ஸ்ரீ மண வாள மா முனி வைபவம் ..

அன்னையும் அத்தனும் ஆச்சர்யனும் அனைத்து உறவும்
மன்னிய பேறும் உபாயமும்  தெய்வமும் மற்றும்  மேலாம்
என்னை அளித்த திரு வாய் மொழி பிள்ளை என்று நெஞ்சே !
உன்னி உவந்து திகழ்ந்து சதிர்த்து இனி உய்ந்திடவே..

ஸ்ரீ யதீந்த்ர பிரவணர்–அவர் சாற்றிய திரு நாமம்

வல்லார்கள் வாழ்த்தும் குருகேசர் தம்மை மனத்து வைத்து
சொல்லார  வாழ்த்தும் மண வாள நாயனார் தொண்டர் குழாம்
எல்லாம் தழைக்க எதிராச விம்சதி  இன்று அளித்தோன்
புல்லார் அரவிந்த திரு தாள் இரண்டையும் போற்று நெஞ்சே !..

இவருக்கு – ஸ்ரீ ராமானுச பிள்ளை  திரு குமரர் பிறந்தார்

உத்தமனே உலகாரியனே !   மற்று ஒப்பாரை இல்லா
வித்தகனே  நல்ல வேதியனே ! வண்ண முடும்பை மன்னா
சுத்த நல் க்ஜானியர் நல் துணையே சுத்த சத்துவனே !
எத்தனை காலம் இருந்தது உழல் வேன் இவ் உடம்பு கொண்டே..

ஸ்ரீ ஆழ்வாரும்–செம் கயல் பாய் நீர் திரு அரங்கத்தே சென்று முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ய கடவீர் –

மென் நடை அன்னம் பரந்து  விளை யாடும் வில்லி புத்தூர் உறைவான் தன் பொன் அடி  காண்பதோர் ஆசையினால்

மால் இரும் சோலை மேய மைந்தனை வணங்க திரு உள்ளமாய்

மாட மாளிகை சூழ் திரு விதியும்  மன்னு சீர் திரு விக்ரமன் வீதியும்
ஆடல் மாறன் அகவங்கன் வீதியும் ஆழி நாடன் அமர்ந்து உறையும் வீதியும்
கூடல் வாழ  குலசேகரன் வீதியும் குலவு ராச மகேந்திரன் வீதியும்
தேடு தன்மவன் மாவவன் வீதியும் தென் அரங்கர் திரு ஆவரணமே..

ரகசியம் விளைந்த மண்

இதுவோ பெரும் பூதூர் இங்கே பிறந்தோ
எதிராசர் எம் இடரை தீர்த்தார்  –  இதுவோ தான்
தேங்கும் பொரு நல் திரு நகரிக்கு ஒப்பான
ஓங்கு புகழ் உடைய  ஊர்..

எந்தை எதிராசர் எம்மை எடுத்து அளிக்க
வந்த பெரும் பூதூரில் வந்தோமோ  –சிந்தை
மருளோ தெருளோ மகிழ் மார்பன்
அருளோ இப் பேற்றுக்கு அடி.

ஸ்ரீ யதோத்த காரி சந்நிதியில் ஒரு வருஷ காலம் ஸ்ரீ பாஷ்யம் அருளினார் ..வ்யாக்யான முத்திரை உடன் சேவை ..

ஸ்ரீ சடகோப ஜீயர் பக்கல் துரீ ஆஸ்ரமம் ஸ்வீகரித்தார்

காதம் பலவும் திரிந்து  உழன்றேர்க்கு அங்கு ஓர் நிழ்லும் நீரும் இல்லை  உன் பாத நிழ் அல்லால் 
மற்றோர் வுயர்பிடம்  நான் எங்கும் காண்கின்றிலேன்-வேர் அற்ற மரம் போல பலரும் ஆச்ரயிதார்கள்

போத சிவந்து பரிமளம் வீசி  புது கணித்த
சீத கமலத்தை நீர் ஏற வோட்டி சிறந்து அடியேன்
யேதத்தை மாற்று மண வாள யோகி இனிமை தரும்
பாத கமலங்கள் கண்டேன் எனக்கு பயம் இல்லையே..

பூதூரில் வந்து உத்தித்த புண்ணியனோ
பூம் கமழும் தாதார் மகிழ் மார்பன் தான் இவனோ -தூதூர
வந்த நெடு மாலோ  மண வாள மா முனிவன்
எந்தை இவர்  மூவரிலும்  யார்—ஆயி ஜெகநாத ஆச்சர்யர்..

விசத வாக் சிகா மணி

பெரியாழ்வார் திரு மொழி– 5-1-1 –வியாக்யானம்..

தென் அரங்கர்  சீர் அருளுக்கு இலக்காக பெற்றோம்
தேவன் உறை திரு பதியே இருப்பாக பெற்றோம்
மன்னிய சீர் மாறன் கலை உணவாக பெற்றோம்
மதுர கவி சொல் படியே நிலையாக பெற்றோம்
முன் அவராம் நம் குரவர் மொழிகள் உள்ள பெற்றோம்
முழுது நமக்கு அவை பொழுது போக்காக பெற்றோம்
பிள்ளை ஓன்று தனி நெஞ்சு  பேராமல்  பெற்றோம்
பிறர் மினுக்கம் பொறாமை இலா பெருமையும் பெற்றோமே..

ஸ்ரீ ஆழ்வார்  ,ஸ்ரீ எம்பெருமானார் , ஸ்ரீ ஜீயர் , திரு அடி களே சரணம்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: