ஸ்ரீ திரு விருத்தம்
அழல் போல் அடும் சக்கரத்து அண்ணல் -3
திண் பூஞ்சுடர் நுதி நேமி அம் செல்வர் -9
ஈர்கின்ற சக்கரதெம் பெருமான் கண்ணன் -12
அருள் ஆர் திரு சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் -33
சிதைகின்றது ஆழி என்று ஆழியைச் சீறி -34
பரிதி வட்டம் போலும் சுடர் ஆழிப் பிரான் -73
கைய பொன் ஆழி வெண் சங்கோடும் காண்பானவா வுவன் நான்
மைய வண்ணா !மணியே !முத்தமே ! என் தன மாணிக்கமே . -84
ஆழி சங்கம் படைக் கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக்க
அலர்ந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே ? 86
திருமால் உரு ஒக்கும் மேரு .அம் மேருவில் செஞ்சுடரோன் திருமால் திருக் கைத் திருச் சக்கரம் ஒக்கும்
அன்ன கண்டும் திருமால் உருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர் திருமால்
தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே ? 88
அசுரர் குழாம் தொலைப் பெய்த நேமி எந்தாய் ! 90-
——–
ஸ்ரீ பெரிய திருவந்தாதி
அன்றே நம் கண் காணும் ஆழியான் கார் வுருவம் இன்றே நாம் காணாது இருப்பதுவும் 28
வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர் வலிய முடி இடிய வாங்கி வலிய நின்
பொன் ஆழிக் கையால் புடைத்திடுதி கீளாதே பல் நாளும் நிற்கும் இப்பார் 41
அன்று திருச் செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும் பருச் செவியும் ஈர்ந்த பரன் 63
சூட்டாய நேமியான் தொல் அரக்கனின் உயிரை மாட்டே துயிர் இழைத்த மாயவனை 66
அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை சுடர் கொள் சுடர் ஆழியானை இடர் கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே யாதாகில் யாதே இனி ? 70
கணை நாணில் ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நல் நெஞ்சே ! ஓவாத ஊணாக உண் 78
ஆழி அம் கைப் பேர் ஆயற்கு ஆளாம் பிறப்பு 79
கரந்துருவின் அம்மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழி அம் கை அம்மானை ஏத்தாது அயர்த்து 82
கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான் பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான்
சீர் கலந்த சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை என் நினைந்து போக்குவர் இப்போது ? 86
இப்போதும் இன்னும் இனி சிறிது நின்றாலும் எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே !எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் மொய் கழலே ஏத்த முயல் . 87
—————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply