ஸ்ரீ திரு விருத்தம் -3..

அவதாரிகை..
கீழிற் பாட்டில் பிரிவின் உடைய பிரதம அவதி ஆகையாலே தன் உடைய தசையை ஸ்த்ரீத்வத்தாலே ஒளித்தாள் ;
அங்கன் இன்றிக்கே தோழிக்கு சொல்லி தரிக்க வேண்டும்படிக்கு ஈடான தசாவிபாகத்தாலே
” அவன் பின்னே போன நெஞ்சானது வருமோ ? அங்கனே போமோ ? என்று தோழியை கேட்கிறாள்

வெட்கம் காரணமாக நேரடியாக சொல்லாமல்,தோழி கூறுவது போல் உரைத்தாள்….
தோழி இடம் மனம் விட்டு பேசினால் மட்டும் தரிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டதால் இப்படி கேட்கிறாள்

குழல் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும்
நிழல் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண்அம்துழாய்
அழல் போல் அடும் சக்கரத்து அண்ணல் விண்ணோர் தொழ கடவும்
அழல் போல் சினத்த அப் புள்ளின் பின் போன தனி நெஞ்சமே..3..

பதவுரை

தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய திருத் துழாயை யுடையவனும்
அழல் போல் அடும் சக்ரத்து–(அஸுர ராக்ஷஸர்களை) நெருப்புப் போல் அழிக்கின்ற திருவாழியை யுடையனுமான
அண்ணல்–எம்பெருமான்
விண்ணோர் தொழ கடவும்–மேலுலகத்தவர் வணங்கும்படி ஏறி நடத்துகிற
தழல்போல் சினத்த–பள்ளின் பின்போன
(பகைவர் நிறத்தில்) நெருப்புப் போன்ற கடுங்கோபத்தையுடைய அக்கருடாழ்வானது பின்னே சென்ன
தனி நெஞ்சம்–(எனது) தனிப்பட்ட மனமானது
குழல்கோவலர்–புல்லாங்குழலை யுடையரான இடையரது
மடம் பாவையும்–குணவதியான மகளாகிய நப்பின்னைப் பிராட்டியும்
மண் மகளும்–பூமிப்பிராட்டியும்
திருவும்–பெரிய பிராட்டியும்
நிழல் போல்வனர்–(எம்பெருமானுக்கு) நிழல் போலேயிருக்க அவர்களை
கண்டு நிற்கொல்-பார்த்துக் கொண்டு (அவ்விடத்தை விடாதே) நிற்குமோ?
மீளும் கொல்–திரும்பி வருமோ?

குழல் கோவலர் மடப்பாவை–
குழலை உடைய கோவலர் என்ற படி..புல்லாம் குழல் ஊதும் இடையர்கள்
நப்பின்னை பிராட்டி ஷமை தான் ஒரு வடிவாய் இருக்கும்..

மண் மகள்–
ஸ்ரீ பூமி பிராட்டி..ஆஸ்ரிதர் குற்றத்தை பொருப்பிக்கும் பிராட்டி…
குற்றம் காண்பான் என் ? பொறுப்பான் என் ?  என்று இருக்கும் ஸ்ரீ பூமி பிராட்டி..

திருவும்
பெரிய பிராட்டியார்  இவனுக்கு சம்பத்தாய் இருக்கும்..அது விளையும் தரை ;
அதனை அனுபவிக்கும் போக்தாவாய் இருக்கும் நப்பின்னை..

நிழல் போல்வனர்..
இவர்கள் மூவரும் அவனுக்கு நிழல் போலே இருப்பார்கள் ..
ஒருவருக்கு ஒருவர் நிழல் போலே இருப்பர்கள் என்றும் ஆம் ..
ஆச்ரயித்தார்க்கு நிழல் போலே இருப்பவர்கள்..

கண்டு நிற்கும் கொல் மீளும் கொல்–
இப் படிகளை கண்டு இதுவே பற்றாசாக தரித்து நிற்குமோ ?
இம் மேன்மையை கண்டு  கடலில் துரும்பு போல எழ வீசுமோ ?

தண் அம் துழாய் அழல் போல் அடும் சக்கரத்து அண்ணல்–
குளிர்ந்த பரிமளத்தை உடைத்தான  திரு துழாய்    அளர் போலே துழாய்
(விரக தாபத்தால் குளிர்ந்த திரு துழாயும் சுடுகிறதாம் ) அம் முடியா நின்றுள்ள  திரு ஆழியை உடைய சர்வேஸ்வரன் ..
உபமானம் சொல்லும் போதும்  அவ அருகிட்டு சொல்லும் படி  பகவத் விஷயத்தை அவகாகித்த படி ..
அனுகூல பிரதி கூல விபாகம் இல்லை திரு ஆழிக்கு..அனுகூலர்கேஆய் இருக்கும் திரு துழாய் ..

அண்ணல்..
திரு ஆழி பிடிக்கும் போது பேராத படி பிடிக்கும் இச் செயலாலே என்னை எழுதி கொண்டவன் ..

தழல் போல் சினத்த—
அஸ்தானே பய சந்கிதனாய் கொண்டு கத கத என்னா இருக்கும்

விண்ணோர் தொழ கடவும்–
நித்ய சூரிகள் தொழும் படி பெரிய திரு அடியை நடத்துகிற ..
அவர்கள் தொழுது உளர் ஆவார்கள் ….
அவர்களை தொழுவித்து கொண்டு உளனாம் அவன்

அப் புள்ளின் பின் போன–
தன் இழவு பாராதே அத் தலைக்கு பரிவர் உண்டு என்று கொண்டாடுகிறாள் ..
அவனிலும் அவனுக்கு பரிந்த புள்ளின் பின்னே தன் நெஞ்சு போன படி..
கெண்டை ஒண் கணும் (பெரிய  திருமொழி-11-1-9 )இத்யாதி..
உறங்காத கண்களும்  உறங்கும்..என் நிறம் கல்பதுக்கு முன்புத்த நிறம்  போலே ஆம்..
மிக்க சீர் இத்யாதி….அநந்ய பிரயோஜனர் இட்ட அழகிய திரு துழாயின் பரிமளத்தை  வண்டு கொண்டு வந்து
ஊதூமாகில் அநந்ய பிரயோஜனர் என்பான் என் என்னில் அத் தலைக்கு பரிவார் உண்டு என்று தான் தேறுகைகாக..
பரிமளத்தின் வாசி அல்லாதார் இடும் அதில் காட்டில் அறிகையாலே

தனி நெஞ்சம்–
ச்வதந்த்ரமான நெஞ்சு/வேண்டா என்றால் மீள மாட்டாத நெஞ்சு

———–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: