது

சீல சித்தி அங்கு ஸ்வரூப சித்தி இங்கு

மானச சாஷ்த் காரம்

அமலன் -குற்றம் இல்லாதவன்  உயர்வற உயர் நலம் உடையவன் ஆதி-எவன் ஜகத் காரண பூதன்  பிரான் -உபாகாரன் அடியார்க்கு பயிலும் சுடர் ஒளியில் சொன்னதை விண்ணவர் கோன் அயர்வற அமரர்கள் அதிபதி தொழுது எழு என்றார் அவர் இவருக்கு தானே வந்தது .

அமலன் -குற்றம் இல்லாதவன்அண்டியவர் குற்றம் போக்குபவன்/ மோட்ஷம் தருபவன் ..நிமலன்-மானச சாஷ்த் காரம் நின்மலன் தனது போக்யமாககொண்டவன்

அகில காரண அத்புத காரணம் நிஷ் காரணம் காரணமே என்று வாரணம் அழைத்தது போல/முதல் வேர் வித்து.இரண்டும் சத்திரம் சாமரம் போல இன்றி அமையாத அடையாளங்கள் மோட்ஷ பிரதானமும் ஜகத் ஏக காரணமும்..

பிரான் சர்வருக்கும் உபகார காரன் ..சத் = முதல் இருப்பு .தொடக்கம் முதல் சரீரம் கொடுத்து க்ஜானம்-gjaanam-கொடுத்து சாஸ்திரம் ஆழ்வார் ஆச்சர்யர்களை பிறப்பித்து சரணாகதி பண்ணினான் என்ற பேர் வைத்து மடியில் வைத்து திரு மார்புடன் அணைத்து கொள்ளும்வரை..களை அற்ற கைங்கர்யம் தனக்கே ஆக எனைக் கொள்ளும் ஈதே..சால பல நாள் உகந்து காக்கிறான்..

ரட்ஷகத்தின் மூன்று நிலை- அமலன்/ ஆதி / பிரான்..அகாரத்தின் விவரணம் இவை..

அமலன் உவந்த மந்தி மூன்றிலும் விவரணம் இது தான்

அடியார்க்கு ஆட்படுத்துவது– நம சப்தம்..கொடு மா வினையேன் என்று ஆழ்வார் தம்மை நொந்து கொள்கிறார்..நீராட போதுவீர் என்று முதல் பாசுரத்திலே ஆண்டாள் அருளினது போல..

அடியார் என்பதால் ஜீவாத்மா சேஷ பூதர்கள் என்பதை குறிக்கிறார். ம காரம் இதைக் குறிக்கிறது..அடியார்/ஆத்மா ஒருவன் இல்லை பல-பன்மை-/

என்னை ஆட்படுதினவன் விமலன் வேற என்பதை குறிக்கிறது ஜீவா பர பேதம் கூடிதாகில் நல உறைப்பு ..அது அதுவே ..ஐக்ய பத்திஆகாது../சாம்ய பத்தி கிட்டும்

சதுர்த்தியில் சொன்ன -ஆய -ஏறி கழிந்த  சதுர்த்தி-அனந்யார்க்க சேஷ பூதன்..சேஷத்வ க்ஜானம் -gjaanam-இல்லாதவர் கூட இல்லை உள்ளவர் இடம் ஆட படுத்தினான் .. மகாரத்தில் எல்லோரும் உண்டு..உகாரத்தின் அர்த்தம் இத்தால் சொல்ல பட்டது..

திரு பாண் ஆழ்வாரை இஷ்ட விநியோகம் போல அடியார்க்கு ஆட படுத்தினான்..ராஜா மாலையை மகிஷிக்கும் யானைக்கும் போடுவது போல..எடுத்து விநியோகிக்க சக்தனும் அவன்.தனக்கும் பிறர்க்கும் ஆய இருந்தவரை தனக்கும் அடியார்க்குமாக ஆக்கினான்..சரீரத்துக்கு -விபூதிக்கு கைங்கரயம் பிராட்டிக்கும் ஆழ்வார் ஆச்சர்யர்களுக்கும். ராவண சிசுபாலருக்குமா ? அவர்களும் பகவத் சேஷத்வ க்ஜானம் இருந்தால் பண்ணலாம்..இருந்தால் பிரகலாதனும் விபீஷணனுமாய் ஆவார்கள்..

/உற்றதும் உன் அடியார்க்கு அடிமை ..மற்றும் ஓர் தெய்வம் உள்ளது என்பார்க்கு ஒற்றிலேன்..நின் திரு எட்டு எழுதும் கற்றதும் தெரிந்து கொண்டேன்..

நம் பிள்ளை நஞ்சீயர்-அல்லி கமலக் கண்ணனாக இருப்பான் பாகவத பிரபாவம் கேட்க்க கேட்க தனித்து உபகாரம் இந்த ஆட படுத்தின உபகாரம் ..யூயம்  இந்தரிய கின்கராக–இருந்த என்னை….முதல் நிலைக்கு மாற்றினது பிரான் ..பேர் உதவி இது ..ராம தூதன் ராம தாசன் சீதையால் வந்த  உபகாரம் போல ..சுவையன் திருவின் மணாளன் ராசிக்க பூர்த்தி கற்று கொள்ள பிராட்டி வேணும் …நமசில் தாத் பர்த்யார்தம் தேறிய கருத்து ஆழ்ந்த பொருள்.. எனக்கு நான் அல்ல நீயே உபாயம்.. ஆழ்ந்த கருது உனக்கே உனது திரு வடிக்கே உனது பாகவதர்களுக்கே போல

விமலன் நித்ய நீர் தோஷன்..தான் குற்றம் இல்லாதவன் பக்த முக்த வைலஷ்ன்யன்..விண்ணவர் கோன்-என்பதால் நித்ய வைலஷ்ன்யன்.

எட்டா நிலத்தில் இருகிறவன் இல்லை இவன்.விரையார் பொழில் வேங்கடவன்..விரையார் பொழில் வேங்கடவன் பரிமளதால் வடிவு கொண்டது போல -கந்தம் கமழும் குழலி போல சர்வ கந்தனுக்கும் கந்தம் தரும்..கண்ணாவான் –மண்ணோர்க்கும் விண்ணோர்க்கு -இருள் தரும் மா இடத்தில குன்றத்தில் இட்ட விளக்கு..நித்தியரும் ஏதோ ரூபத்துடன் இருக்க ஆசை .எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே –.கட்டு பிரசாதத்தில் உள்ள எறும்பு போல…ஸ்ரீ வைகுந்தம் விட ஆனந்தம் இங்கு..

மூலைக்கும் திருவேங்கடம்  ஆழ்வார் திரு நகரில்.. மழை பெய்வது நிக்காதுஅனுக்ரக மழை வாக்கு ஆகிற ஆறு பெருகும் ..அவன் நாம் தேவர் என்று அஞ்சினமோ ..ஸ்வாமித்வம்-கோன்  சௌலப்யம்-வேங்கடவன்..சௌசீல்யம் அடுத்து சொல்கிறாள்.. திரு நெடும் தாண்டகம் ௨௧ கண்டும் அவரை நான் தோழி என்றுஅஞ்சினாள்.நிமலன்-ஈஸ்வர மறைத்து குறும்பு அறுத்த நம்பிக்கு அருளியது போல-சௌசீல்யன்-அர்ச்சக பராதீனன்..அபராத சக்கரவர்த்தி ஆக இருந்தாலும் குற்றம்  பார்க்காதவன் வாட்சல்யன்  -நின் மலன்..குற்றங்களையே குணமாக கொள்பவன் அவிக்ஜாதா -குற்றம் அறியாதவன்.. நல்லார் அறிவீர் ஈதே அறியீர் -கலியன்

விமலன் தொடக்கி ஐந்து பதங்களாலே நாராயண சப்தத்தில் – உபாய பிராப்யத்வம் .வழி /பொருள் /உபய லிங்கம் /உபய விபூதி நிர்வாகத்வன்/நிகரில் புகழாய் ..திரு வேங்கடதானே – நான்கு குணங்களையும் அருளியது போல..நிகரில் புகழாய் -வாத்சல்யம் /உலகம் மூன்று உடையாய் -ஸ்வாமித்வம் /என்னை ஆள்வானே சௌசீல்யம்/ திரு வேங்கடத்தானே சௌலப்யம்..நான்கு குணங்களும் நாராயண பூர்வ வாக்யத்தின் அர்த்தம் ..அர்த்தம்  சக்தி கஜான  பிராப்தி பூரணன் தன பேராக செய்கிறான் -உத்தர வாக்ய அர்த்தம்

ஆய -கைங்கர்ய பிரார்த்தனை-நீதி வானவர் -தெரிந்து கைங்கர்யர் பண்ண -அநீதி மன்னவர்கள் நாம்..மிதுனத்தில் கைங்கர்யம்..இதுவே  நாம் செய்யும் பிரதி சம்பாவனை..முன் சொன்ன உபகாரங்களுக்கு..-பண்ணா விடில் சொரூப நாசம்..வான் =சூரிகள் உள்ள பரம பதம் நீதி =முறை அறிந்த அவன்=வர்த்திக்கும் அவன்..கலக்குவாரும் கலங்குவாரும் இல்லை..தேர் ஒட்டி தூது போய் -இந்த அநீதி அங்கு இல்லை ராமனும் விசவா மித்ரருக்கு கைங்கர்யம் செய்தான் இங்கே…ஹிரண்ய கசிபு தன்னையே  பரமேஸ்வரனே  என்று சொல்வதும் இங்கே..தும் மே அகம் மே -நான் உனக்கு  அடிமையாக இருப்பதாக வாவது கொள்  என்று சொல்வதும் அங்கு இல்லை/ராமனையும் சரணாகதி பண்ண சொல்லிய ஊர்

நீள்  மதிள் அரங்கத்து அம்மான் -நாம் கண் கொண்டு சேவிக்க -எல்லோருக்கும் விஷயம் ஆக..செல்வ விபீடணனுக்கு வேராக நல்லான் போல தனித்து  பரிவு.. என் கண் பாசம் வைத்தவன் ..கலங்கா பெரு நகரம் =அயோத்யா..சேஷித்வத்தின்  எல்லையில் /பாரதந்த்ரியத்தின் எல்லை /ஸ்வதந்திர சுவாமி  =அம்மான் /நீர்மைக்கும் மேன்மைக்கும் எல்லை -அரங்கத்து அம்மான் /கோனாரை அடியேன் ஆழ்வார் அருளியது போல அப்பால் அளப்பரிய ஆரமுது -வைகுண்ட நாதன் அரங்கம் மேய அந்தணனை -கலியன் அருளியது போல

திரு பாதம் புனிதம் கமலா பாதம்  இனிமை /திருவுக்கு லீலா கமலம் போல /திருவான பெரிய பிராட்டிக்கு போக்யமான பாதம்/பற்றினவரை புனிதம் ஆக்கும்

வந்து-ஒன்றும் பண்ணாமலே தானாக வந்து /தாயார் பிள்ளையை அணைத்துக் கொள்ள வருவது போல அவளுக்கு ஆனந்தம் /விலகி ஓடினாலும் விடாமல் வந்து

என் கண்ணில் உள்ளன உக்கின்றதே -நாலாக பிரித்து-பிரம்மா விஷயம் ஆகாத கண்கள் என்-கண்ணில் மனசால் உணர்ந்து  அறிய முடியும் ஆனால் கணுக்கே பிரத் யஷம் ஆனாரே /உள்ளன-சேவை சாததித்து போக வில்லை..தீர்த்தம் பிரசாதிக்குமா போலஇல்லை//பேரென் என்று நெஞ்சு நிறைய ஆழ்வாருக்கு இருந்தது போல ஒக்கின்றதே -அது என்னை தேடி வந்ததே என்று ஆச்சர்யம் படுகிறார்

துவயத்தின் சுருக்கம் -அரங்கத்து அம்மான்  திரு கமல பாதம் /பூர்வ -உபாயம்/உத்தர பிராப்யம் கைங்கர்யம் பண்ண போக்யத்வம் /இரண்டையும் காட்ட திரு கமல பாதம் என்கிறார்

பதினாறு அர்த்தம்..சந்திரன் கலைகள் போல /ராமன் இடம்  இவை வந்ததே இவரை ஆராதித்து பெற்றது தான் /பெருமாள் அவர்/பெரிய பெருமாள் இவர்/அமலன்/ஆதி/பிரான்/ அடியார்க்கு என்னை ஆட படுத்த விமலன் பரா காஷ்டை காட்டி கொடுத்தான் /மோட்ஷ பிரதத்வம்/ஜகத் காரணத்வன்/ மற்றும் சர்வ உபாகாரன் -மோட்ஷம் தனித்து அருளியது உபநிஷத் வாக்கியம் படி..யத் பிராந்தி   அபி சம் விதந்தி போல/எய்தற்கு அறிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தார் இவரோ பத்து  பாசுரங்களால் அருளினார்..

ஸ்ரிய பதி யின் பரா காஷ்டை ..இத்தால் வெளி இடுகிறார்..அடியார்க்கு என்னை ஆட் படுத்தினது சார தமமான உப காரம் ..சஞ்சயன் ரூபம் அத்த அற்புதம் என்று சொல்லியது போல..விஸ்வரூபம் காட்டினது ..நித்ய நிர் தோஷம் -விமலன் தான் தோஷம் அற்றவர் ..6 நித்ய சூரி நிர்வஹதவன் =விண்ணவர் கோன்..நித்ய விக்ராகத்தவன்..கோனை அனுபவிகிரார்கள் ..7  8 வேங்கடவன் / சர்வ சுலபன் சௌசீல்யன் வாட்சல்யன் /கைங்கர்ய உதேசயம் நீதி வானவன் ..ஸ்தான விசேஷம் நீள் மதில் அரங்கத்து அம்மான் சர்வ ஸ்வாமித்வம் திரு பாவனம் கமல போக்யத்வம் .வந்து அநாசய மாக பெற்றேன் ..பதினாறும் சொல்கிறார் ..அடுத்துஅனைத்துக்கும்  எல்லை நிலமும் சொல்கிறார்..

1-அமலன்–பெரிய பெருமாளோ சர்வ லோக மகேஸ்வரன் ..சீமா பூமி =எல்லை நிலம்..சம்சார நிவர்திகத்வ காஷ்டை -மோட்ஷம் தருபவன்..களை அற்ற கைங்கர்யம் கொடுப்பது  ..அடியார் குழாம் உடன் சேர்ந்து பிரீதி கார்ய கைங்கர்யம் ..அதுவும் அவன் ஆனந்தத்துக்கு பண்ணுவது ..அது தான் களை அற்ற கைங்கர்யம்..சரீரம் விட்டு புறப் பட்ட பின்பு செய்வதில் இதுவே எல்லை நிலம்..மற்றை நம் காமங்கள் மாற்று –நம சப்தத்தின்-அர்த்தம் பிரபல விரோதி ..துவத்தில் உள்ள நம சப்தத்தின் அர்த்தம் இதுவே அசித் போல இருக்கணும்..சித் கூட அசித் போல இருக்கனும் சரண கதி பண்ணும் போது சித் …அவன் ஆனந்த படனும்..அந்த முக மலர்ச்சி பார்த்து ஆனந்த படலாம் ..வைதேகி தும் அகம் -என்று மூவரும் ஆனந்த படும் இடத்தில கட்ட சொன்னதும் சொரூப நாசம் ஹானி என்று லக்ஷ்மணன் ..உன் தன திரு வுள்ளம் -வேய் மறு தோளினை காலை பூசல் பதிகம் ..பசலை நோய் பார்த்து பிரிந்தோம் என்று பெருமாள் நினைக்க /அன்யோன்யம் ..சேர்ந்து இருந்தே பேசிகொள்கிறார்கள் ..இடைப் பிள்ளை தர்மம் மாடு மேய்ப்பது தான் ..வேறு காரணம் தாயார் விதி.. சிரித்தார் ஆழ்வார்..ஒருத்திக்காக -வூட போவது இல்லை குலசேகர்  போல ..அவளுக்கும் மெய்யன் இல்லை ..அவளையும் கூட்டி வந்து என் உடன் இரு ..2-9 எம்மா வீடு ..தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே..இரட்டை பரம பத சோபனம் பாம்பு ஒத்தை ம :

2- ஆதி–காரண காஷ்டை -ஆதி -முதல் காரணம்..எல்லாம் தான் இட்ட வழக்கு..

3-அமலன் ஆதி–சரண்யதுவதில் காஷ்டை தன்னை  ஒழிய மற்றவரை சரண் அடைய வேண்டாத படி புகலாக இருப்பது.வாணன் -சிவன் ..எங்கு சுத்தி  திரிந்தாலும் தஞ்சம் இவனே ..மார்கண்டேனும் கரியே.உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்

4-பிரான்-உபகாரத்வ காஷ்டை -ஒன்றும் பச்சை இடாது இருக்க- அபராதமே சமர்ப்பித்து இருந்தாலும் நானா வித அபசாரமும் பண்ணி அவன் இடம் -இல்லாதததை கொடுத்து-பாப கூட்டம் – பெறுதல் -மடி மாங்காய் இட்டு ..பொன் வாணியன் ஒத்தி எடுத்தி கொள்வது போல..என் அடியார்க்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய் ..ஊரை சொன்னாய் பேரை சொன்னாய்..

5-அடியார்க்கு என்னை ஆட படுத்த -அனைத்தையும் கொடுத்து மீண்டும் கொடுக்க ஒன்றும் இல்லை என்று கடன் பட்டவன் போல கலங்குவான்  -ஆபத்தில் புடவை சுரந்தது  திரு நாமம் இறே..சத்யா வாக்யமும் விட்டு கொடுத்து அனைத்தையும் பண்ணினாலும் வருந்தினான் -நித்ய ரினயாய் -கடன் பட்ட நெஞ்சம் போல கலங்கினான் .தாயார் குனிந்து இருக்க பட்டார் சொன்னகாரணம்

6.பிரான் …கிருபை காஷ்டை -சத்ருவின்  சம்பந்திகளும் த்யாஜம் -விபீஷணன் -பரிவர் முன் -சுக்ரீவன் -சத்ருவே வந்தாலும் அங்கீ காரம் பண்ணுவேன் என்றான் ..ராட்சச குலமேவாழும்…அவர்களும் கை கொள்ளும் படி ஆக்குதல்

7..ச்வாதந்திர காஷ்டை செருக்கு ..ஆனையும் அரசும் செய்யும் அவை ஆராய முடியாது தென் ஆனாய் -நாலு யானை அவன் ..தன்னையும் பிறரையும் கேள்வி கேட்க முடியாத இடத்தில வைப்பான் ..யானைக்கும் அருளினான் பிரமனும்  வெள்கி நிற்ப..அடி நாயேன் ..லகு சம்ப்ரோஷ்ணம் -பட்டர்..தேர் ஒட்டியே- கழுத்தில் ஓலை கட்டி- தூது நடந்தது ஆழி கொண்டு இரவி மறைத்தது வெண்ணெய்க்கு ஆடினது .மலங்க விளித்து இடை பெண்களுக்கு பயந்து கண்/ சொல் அடி பட்டு எள்கி நிற்கிற நிலை.

8..விமலன்   நித்ய நிர் தோஷதவ காஷ்டை தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் ..சாது மாணிக்கம் என்கோ.. சம்சாரம் சேறு ..அது இது உது என்னாலாவது..உன் செய்கை என்னை நைவிக்கும் ..பார்த்த சாரதி  பாண்டவ தூதன்

9..விண்ணவர் கொண் ச்வாமித்வ காஷ்டை -கோவில் திரு அரங்கம் சுவாமி =ராமானுஜர் தான் ..விபூதிமான்கள் அனைவரையும் தனக்கு விபூதி யாக கொண்டவன்

10..வேங்கடவன்– சௌலப்ய  காஷ்டை -அகல நினைப்பாரையும் தடுத்து ஆள் கொபவன் இரங்கி வந்து விலக ஒண்ணாத படி எதிர் சூழல் புக்கு கொள்பவன்..இடக் கை வலக் கை தெரியாத கோப குமரர் அனைவரையும் சேர்த்து கொள்பவன்

11-நிமலன்..சௌ சீலய காஷ்டை ..தன பக்கல் சன்கீர்ப்பார்க்கும் வெளி இடுவாருக்கும் பதில் சொல்லி கலப்பவன் சிசுபாலனுக்கும் மோட்ஷம் .பரி மாற்றம்

12..நின் மலன்..வாத்சல்ய காஷ்டை–பிராட்டி பிரித்த பாபியின் தம்பி -அந்தரங்க்ராய் இருப்பாரும் விரோதி பேரில் ஆயிரம் கோடி குற்றம் காட்டினாலும் அநாதாரிக்காமல்..

13..நீதி வானவன் –பிராப்யத்தின் எல்லை நிலம் காஷ்டை..தண்ணீரில் தாகத்தை அடக்கும் தன்மை -ரசம் அவன் தான்..

14-நீள் மதிள் அரங்கத்து-ஆஸ்ரித பஷ பாதித்தவ காஷ்டை ..கண்ணன் சொன்னதையும் ராமன் நடந்ததையும் பார்த்து பண்ணனும் -யானை காத்து யானை கொன்று/ கல்லை குடை கல்லை பெண்ணாக /சரணம் என்று  சொன்னால் போதும்..சத்ய சங்கல்பன் ஆஸ்ரித சங்கல்பம் விரோதிதால் .தூணில் தோன்றி பீஷ்மர் வாக்கியம் மெய்யாக்கி

15–கமல பாதம் – போக்யத்வ காஷ்டை ..ஆரா அமுது ..நிரதிசய

16-வந்து –அயத்வ பிரத்யன காஷ்டை–பத சலனம்கால் கூட எடுத்து வைக்க வேண்டாத படி  தென்றலும் பரிமளமும் வந்தால் போல -வந்தது விலக்க ஒண்ணாத படி

கண்ணுள் உள்ளன .தடுக்க முடியாத படி..

திரு பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: