ஸ்ரீ திரு நெடுந் தாண்டகம்
மன்னர் மாள வடிவாய மழு வேந்தி -7
வில் இருத்து மெல் இயல் தோள் தோய்ந்தாய் என்றும் …..மா கீண்ட
கைத் தலத்து என் மைந்தா ! என்றும் -13
தேராளும் வாள் அரக்கன் செல்வம் மாளத் தென் இலங்கை முன் மலங்கச் செந்தீ ஒல்கி
போராளன் ஆயிரம் தோள் வாணன் மாளப் பொறு கடலை அரண் கடந்து புக்கு மிக்கபாராளன் -20
மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இருபாடு இலங்கி யாட
எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே
அவ் வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி !அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே -21
இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம் ! இலங்கு ஒலி நீர் பெரும் பௌவம் மண்டி உண்ட
பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம் ஒரு கை மற்று ஆழி ஏந்தி உலகுண்ட
பெரு வாயர் இங்கே வந்து என் பொரு கயல் கண் நீர் அரும்ப புலவி தந்து புனல் அரங்கம் வூர் என்று போயினாரே -24
கொடுஞ்சிலை வாய்ச் சரந்துரந்து குலங்கள் ஐந்து வென்றானை -29-
——-
ஸ்ரீ திரு வெழு கூற்றிருக்கை
ஒரு சிலை ஒன்றிய யீர் எயிற்று அழல் வாய் வாளின் அட்டனை
ஏழ உலகு எயிற்றினில் கொண்டனை
சுடர் விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண !
———–
ஸ்ரீ சிறிய திருமடல்
கையதுவும் சீரார் வலம் புரியே என்றாள் 22
தன சீதைக்கு நேராவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை கூரார்ந்த வாளால் கொடி மூக்கும் காதிரண்டும்
ஈராவிடுத்து அவட்கு மூத்தோனை வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர்வாய் வாரார்
வன முலையாள் வைதேவி காரணமா ? ஏரார் தடம் தோள் இராவணனை ஈர் ஐந்து சீரார் சிரம் அறுத்து
செற்று உகந்த செம் கண் மால் போரார் நெடு வேலோன் பொன் பெயரோன்
ஆகததை கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு 39-43-
——–
ஸ்ரீ பெரிய திருமடல்
முடிகள் பத்தும் புரளச் சரம் துரந்து தென் உலகம் ஏற்றுவித்த சேவகனை பின்னோர் அரி வுருவமாகி
எரி விழித்து கொல் நவிலும் வெஞ்சமத்தே கொல்லாதே வல்லாளன் மன்னு மணி குஞ்சி பற்றி வர
வீரத்து தன்னுடைய தாள் மெல் கிடாத்தி அவனுடைய பொன் அகலம் வள்ளுகிரால் போழ்ந்து
புகழ் படைத்த மின் இலங்கும் ஆழிப் படைத் தடக் கைவீரனை 99-103
பின்னும் ஓர் ஏனமாய் புக்கு வளை மருப்பில் கொல் நவிலும் கூர் நுதி மேல் வைதேடுத்த கூத்தனை 104
கொல் நவிலும் ஆழிப் படையானை 125
கல் நவில் தோள் காளையை கண்டு ஆங்கு கை தொழுது 134
தாடகையை மா முனிக்காத் தென் உலகம் ஏற்று வித்த திண் திறலும் 147-
————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply