திவ்ய பிரபந்தத்தில் திவ்ய ஆயுதங்கள்-பேய் ஆழ்வார் ..

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் செருக் கிளரும் பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன் என் ஆழி வண்ணன் பால்இன்று -1

ஆர் ஆழி கொண்டார்க்கு அழகு -5

அழகன்றே ஆழியார்க்கு -6

வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேர் ஓத நலம் புரிந்து சென்று அடையும் நெஞ்சு -10

தேசுடைய சக்கரத்தான் சங்கினான் சார்ந்கத்தான் -21

பொருந்தும் சுடர் ஆழி ஓன்று உடையான் சூழ் கழலே நாளும் தொடர் ஆழி நெஞ்சே தொழுது -24

கைய கனல் ஆழி கார் கடல் வாய் வெண் சங்கம் வெய்ய கதை சார்ங்கம் வெஞ்சுடர் வாள் செய்ய படை பரவை பாழி பனி நீர் உலகம் அடி அளந்த மாயவர் அவர்க்கு -36

மூரிச் சுரி ஏறு சங்கினாய் ! -49

ஆங்கை திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் -67

அரணாம் நமக்கென்றும் ஆழி வலவன் முரனாள் வலஞ்சுளித்த மொய்ம்பன்-78

வென்றிலங்கும் ஆர்படுவான் நேமி அரவணையான் -80

தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான் அட்ட புய கரத்தான் அஞ்சான்று குட்டத்துக் கோள் முதலை துஞ்சக்  குறித்து எறிந்த சக்கரத்தான் தாள் முதலே நம் கட்குசார்வு -99

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண் துழாய் தார் வாழ் வரை மார்பன் தான் முயங்கும் -காரார்ந்த வானமரு மின்னிமைக்கும் வண் தாமரை நெடுங்கண் தேன் அமரும் பூ மேல் திரு -100

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் செருக் கிளரும் பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன் என் ஆழி வண்ணன் பால்இன்று -1

பேய் ஆழ்வார் திரு வடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: