ஸ்ரீ திவ்ய பிரபந்தத்தில் ஸ்ரீ திவ்ய ஆயுதங்கள் -ஸ்ரீ ஆண்டாள் ..

ஸ்ரீ திருப் பாவை

பாழி அம் தோள் உடை பற்ப நாபன் கையில் ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல் வாழ உலகினில்பெய்திடாய் -4

புள் அரையன் கோயில் வெள்ளை விளி சங்கின் பேர் அரவம் கேட்டிலையோ ? -6

செங்கற் பொடிகூறை வெண் பல் தவத்தவர் தங்கள் திரு கோயில் சங்கிடுவான் போதந்தார் …
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக் கையன் பங்கய கண்ணனை பாடேலோர் எம்பாவாய்.. -14

வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி -24

எல்லாம் நடுங்க முரல்வன பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் -26

ஸ்ரீ நாச்சியார் திருமொழி

வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை வேங்கடவற்கென்னை விதிக்கிற்றியே -1-1

ஊன் இடை ஆழி சங்குத் தமர்க் கென்று உன்னித் தெழுந்த என் தட முலைகள் -1-5

சுடர் சக்கரம் கையில் ஏந்தினாய் ! -2-8

வெள்ளி விளி சங்கு இடங்கையில் கொண்ட விமலன் எனக்கு உரு காட்டான் 5-2

அம குயிலே  ! உனக்கு என்ன மறைந்து உறைவு  ? ஆழியும் சங்கும் ஒண் தண்டும் தங்கிய
கையவனை வர கூவில் நீ சாலத் தருமம் பெறுதி 5-7

சார்ங்கம் வளைய வலிக்கும் தடக் கை சதுரன் பொருத்தம் உடையன் 5-8

சங்கோடு சக்கரத்தான் வரக் கூவுதல் 5-9

கருப் பூரம் நாறுமோ ? கமலப் பூ நாறுமோ ? திருப் பவள செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ  ?
மருப்பொசித்த மாதவன் தன வாய்ச் சுவையும் நாற்றமும் விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே 7-1

கடலில் பிறந்து கருதாது பஞ்ச சனன் உடலில் வளர்ந்து போய் ஊழியான் கைத் தலத்திடரில் குடியேறி
தீய வசுரர் நடலைப் படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே 7-2

தடவரையின் மீதே சரற்கால சந்திரன் இடையுவாவில் வந்து எழுந்தாலே போல நீயும்
வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில் குடியேறி வீற்றிருந்தாய் கோலப் பெரும் சங்கே ! 7-3

சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில் அந்தரம் ஓன்று இன்றி ஏறி அவன் செவியில்
மந்திரம் கொள்வாயே போலும் வலம் புரியே ! இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே 7-4

உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண்
மன்னாகி நின்ற மது சூதன் வாய் அமுதம் பன்னாளும் உண்கின்றாய் பாஞ்ச சன்னியமே ! 7-5

போய் தீர்த்த மாடாதே நின்ற புணர் மருதம் சாயத் தீர்த்தான் கைத் தலத்தே ஏறி குடி கொண்டு சேய்த்
தீர்த்தமாய் நின்ற செம் கண் மால் தன் உடைய வாய்த் தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம் புரியே ! 7-6

செம் கமல நாண மலர் மேல் தேன் உகரும் அன்னம் போல் செம் கண் கருமேனி வாசு தேவன் உடைய
அம் கைத்தலம் ஏறி அன்னவசம் செய்யும் சங்கரையா !உன் செல்வம் சால வழகியதே 7-7

உண்பது சொல்லில் உலகளந்தான் வாய் அமுதம் கண் படை கொள்ளல் கடல் வண்ணன் கைத்தலத்தே
பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாற்றுகின்றார் பண் பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே ! 7-8

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப மதுவாயிற் கொண்டாற்போல் மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனை புக்கு நீ உண்டக்கால் சிதையாரோ ?உன்னோடு செல்வா பெரும் சங்கே ! 7-9

பாஞ்ச சன்னியத்தை பத்மா நாபனோடும் வாய்ந்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை
ஏய்ந்த புகழ் பட்டர் பிரான் கோதை தமிழ் ஈர் ஐந்தும் ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும்அணுக்கரே 7-10

பூங் கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும் சார்ங்கவில்  நாண்  ஒலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ ? 9-9

வேத முதல்வர் வலங்  கையில் மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போல சுடாது 10-2

தாம் உகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ ?யாம் உகக்கும் எங்கையில் சங்கமும் ஏந்திளையீர்  ! 11-1

அம் கைத்தலத்திடை ஆழி கொண்டான் அவன் முகத்தன்றி விழி யேன் என்று 12-4

தருமம் அறியா குறும்பனை தன் கை சார்ங்கம் அதுவே போல் புருவ வட்ட அழகிய பொருத்தமிலியை கண்டீரே ? 14-6

வெளிய சங்கு ஓன்று உடையானை பீதக வாடை உடையானை அளி நன்குடைய திருமாலை ஆழியானை கண்டீரே ?
களி வண்டு எங்கும் கலந்தாற் போல் கமழ் பூங்குழல்கள் தடம் தோள் மேல் மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே  14-8-

—————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆண்டாள்  திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: