ஓம் அச்யுதாச்யுத ஹரே பரமாத்மன்
ராமகிருஷ்ண புருஷோத்தம விஷ்ணோ |
வாஸூதேவ பகவன் அனிருத்த
ஸ்ரீபதே ஸமய துக்கமஸேஷம் || – 1
பக்தர்களை கைவிடாதவனே..!
அழிவில்லாதவனே.!
பாபங்களை அபஹரிக்கறவனே.!
பரமாத்ம ஸ்வரூபியே..!
இராமவதாரம் செய்தவனே..!
கிருஷ்ணாவதாரம் செய்தவனே..!
புருஷோத்தமனே..!
எங்கும் நிறைந்தவனே..!
வஸூதேவனுடைய புத்திரனே..!
பகவானே..!
அநிருத்தனே..!
ஸ்ரீயப்பதியே..!
எங்கள் எல்லா துக்கங்களையும் போக்க வேண்டும்..!
விஸ்வமங்கள விபோ ஜகதீச
நந்தநந்தன ந்ருஸிம்ஹ நரேந்த்ர |
முக்திதாயக முகுந்த முராரே
ஸ்ரீபதே ஸமய துக்கமஸேஷம் ||
உலகத்திற்கு மங்களத்தை அருள்பவனே.!
விபுவே..!
இந்த ஜகத்திற்கு நாயகனே..!
நந்தகோபனின் மகனே..!
நரஸிம்ஹ அவதாரம் செய்தவனே..!
மனுஷ்யஸ்ரேஷ்டராக (இராமாவதாரம்) அவதரித்தவனே.!
முக்தியைக் கொடுப்பவனே..!
முகுந்தனே..!
முரன் என்ற அசுரனை அழித்தவனே..!
ஸ்ரீய: பதியே..!
எங்கள் எல்லா துக்கங்களையும் போக்குவாயாக..!
ராமச்சந்திர ரகுநாயக தேவ
தீனநாத துரிதக்ஷயகாரின் |
யாதவேந்த்ர யதுபூஷண யக்ஞ
ஸ்ரீபதே ஸமய துக்கமஸேஷம் ||
ராமசந்திரனே..!
ரகுநாயகனே..!
தேவனே..!
தீனர்களைக் காப்பவனே..!
பாபங்களைப் போக்குபவனே..!
யாதவர்களில் சிறந்தவனே..!
யதுக்களுக்கு ஆபரணம் போன்றவனே..!
யக்ஞ சொரூபியே..!
ஸ்ரீய: பதியே..!
எங்கள் எல்லா துக்கங்களையும் போக்குவாயாக..!
தேவகீதனய துக்கதவாக்நே
ராதிகாரமண ரம்யஸூமூர்த்தே |
துக்கமோசன தயார்ணவநாத
ஸ்ரீபதே ஸமய துக்கமஸேஷம் ||
தேவகியின் புத்ரனே.!
துக்கங்களைனைத்திற்கும் காட்டுத்தீயே..!
ராதிகாவின் ப்ராணநாதனே!
அழகிய மங்கள உருவைக் கொண்டவனே.!
துக்கங்களை அடியோடு போக்குபவனே..!
கருணைக்கடலே..!
நாதனே..!
ஸ்ரீய: பதியே..!
எங்கள் எல்லா துக்கங்களையும் போக்குவாயாக..!
கோபிகாவதன சந்த்ரசகோர
நித்ய நிரகுண நிரஞ்சன ஜிஷ்ணோ
பூர்ணரூப ஜய சங்கர ஸர்வ
ஸ்ரீபதே ஸமய துக்கமஸேஷம் ||
கோபிகைகளின் முகமான சந்திரனுக்கு சகோரபக்ஷியே.!
அழிவற்றவனே..!
நிர்குணனே..!
கர்ம ஸம்பந்தமற்றவனே..!
ஜயசீலனே..!
பூர்ணமானவனே..!
சுகத்தினைக் கொடுப்பவனே..!
எல்லா பொருளாயும் இருப்பவனே..!
ஸ்ரீய: பதியே..!
எங்கள் எல்லா துக்கங்களையும் போக்குவாயாக..!
கோகுலேச கிரிதாரணதீர
யமுனாச்சதடகேலன வீர |
நாரதாதிமுனி வந்திதபாத
ஸ்ரீபதே ஸமய துக்கமஸேஷம் ||
கோகுலத்தின் ஈசனே..!
கோவர்த்தன பர்வதத்தினைத் தாங்கிய தீரனே..!
யமுனையின் பரிசுத்தமானக் கரையில் விளையாடுபவனே..!
வீரனே..!
நாரதர் முதலிய முனிவர்களால் நமஸ்கரிக்கப்பட்ட சரணங்களை உடையவனே..!
ஸ்ரீய: பதியே..!
எங்கள் எல்லா துக்கங்களையும் போக்குவாயாக..!