ஸ்ரீ சதுஸ்ஸ்லோகி -ஸ்ரீ உ .வே. கார்ப்பங்காடு வரதாச்சார்யர் ஸ்வாமிகள்

 
  அவதாரிகை –
மாத்ரு தேவோ பவ-பெரிய பிராட்டியாரை மாதாவாகவும் -எம்பெருமானை பிதாவாகவும் பஞ்ச சம்ஸ்காரம் பண்ணின ஆச்சர்யரையும்-ஸ்ரீ வைஷ்ணவர்களையும் -பாகவத உத்தமர்களையும் – அதிதியாகவும் –ஆத்ம க்ஷேமம் அடைய நால்வரும் உபகாரங்கள் செய்து அருளுகிறார்கள் அன்றோ –
 

ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை -ஸ்ரீ -பெரியவாச்சான் பிள்ளை என்றும் சொல்வர் -ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த இரண்டு வியாக்கியானங்கள் உண்டு
சாஸ்வதம் –நிலை நின்ற புருஷார்த்தம் –பரம பதத்தில் சென்று சேர்ந்து இருப்பது மட்டும் புருஷார்த்தம் இல்லை –
அடியார் குழாங்களை உடன் கூடி அவர்கள் முக விலாசம் பண்ணும் படி கைங்கர்யம் செய்வதே புருஷார்த்தம்
அடியவர்களுக்கும்- பாகவத சேஷத்வமே -சரம பர்வ நிலை -உடன் கூடுவது என்று கொலோ என்று பாரிப்பதே முக்கியம் –
பாகவத சம்பந்தம் ஆச்சார்யராலே –ஆச்சார்ய சம்பந்தம் எம்பெருமானாலே -அவனை பெறுவது பிராட்டியாலே -ஆகையால் நால்வரையும் சொல்லிற்று
ஸ்ரீ சதுஸ் ஸ்லோகியும் ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னமும் -மூல ஸ்தோத்திரங்கள் -.பரமாச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தார் காட்டி அருளிய படியே பின்பு வந்த ஸ்தோத்திரங்கள் -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னத்தில்–ஆச்சார்யர் -பிராட்டி -எம்பெருமான் -பாகவத உத்தமர்கள் நால்வரையும் ஸ்தோத்தம் பண்ணி
ஸ்ரீ சதஸ் ஸ்லோகியில் தனியாக பிராட்டி பற்றி நாம் அறிய அருளிச் செய்கிறார் -அனைவரும் கிரஹிக்கும் படி
ஸ்ரீ -போன்று சுருங்கியும் இல்லாமல் ஸ்ரீ ராமாயணம் போன்று விரிவாகவும் இல்லாமல் நான்கு ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறார் –

புருஷோத்தம
-தான் மஹநீய விஷயம் -தன் இடம் ப்ரீதி பக்தி செய்ய வேண்டும் -எல்லாம் தன் சொத்து -தான் ஸ்வாமி -ஆத்மாத்மீயங்கள் எல்லாம் அவனது அன்றோ –
தன்னை ஒழிந்த அனைத்துக்கும் தானே ஸ்வாமி -அசையும் பொருள்களும் அசையாத பொருள்களும் எல்லாம் அவன் இட்ட வழக்கு
காந்தஸ்ய
-பிராட்டியின் பெருமையை சொல்லி –
-நித்ய சூரிகள் -திரு அநந்த ஆழ்வான் -பெரிய திருவடி
இவர்கள் அனைவரும் மிதுனத்துக்கு சேஷம் .

ஸ்ரீ
திரு நாமம்
ஸ்ரீ யதே –அனைவராலும் ஆஸ்ரயிக்க படுபவள் -அவளும் அவனை ஆஸ்ரயித்து இருப்பவள் -பத்னி என்ற முறையால் -அனைவரும் அனைத்தும் சொத்து இவளுக்கு பத்னி என்பதால் -உபய விபூதிகளுக்கும் ஸ்வாமிநி-அவன் ஸ்வாமி –
புருஷோத்தமன் நாயகன் என்பதால் -உபய விபூதியும் இவள் சொத்து என்றபடி

அனைவருக்கும் அவனுக்கு சொத்து -விவசாயி போலே ஸமஸ்த பதார்த்தங்களையும் உண்டாக்கி -அளித்து -அழிக்கிறான்-
எல்லாம் அவன் விருப்பத்துக்கு விநியோகம் -எல்லை அற்ற பெருமை -விரோதிகள் ஒன்றும் இல்லை -அதே போலே பிராட்டிக்கும்
பக்தி பிரபத்தி போது -பல பிராப்தி இருவரும் அருளுகிறார்கள் -இதில் சாம்யம் –
தென் ஆச்சார்ய சம்பிரதாயத்தில் ஆதிக்யமும் -சாம்யமும் -சேஷமும் உண்டு –
அவள் கிருபை போல் அவன் இடம் இல்லை என்பதால் ஆதிக்யமும் -ஏற்றமும் –கிருபை கடலாக அவன் இருந்தாலும் கிளப்பி தருபவள் இவள் அன்றோ
கிட்டி கைங்கர்யம் செய்யும் பொழுது உகக்கிறார்கள் இருவரும் -இதில் சாம்யம் –
ஜகத் காரணம் போன்றவை அவனுக்கே தான் -இதில் அடுத்த படி தானே அவள்

தேசிகன் -நான்கு அத்தியாயத்தில் உள்ளது போலே சாம்யம் அனைத்திலும் என்பார் -எல்லா வேதாந்த வாக்கியங்களும் ப்ரஹ்மம் இடம் சேரும் என்பது நுதல் அத்தியாயத்தில் -ப்ரஹ்மமே பலம் என்று சொல்லும் நான்காவது அத்யாயம்
அபிமதமாயும் அநு ரூபமாயும் இருப்பவள் பெரிய பிராட்டி -பரிமளத்தால் புஷ்பத்துக்கு பெருமை போல இவளால் அவனுக்கு பெருமை -உபய விபூதியும் சொத்து என்பதை முதல் ஸ்லோகத்தால் அருளுகிறார்-தாய் முறையால் அனைவராலும் ஆஸ்ரயிக்கப் பட்டும் –பத்னி என்பதால் தானே அவனை ஆஸ்ரயித்தும் இருக்கிறாள் -என்பதால் -ஸ்ரீ சப்தம் முதலில் -சரிர மீமாம்சையில் ஸ்ரீ வேத வியாசர் முதல் அத்தியாயத்தில் அனைத்தும் அவனது சேஷ பொருள்கள் -அவன் விநியோகத்துக்குத் தான் –
ஸ்ரீ காந்தஸ்தே புருஷோத்தம –பணி பதே-சய்யா –ஆசனம் –வாஹனம் –வேதாத்மா -விஹஹேஸ்வரோ –மாயா -ஜெகன் மோஹிநீ-
ப்ரஹ்மே ஸாதி ஸூ ராவ் ரஜஸ்-சத யிதஸ் த்வத் தாஸ தாஸீ கண-ஸ்ரீரித் யேவ ச நாம தே பகவதி-ப்ரூம கதம் த்வாம் வயம்

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோகம் -சுமத்ரா தேவி வாக்கியம் -இளைய பெருமாள் இடம் பெருமாள் கூட —தசரதன் ராமம் வித்தி –
தே காந்த புருஷோத்தம -என்றும் -காந்தஸ்தே புருஷோத்தம -என்றும் இரண்டு நிர்வாகங்கள் –
எங்கும் பெருமாள் இடம் தான் அன்பு உனக்கு -சக்கரவர்த்தி இடம் அன்பு அவர்களுக்கு இல்லை -ப்ரீதி பிதா இடம் எங்கு இல்லை -பெருமாள் தான் சர்வம் –
காட்டுக்குப் போகும் போது சக்கரவர்த்தியை நினைக்கா விடிலும் -உனக்காக சக்கரவர்த்தி இடம் பிரியம் இல்லா விடிலும் –
பெருமாள் விரும்பும் சக்கரவர்த்தியை விரும்பு -என்று ஒரு கருத்து -பிறந்த இடமான திரு அயோத்தியை -தாய் -தந்தை -மூவகை விருப்பம்
காட்டில் போகும் பொழுது ஜென்ம பூமியை பற்றியோ -தாய் தந்தையை பற்றியோ நினைத்து வருத்தம் ஏற்பாடாகி கூடும் -அவனே எல்லாம் என்று கருத்து
ராமோ தசரதன் வித்தி -என்று ஸ்லோக க்ரமம் படி அர்த்தம் கொண்டு பெருமாளே சக்கரவர்த்தி என்று கொள் என்றுமாம் –

பெருமாளை காட்டுக்கு போக சொல்லும் போது இளைய பெருமாள் கோபம் கொண்டார் -சுமந்திரன் தந்தைக்கு என்ன செய்து என்று கேட்டதும் -மம ராகவ-சகல வித பந்து -எனக்கு ஜென்ம பூமி தாய் தந்தை -அனைத்தும் பெருமாளே –
இருக்கும் போதே தகப்பனாக நினைக்காதவன் -இப்போது சொல்வதில் வியப்பு இல்லையே
திராட்ச்சை தேனில் ஊறினது போலே ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்ரீ ராமாயணத்தில் ஆழ்ந்து வியாக்யானம் செய்து அருளுகிறார்
அதே போலே இங்கும் -புருஷோத்தம தே காந்த –
புருஷோத்தம வித்யை அறிந்தோம் ஆனால் புனர் ஜென்மம் பக்தி யோகனுக்கும் இல்லை என்கிறான் ஸ்ரீ கீதையில்
அக்ஷரம் –முக்தர் –ஷரம்–இவற்றோடு வேறுபட்டு
பிரவேசித்து -தரித்து -கைங்கர்யம் கொண்டு உகந்து
வேறுபட்டு -சிறந்த புருஷார்த்தம் -ப்ரீதி காரித கைங்கர்யம் தானே
புருஷன் –உத் புருஷன் –உத்தர புருஷன் -உத்தம புருஷன்
அறிவுடையவன் -அசித்தை விட வாஸி புருஷன்
உத் புருஷன் -சரிர சம்பந்தம் விட்ட முக்தர்
உத்தர புருஷன் -சரிர சம்பந்தம் இல்லாத நித்யர்
இவர்கள் அனைவரிலும் வேறுபட்ட ஸ்ரேஷ்டன் புருஷோத்தமன் –
..அவன் தே காந்த : உனக்கு அன்பனான பதி என்கிறார் -ரூட் அர்த்தமாக -புரு -தர்ம அர்த்த காமம் மோட்ஷம் -அனைத்தையும் வாரி வழங்குபவன்
மண்டோதரி வார்த்தை -பல பிரதானம் பண்ணி அருளும் புருஷோத்தமன் -பெருமாள் என்கிறாள்
ரிஷிகளை ரக்ஷணம் பண்ணி தர்மம் / ஸ்ரீ விபீஷணன் -சுக்ரீவ மஹாராஜர் இருவருக்கும் அரசு அருளி -அர்த்தம் /வாலி ஜடாயு -மோட்ஷம் அருளி / கைவல்யம் தன்னை தானே அனுபவிக்கும் படி எனக்கு அருளினார் என்கிறாள் மண்டோதரி

அந்த புருஷோத்தமன் உனக்கு காந்தன் -ஸ்ரீ பட்டர் யதுகிரி நாச்சியார் பிரசாதத்துடன் வேதாந்தி யாய் இருந்த நஞ்சீயரை ஸம்ப்ராயத்துக்கு கொண்டு வந்தார் –
திரு முகத்தில் பிராட்டிக்கு லஜ்ஜையாம் -அனைத்தும் கொடுத்து இன்னும் கொடுக்க ஒன்றும் இல்லையே என்று
ஐஸ்வர்யம் அஞ்சலி பரம் அஸ்மின் லஜ்ஜியதி -ஸ்லோகம் -தினம் சொல்லி தீர்த்தம் பிரசாதம் வாங்கிக் கொள்கிறோம்
…தே காந்த புருஷோத்தமன் -உனக்கு அன்பனான பதி என்பதால் தான் புருஷோத்தமன் ஆனான் என்று அர்த்தம் ..மாரிசன் -இராவணன் சம்வாதம் ..தேஜஸ் அனுபவித்தவன் மாரிசன் ..ப்ரஹ்மச்சாரி ராமனை முன்பு பார்த்தவன் ..சீதா பதி இப்போது ..அப்ரமேயம் -அளவுக்கு அப்பாற்பட்டது ..பிராட்டி சம்பந்தத்தால் ..லட்சுமி சம்பந்தத்தால் தேவன் ..வரனுக்கு வது சம்பந்தம் ..தேஜஸ் பார்க்கலாம் இப்போ கூட ..அரை ஒன்றாகும் கல்யாணத்துக்கு பின்பு ..அழகிய மணவாள பெருமாள் நாயனார் என்ற திரு நாமமும் இவருக்கு ..ஸ்தோத்திரங்கள் பல சேர்த்து தொடுத்து வ்யாக்யானம் .. புருஷோத்தமன் கஹா போன்ற ஸ்தோத்ர ரத்ன ஸ்லோகத்தையும் எடுத்து காட்டுகிறார் .பட்டர் உயர்ந்த தத்வம் கண்டு பிடிக்க சிரமம் பட்டாலும் முடியவில்லை .. திரு மார்பில் பட்டு -லட்சுமி பத சம்பந்தத்தால் இவனே புருஷோத்தமன் என்று அறிந்ததாம் .

பணி பதே-சய்யா –ஆசனம் –வாஹனம் –வேதாத்மா -விஹஹேஸ்வரோ –ஆசனம் இருவருக்கும் சேர்த்து –விருப்பத்திற்கு ஏற்ப சேஷ பூதர் நித்யர்கள்
மிதுனத்துக்கே சேஷம் வாஹனம் -அவனுக்கு போலவே இவளுக்கும் –
பகவன் நாராயண அபிமத அநு ரூப -கத்யத்திலும் -பட்ட மஹிஷி -திரு அநந்த ஆழ்வானும் மிதுனத்தில் பாதுகை .-பகவத்  சம்பந்தம்  சொல்லி  ஜீவாத்ம  சம்பந்தம்  சொல்லுவார் .. வேறு  சில  இடத்தில்  ஜீவாத்ம  சம்பந்தம்  சொல்லி  அவன்  சம்பந்தம் .. பங்கய  கண்ணன்  என்கோ  பவள  செவ்வாயன்  என்கோ ..கண்ணை  பதி  சொல்லி  அதரம்    சொல்லுகிறார் . .ஈட்டில்  நம்  பிள்ளை -சம்சாரிகளை  போல  இருக்கும் என்னை -ருசியை  மாத்தி  தன்  இடம்  ருசியை  மாத்த-விஷய  ப்ராவண்யம்  விட்டு  விட்டு  தன்  மேல்  பெறுக  கடாஷித்தான்  முதலில் ..அதிகாரியாக  ஆக்கினான் .. அந்த  வலையில்  சிக்கி  கொள்ள  வில்லை ..ஆலோசித்து  மந்த ஸ்மிதம்   பண்ணி  வலை  படுத்துகிறான் ..திரு  மங்கை  மன்னனும் -போக  பிச்சை  விரும்பி கை  வண்ணம்  தாமரை . கைகளை  காட்டி  வேண்டி   கொண்ட  போது  வச  படாதவள் போல இருந்தார் .. மந்த  ஸ்மிதம்  பண்ணினான் -வாய் திறந்து  பூர்ணமாக  சொல்லாமல்  வாய்  கமலம்  போலும் .. அந்த  வலையிலும்  சிக்கி  கொள்ளவில்லை .. கண்  இணையும்  அரவிந்தம் -சிக்கி  கொண்டேன் ..அங்கு  கண்களை  சொல்லி  வாயை  சொல்ல / இவர்  உதடு  துடிக்க  வாய்  சொல்லி  கடாக்ஷித்து  வச  பட்டேன்-.  அடியும்     அஃதே   அடையாளம்    என்கிறார் .

..பிராட்டி  ஜீவாத்மவை  பரமாத்மவிடம்  சேர்த்து  வைக்கிற  -கடகத்தவம் ..இரண்டு   இடத்திலும் சம்பந்தம் .. ஈஸ்வரன்  சம்பந்தம்  சொல்லி  சேதன  சம்பந்தம்   சொல்லுவார்  சில  இடத்தில் ..இரண்டில்  பிரதானம்  பரமாத்ம  சம்பந்தம் -காந்தஸ்தே  புருஷோத்தம :-என்பதில்  தெரிகிறது ..ஹிதம் -தகப்பனின் நோக்கு  .. பிரியம் -தாய்  போல ..வத்சலையான  மாதா  பிள்ளையை  பேஹணியாமல் மண்ணை  திண்ண  விட்டு  பின்பு   ஒளஷதம்  இடுவாள்  தாய் ..அவனின்  நிக்ரஹம்க   மாத்தி  அனுக்கிரஹம்  செய்பவள்  அவள் ..தோஷம்  இல்லாதவன்  யார்  என்பாள்  தாயார் ..தயை /வத்சல்யம் /க்ஷமை  குணங்களுக்கு  பிரயோஜனம்  வேணுமே -..உபய  விபூதியும்  பிராட்டிக்கும்  சேஷம் -தேசிகன் ..திரு  மாலே  நானும்  உனக்கு  பழ   அடியேன் –திரு -பெரிய  பிராட்டிக்கும்  என்றும்   சொல்வதால்

..ஜீவாத்மா   பலர்  இருக்க /நித்யரும்  பலரும்  இருக்க  திரு  அநந்த ஆழ்வானை   முதலில்   அருளியது  14 காரணம்  காட்டுகிறார்  ஆச்சான் பிள்ளை  .நித்யரில்  தலைவர் .. அனுபவிக்கிறார் ..ப்ரீதி  தருகிறார் ..ஸ்வரூப /ரூப /குண / விபூதி /சேஷ்டிதங்கள் – அனுபவிக்கும்  போது  தித்திக்கிறது  அந்த  அனுபவம் ..வாய் ஓர்  ஈர்  ஐநூறு ..அவையும்  போராது  அனுபவங்களின்  புகழை  சொல்ல ..அதனால் -பணிபதி முதலில்  ..சரீரம்  உண்டா  ? நித்யர்களுக்கு ..வியாசர்  ஹேய  சரீரம்  இல்லை சுத்த  சத்வமய  சரீரம்  உண்டு  என்கிறார் ..பல  சரீரங்கள்  கொண்டு  பல  வித  கைங்கர்யம்  செய்கிறார்கள் .பாரிப்பு  மிக  உண்டு ..அஹம்  சர்வம்  கரிஷ்யாமி  என்கிறார்  லக்ஷ்மணன் ..ஸ்ரீ குலசேகர பெருமாள்  அனுபவம் -மன்னு  புகழ்   திரு மொழி -சுற்றம்  எல்லாம்  பின்  தொடர  தொல்  கானம்  அடைந்தவனே -என்கிறார் ..பொய்  இல்லாத  பாடல் -அனைவரின்  கைங்கர்யமும்  பண்ணினதால் -சுற்றம்  எல்லாம்   இவன்  தான்  ..அது  போல  சென்றால்  குடையாம்  -பல  ரூபத்தால்  கைங்கர்யம்  என்பதால்  முதலில் ..கௌசல்யை -தாய் /தமக்கை பாரியை  மட்டும்  இல்லை ..தசரதன்  வருத்த  பட  நம்  பிள்ளை  இந்த  சுலோகத்துக்கு  அர்த்தம் -ஆலத்தி எடுப்பாளாம்   உடன்  பிறந்தவள்- போல  -போன  இடத்தில்  ஒரு  பெண்ணை  கல்யாணம்  பண்ணி  கொண்டு  வந்தால்  கூட  என்பார் ..அவள்  இடம்  ப்ரீதி  காட்டாமல்  கைகேசி  இடம்  ப்ரீதி  செய்தான்   என்கிறார் ..ஞானம்  /பலம்  ப்ரீதி  வுடன்  திரு அநந்த ஆழ்வான்  கைங்கர்யம்  செய்பவர் ..பணிபதி  செய்யாஸ்  ஆசனம் -அதனால்  முதலில்  .தாய் -குழந்தை  போல  பசு -கன்று  போல  நாமும்  அவன்  இடம்  ப்ரீதி  காட்டணும்  என்கிறார் ..பொங்கும்  பரிவால்  பட்டர்  பிரான்  பெற்றார்  பெரிய ஆழ்வார் ..சுத்தமான  பரிவு -தாய்  ஸ்தானத்தில் இருந்து ..அங்கு  ஆரவாரம்  அது  கேட்டு  அழல்   உமிழும்  -திரு  மழிசை  ஆழ்வார் ..சாம  கானம்  கேட்டு -அயோத்தியை -ஸ்ரீ  வைகுண்டம் -சற்றுக்கள்  பிரவேசிக்க  முடியாத இடத்திலும் .பரம  பத  நாதனுக்கு  சாம   ஞானம்  ஆரவாரம்  என்று  நினைந்து அழல்  உமிழ்கிறார் -இவ்வளவு பரிவு -அதி சங்கை பண்ணி

..விட்டு பிரியாத தர்மம் மிக முக்கியம் பிராட்டிக்கு ..இத்தாலே அவனை தெரிந்து கொள்ள கூடிய ஸ்வரூப நிரூபக தர்மம் -ஸ்ரீ யபத்வம் –
இவனுக்கே அசாதாரணம் -திரு இல்லா தேவர் -ஸ்ரீ பாஷ்யம் மங்கள ஸ்லோகத்திலும் ஸ்ரீ நிவாஸே தீப்தே –
திருவரங்கம் என்றாலே மயலே பெருகும் ஸ்ரீ ராமானுஜர் -..அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன்
திருவனந்த ஆழ்வான்-சம்பந்தமும் ஸ்வரூப நிரூபிதா சம்பந்தம் -பாதுகை ஆசனம் -இத்யாதி -உடையவன் எம்பெருமானே
அதனால் சேர்த்து அருளுகிறார் -ஸ்ரீ யப்பதி சம்பந்தத்தையும் பணிபதி சம்பந்தத்தையும்-கடகத்வம் இருவருக்கும் உண்டே -நாகணை மீசை எம்பிரான் சரணே சரண் -என்பதால் இளைய பெருமாளை முன்னிட்டு சரணாகதி அடைந்தது போலே –
சேர்த்தி சொல்லி -சேர்த்தியில் பண்ணும் கைங்கர்யத்தையும் அருளிச் செய்கிறார் இத்தாலே -த்வயம் போலே

 

திரு அனந்த ஆழ்வானுக்கும் பெரிய திருவடிக்கும் பத்னிமார்களும் உண்டே -சேர்ந்தே மிதுனத்துக்கு கைங்கர்யம் செய்கிறார்கள் –
ஞானம் அனுஷ்டானம் இரண்டுமே வேண்டுமே -பெருமாளும் சீதா பிராட்டியும் சேர்ந்தே பெரிய பெருமாள் திருவாராதனம் செய்து அருளினால் போலே
பிராட்டியின் அந்தபுரத்துக்குள் போக இவர்களின் பத்னிமார்களுக்கு தான் அதிகாரம்
பூமி நீளா தேவமார்களுக்கும் -இவர்கள் கூட சேந்து சேர்த்தியில் கைங்கர்யம் -லலிதை சரித்திரம் -முன் ஜென்மத்தில் பெண் எலி பூனை சப்தத்தால் த்ரீ நொந்தப் பட்டு பிரகாசித்ததாம்
புஷ் பம சந்தனம் போலே -தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே-கைங்கர்யத்தில் களை அறுகை
அனந்தன் பாலும் கருடன் பாலும் –சேர்ந்து இங்கும் அருளுகிறார் -.. யவனிகா மாயா ஜெகன் மோஹினி ..மூன்று வஹை மோகம் -மாய -பிரக்ருதிக்கு ..தன்னை பற்றியும் / சித் பற்றியும் / ஈஸ்வரனையும் பற்றிய மோகம் ..அறிய ஒட்டாமல் மறைத்து விடும் -அஞ்ஞானம் பல கைகள் உண்டு -ஞானம் உதயமே இல்லாமல் -சம்சய விபரீத -முத்து சிப்பியை வெள்ளி என்பது போலே -அந்யதா ஞானம் -….அதனால் ஜெகன் மோஹினி என்று பிரக்ருத்யை சொல்கிறார் -அகில ஹேய ப்ரத்ய நீக்கம்
-தன் சம்பந்தத்தால் அனைவரின் ஹேயங்களை அழிக்கிறவன் ..உண்மையாக தெரிந்து கொள்வது தான் ஆத்மாவுக்கு க்ஷேமம் –ஸ்ரீ யபதித்தவம்–அகில ஹேய ப்ரத்ய நீகம் -கல்யாண குணை ஏக -நாராயண பரமாத்மா நிச்சயமாக நான்கையும் தெரிந்து கொள்ள வேண்டுமே ..யாதவ பிரகாச மதம் நிரசிக்கிறார் – ஸ்ரீ பாஷ்யத்தில் ..மூல பிரக்ருதியால் வந்தவை மூன்று தத்துவங்கள் என்பார் இவர் மதம் ..அத்வைதி -பரமாத்ம ஒன்றே உண்டு –திருமேனி குணங்கள் இல்லை என்பர் -இவை போன்ற மோஹங்கள் பல

..மாய  வஸ்யம் -ஜீவாத்ம ..பகவானை  சொல்லும்  போது மாயை  சக -அடக்கி  ஆளுபவன்  என்பார் -அத்வைதத்தில் ..  ப்ரஹ்மதுக்கும்  மாய  வஸ்யம்  என்று  சொல்லுவார் ..ஸ்ரீ  ராம  நவமி  உத்சவம் ஸ்வாமி ..காலஷேபம்   ஆனபின்பு -சங்கர  ஜெயந்தி ..மாயை  ப்ரஹ்மத்தை  சூழ்ந்து   கொண்டது  என்பார் ..மாயைக்கு  ஸ்வாமினி நியாமினி  -பிராட்டி ..சிறைச்சாலையில்  குற்றம்   செய்தவரும்  /ராஜாவும்  இருந்தாலும்  துக்கம்  யாருக்கு .. அது  போல  மாயையில்  அகப்பட்டவன்   ஆவான் ..சரீரம் -சிறை  சாலை .. இருவரும்  இருக்கிறோம் . அவனுக்கு  உகப்பு  ஜீவனுக்கு  துக்கம்  கர்மத்தால் ..பிராட்டிக்கும்   கர்ம சம்பந்தம்  இல்லை ..பத்தினி  என்பதால்  அனைவரும்  அவளுக்கு  சொத்து ..

..ப்ரஹமாதி   -தேவர்  கூட்டம்  அவர்களின்  பத்னிமார்களும்  தாச /தாசி கணா- .திரை  பிரம்மா  போன்றோரையும்  மறைத்ததாம் ..மாய  வத்சர்  அனைவரும் ..பிரகிருதி   மோகம்  இவர்களையும் விடாதாம் ..வ்யாஸர்  அருளிய  ஸ்ரீ  பாகவதம் ..சுகர்  .பிரணய  கலகம்-ருக்மிணி -கண்ணன்  அழகாக   வெளி ஏற்று கிறார்  ..பிரம்மா  சரஸ்வதியை  சிருஷ்டித்தார் —தான் ஸ்ருஷ்டித்த பெண்ணை திருமணம் பல இடங்களில் சிவன் ப்ரஹ்மாதிகள் மோகம் உண்டே பாகவதத்தில் -யாருக்கும் யார்க்கும் வசப்படாதவர் விஷ்ணு ஒருவருமே —-மாயை யால் ப்ரஹ்மாதிகளே மோகம் அடைய நம்மைப் பற்றி கேட்க வேண்டாமே

..ஆகாசம் -பஞ்ச  பூதங்களில் ஓன்று ..ஆகாசம் -பரமாத்மாவையும்  சொல்லுமா  ?..அனைத்துக்கும்  காரணம்  என்ற  ப்ரமாணங்களால் ஆகாசம் =ப்ரஹ்மம் ..அர்த்தம்  பிரசித்தம்  .. பிரசித்த  அர்த்தம் ..லோக  அனுபவத்தை  வைத்து  கொண்ட  அர்த்தம்  பொருத்தம்  இல்லாத  போது .. ப்ரஹ்ம  சூத்திரத்தில்  விஸ்தாரம்  ..எங்கும்  பிரகாசிக்கும்  பொருள் என்ற  விற்பதியை   சொல்லி பரமாத்மவை  சொல்லுகிறார் ..அது  போல  ஹிரண்ய  கர்ப /ஜம்பு /ருத்ர  போன்ற  வை   ஜகத்  காரணம்  என்று  சொல்வதால்   அலகு  எம்பெருமானையே குறிக்கும் ..ப்ரம்மனையும் சிவனையும்  குறிக்காது ..இதை  பட்டர்  விஷ்ணு  ஸஹஸ்ரநாம வியாக்யானத் தில்  அருளி  செயகிறார் ..

..அஞ்ஞானம்   5 வகை   ப்ரஹ்மா  சிருஷ்டித்தார் ..ஜனகன்  ஜனகாதிகளை  உதவிக்கு  கூப்பிட  வரவில்லை ..கோபம் . அடைந்தான்  ப்ரஹ்மா  … அப்பொழுது  தான்  ருத்ர  ஸ்ருஷ்டி  பண்ணுகிறான் ..ஆனந்த  கண்  களால் அனுபவிக்க  பண்ணும்  விஷ்ணு -ருத்திரன்  ..தன்  கல்யாண  குணங்களால்   ஈடு  பட்டதால் ..ருத்ர  அர்த்தம்  இப்படி  பட்டர்  பண்ணுகிறார் .. ஹிரண்ய -ஸ்வர்ணம் /தங்கம்  சுந்தரமான  பரம  பாதத்தை  சொல்லி  தன்  கர்பத்தில்  அவனை  தங்குவதால்  விஷ்ணுவே   ஹிரண்ய  கர்ப  என்கிறார் ..ப்ரஹ்மா  ஆதி -சப்தத்தால் …சிவன்  இந்திரன்  போன்றாரையும்  சொல்லி ..இவர்களின்  பத்னிமார்களிலும்    அடிமை  செய்பவர்கள் ..பார்யை புத்ரன் /தாசன் ..தனம்  தேடி  கொடுப்பவர்கள் ..கைங்கர்யம்  பெற்று  கொள்பவர்கள்  சேர்த்தியில் ..மாதவ ..மாத /பிதாவாக  இருக்கும்  பெரிய  பிராட்டியாரும்  எம்பெருமானும் ..பித்ருத்வம் -ஜகத் காரணத்வம்..சேர்த்தியில்  பதி /பத்தினி  சேர்ந்து  கைங்கர்யம்  பண்ண  வேணும் .. ஜகத்  காரணத்வம்  பிராட்டிக்கு  எல்லை -தென்  கலை சம்ப்ரதாயம்  . இருவருக்கும்  உண்டு -தேசிகர்  ஸம்ப்ர தாயம் ..மாத்ருத்வம்  பெரிய  பிராட்டிக்கு -தென்  கலை ..ஸ்ரீ  ஸ்தவத்தில்  ஆழ்வான்  -பட்டரும்   ஸ்ரீ  குண  ரத்ன  கோசத்தில் ..பிராட்டிக்கு  ஜகத்  காரணத்வம்  எல்லை  என்று  ஸ்பஷ்டமாக  அருளி  செய்து  இருக்கிறார்கள் -..

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. கார்ப்பங்காடு வரதாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: