ஸ்ரீ திரு விருத்தம் -4..

அவதாரிகை..
இமையோர் தலைவா என்னும் படியே நித்ய விபூதியை காட்டி கொடுக்கையாலே ,
அங்கு உள்ள பதார்த்தங்கள் ஸ்மாரகமாய் நலிகிற படியை சொல்லுகிறது ….

ஸ்ரீ திருவடி ஸ்ரீ துளசி போல்வனவும் காற்றுடன் சேர்ந்து ஸ்ரீ எம்பெருமான் நினைவை மேலும் அதிக படுத்துகின்றன

தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது தண் அம் துழாய் க்கு
இனி நெஞ்சம் இங்குக் கவர்வதியாம் இலம்
முனி வஞ்ச பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்
பனி நஞ்ச மாருதமே எம்மதாவி பனிப்பு  இயல்வே

பதவுரை

தனி நெஞ்சம்–(என்னோடு) உறவற்று நீங்கிய (என்) மனம் முழுவதையும்
முன்–முன்னமே
அவர் புள்ளே–அப்பெருமானுடைய கருடப் பறவையே
கவர்ந்தது–(பிறர்க்கு மிச்சமில்லாதபடி) கவர்ந்து கொண்டு போயிற்று.
(ஆதலால்,)
தண் அம் துழாய்க்கு–(அப்பெருமானுடைய) குளிர்ந்த அழகிய திருக் குழாய்க்கு
கவர்வது–கவர்ந்து கொண்டு போவதற்கு உரியதான
நெஞ்சம்–வேறொரு நெஞ்சை
இனி இங்கு யாம் இலம்–இனி இவ்விடத்தில் யாம் உடையோ மல்லோர்,
(அப்படியிருக்க.)
முனி–கோவிக்குத் தன்மையுள்ள
வஞ்சம் பேய்ச்சி–வஞ்சனையையுடைய பேய் மகளான பூதனையினுடைய
முலை–(விஷந்தடவின) முலையை
சுவைத்தான்–(பசையற) உருசி பார்த்து உண்ட கண்ணபிரானுடைய
முடிசூடும் துழாய்–திருமுடியில் சூடப்பட்ட திருத்துழாயினது
பனி நஞ்சம் மருதமே–குளிச்சியை யுடைய விஷம் போன்ற காற்றே!
நீ நடுவே–நீ இடையிலே (புகுந்து)
எம்மது ஆவி பனிப்பு–(ஏற்கனவே நோவு பட்டிருக்கிற) எம்முடைய உயிரை மேலும் நடுங்கச் செய்வது
இயல்பே–(உனக்குத் தக்க) இயற்கையோ? (தகாது.)

தனி நெஞ்சம்–
பாத்யத்தின் அளவு அன்றிக்கே பாதகம் இருந்த படி..

முன்னவர் புள்ளே கவர்ந்தது–
ஸ்ரீ திருவடி மேலே இருக்கிற இருப்பிலே தோளின் மாலை யுடன் அணைக்க காணும் ஆசைப் படுகிறது ….
அவ்வளவும் கிட்டுவதற்கு முன்னே ஒரு திருவடி வழி பறித்து கொண்டபடி..

புள்ளே —
சஜாதியருக்கும்  வையாது ஒழிந்த படி ஈடு பட்ட படி.

கவர்ந்தது–
தனக்கும் அரை வயிறாய் இருந்த படி

முன்–
திரு துழாய் க்கு முன்னே திருவடி முற் பட்ட படி

தண் அம் துழாய்க்கு–
குளிர்ந்த திரு துழாய்க்கு

இனி நெஞ்சம் —
மரம் போல திமிர்த்து -ஸ்திரமாக -உறுதியாக-இருந்தாலும் ஆவது உண்டோ ?
ஓர் அடி முற்பட பெற்றதில்லை ..ஒப்பூணாக உண்ணலாயிற்று..உங்கள் அபேஷிதம் இல்லை .

இங்கு —
விளக்கு ஏற்றி காட்டுகிறாள்

யாம் இலம்—
ஸ்ரீ திருவடி பாடே போம் இத்தனை ..
பாவியேன் பல் நெஞ்சம் படைக்க பெற்றிலேன் ..
ஸ்ரீ தண் அம் துழாய்க்கு கவர்வதான நெஞ்சத்தை யாம் இனி இங்கு உடையோம்அல்லோம்

நீ நடுவே —
ஸ்ரீ திரு துழாய் ஆழ்வார் மரம் போலே திமிர்த்து -ஸ்திரமாக -உறுதியாக-இருந்தார் என்று பார்த்து
அவ் அளவிலே கால் கடுகி வந்தது ..அசாதாரனர் பட்டினி விடா நிற்க உனக்கு என் ?-என்கிறாள்.
அங்கு சம்பந்தம் உண்டாதல் அன்றியே நடுவே

முனி வஞ்ச பேய்ச்சி–
முனிவையும் க்ருத்ரிமதையும் உடைய பூதனை

முலை சுவைத்தான்–
தன் நாவில் பசை கொடுத்து சுவைத்தான் –
” பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி  பெருமுலை ஊடு உயிரை வற்ற வாங்கி உண்ட வாயான் “-பெரிய திரு மொழ (1-2-1)

முடி சூடு துழாய்–
அத் தலையில் உள்ளதை கொண்டு வந்து வாயு பிரேரிகிறபடி..
சஹ்யத்தில் நீரை ஆகாசத்தில் முகந்து நின்று இரைக்குமா போலே , திரு துழையை முடித்து வந்து  போலே காணும் .
பூதனையை முடித்து ..திரு அபிஷேகத்தில் துழாய் என்று அறிந்த படி என் தான் !

பனி நஞ்ச மாருதமே —
குளிர்ந்த காற்று அகவை நஞ்சே இருக்கிற படி ..சென்று அற்றறுகிற படி ..

எம்மதாவி–
பாதகங்களில் கையில் அகப்பட்டு அவேசிஷித்த பிராணன் .

பனிப்பு  இயல்வே–
நடுக்குகை ச்வாபாவமே..
விசஜாதியர் செய்யும் சஜாதியமான நீ –அடியார்கள் குலம்– நீ செய்யக் கடவையோ..

——————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: