ஸ்ரீ யதிராஜ விம்சதி

1-ஸ்ரீ மாதவாங்க்ரி ஜல ஜத்வய நித்ய சேவா
பிரேமா விலாசாய பராங்குச பாத பக்த்தம்
காமாதி தோஷ ஹரமாத்ம பதாச்ரிதானாம்
ராமானுஜம் யதி பதிம் பிரணமாமி மூர்த்நா

மிதுனத்தில் ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை ரசத்தில் மையல் ஏறிய ஹ்ருதய கமலத்தை உடைய
ஸ்ரீ பராங்குசன் திரு அடிகளை நிரந்தரம் பிரீதி சேவை செய்பவரும்..
தம்முடைய திரு அடிகளை அடைந்தவரின் காமம் போன்ற தோஷங்களை நீக்குபவருமான..
யதிகட்க்கு இறைவன் ஸ்ரீ ராமானுசனை.. தலையால் வணங்குகிறேன் ..

2..ஸ்ரீ ரெங்கராஜ ஸரணாம்புஜ ராஜ ஹம்சம் ..
ஸ்ரீமத் பராங்குச பதாம் புஜ  ப்ருங்கராஜம்.
.ஸ்ரீ பட்டநாத பரகால முகாப்ஜமித்ரம் ..
ஸ்ரீவத்ச ஸிக்ந சரணம்   யதிராஜ மீடே  ..

ஸ்ரீ ரெங்கராஜனின் திருவடி தாமரைகளில் விஹரிக்கும் ராஜ ஹம்சமும்..
ஸ்ரீ பராங்குசர் திருவடி தாமரைகளில் மது பானம் செய்து ரீங்காரத்துடன் வட்டம் இடும் வண்டை ஒத்தவரும்..
ஸ்ரீ பட்டார் பிரான் பர காலர் இவர்களின் திருமுகங்களுக்கு மலர்ச்சி தரும் சூரியனாகவும் மித்ரராயும்
ஸ்ரீ கூரத் ஆழ்வானுக்கு  அடைக்கலமாகவும் உள்ள ஸ்ரீ யதி ராஜரை துதிக்கிறேன் ….

3..வாசா யதீந்த்ர மனஸா வபுஷாச யுஷ்மத் ..
பாதாரவிந்த யுகளம் பஜதாம் குருணாம்..
கூராதிநாத  குருகேச முகாத்ய பும்சாம் ..
பாதானு சிந்தன பரஸ் சத்தம் பவேயம் ..

ஸ்ரீ யதீந்த்ர தலைவனே வாக்காலும் மனத்தாலும் காயத்தாலும் உம் திருவடித் தாமரைகளை
இடைவிடாமல் உபாசிக்கும் ஆச்சர்யர்களான
ஸ்ரீ கூரத் ஆழ்வான் ஸ்ரீ திரு குருகை பிரான் பிள்ளான் முதலிய புருஷர்களின் திருவடிகளை
ஸ்மரிப்பதிலே நோக்கோடு  சர்வ காலமும் இருப்பேனாக    ..

4..நித்யம் யதீந்த்ர தவ திவ்ய வபுஸ் ஸ்ம்ருதௌ மே..
ஸக்தம் மநோ பவது வாக குண கீர்த்தநேஸெள.
.க்ருத்யம் ச தாஸ்ய கரணே து கரத்வயஸ்ய..
வ்ருத்த்யந்தரேஸ்து விமுகம் க்ரணத்ரயம் ச ..

யதி தலை நாதனே ஒழிவில் காலம் எல்லாம்
உம் திரு மேனியின் நினைவில் என் மனம் ஆசை கொண்டு இருக்க வேண்டும்
இந்த என் வாக்கு உம் குண கீர்த்தனத்தில் ஆசக்தமாய் இருக்க வேண்டும் ..
இரு கைகளின் செய்கையும் ஊழியம் செய்வதிலே இன்புற  வேண்டும்
முக் கரணங்களும் மற்ற வ்யாபரங்களில் கண் எடுத்து பாராமல் இருக்க வேண்டும்..

..5..அஷ்டாஷார்க்ய மநுராஜ பதத்ராயார்த்த..
நிஷ்டாம் மம அதர விதர அத்ய யதீந்த்ர நாத
..சிஷ்ட அக்ர கண்ய ஜன சேவய பவத் பதாப்ஜே ..
ஹ்ருஷ்டாஸ்து நித்யம் அனுபூய மமாச்ய புத்தி ..

யதிகளுக்குள் ஸ்ரேஷ்டரே ..ஸ்ரீ வைஷ்ணவ குலத்துக்கு ஸ்வாமியே..
திரு மந்தர பொருள்களில் வழுவாத நிஷ்டையை எனக்கு இப்பொழுதே தானம் செய்ய வேண்டும் ..
என்னுடைய புத்தி சிஷ்டர்களால் நெருங்கி சேவிக்க தக்க உம்முடைய திருவடி இணையை
எக்காலமும் அனுபவித்து ஓயாமல் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும்..

..6..அல்பாபி மே ந பவ தீய பாதாப்ஜ பக்தி ..சப்தாதி போக ருசி ரநவகமேததே ஹா
..மத்பாபமேவ ஹி நிதாநமுஷ்ய நாந்யத் தத்வாரயார்ய யதிராஜ தயைக சிந்தோ ..

கருணை ஒன்றே நிரம்பிய சமுத்திரமே.. உத்தம ஆச்சர்யரே..யதி தலைநாதனே .. எனக்கு  தேவருடைய திருவடி தாமரைகளில்
பக்தி எனபது கொஞ்சம் கூட இல்லை ..புலன் விஷயங்களில் ஆசை தினம் தோறும் வளர்கிறது …. என் செய்கேன் பாபியேன்.
.என் பாபம் தான் மூல காரணம் ..மற்று வேறு காரணம் இல்லை தேவரீர் தடுத்து தகைய வேணும்..

..7..வ்ருத்யா  பசு நரவபு ஈத்ருஸோபி..ச்ருத்யாதி ஸித்த  நிகிலாத்மா குணாச்ரயோ அயம்..
இதி ஆதரேண க்ருதிநோபி  மித பிரவக்தும் ..அத்யாபி வஞ்சன பரோச்த்ரா யதீந்த்ர வர்த்ததே..

யதிகட்க்கு இறைவரே நான் நடைத்தையால் சீலத்தால் மிருகம் போலும் சரீரத்தால் மனுஷ்ய ஜந்து போலும் இருந்தும் என்னை ஆச்ரயித்து
பக்தியோடும் அன்போடும் விஸ்தாரமாய் புகழ்ந்து இந்த பாவன புண்ய அரங்க ஷேத்ரத்தில் உம்முடைய ஆச்சர்ய பீட ஸ்தானத்தில் இப்பொழுதும் நடந்து வருகிறேன்..

8..துக்காவஹ அஹம் அநிஸம் தவ துஷ்ட சேஷ்ட ..சப்தாதி போக நிரத சரணாகதாக்ய
..த்வத் பாத பக்த இவ சிஷ்ட ஜநௌக மத்யே ..மித்யாசராமி யதிராஜ ததோச்மி  மூர்க்க..

யதி ராஜனே நான் அல்லும் பகலும் துஷ்ட வ்யாபாரங்களை செய்பவன் ..உமக்கு துக்கத்தை தருபவன்
..சரணாகதன் என்று பெயர் வைத்து கொண்டு   விஷயங்களின் போகத்தில் ருசியோடு அனுபவித்தி கொண்டு சாதுக்களாய்
பெரியோர்கள் நடுவில் உமது திருவடிகளில் பக்தி உடையவன் போல் பொய்யாக வேஷம் நடிக்கிறேன் பொல்லாதவன் ஆகிறேன்..

..9..நித்யம் த்வஹம் பரிபவாமி குரும் ச மந்த்ரம் ..  தத்தேவதாமபி  ந கிஞ்சித் அஹம் பிபேமி.
.இத்தம் சடோபி அசடவத் பவதீய ஸங்கே  ..ஹ்ருஷ்ட சராமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க..

யதி ராஜனே நான் நித்ய காலமும் ஆச்சர்யனையும் மந்தரத்தையும் மந்தர ப்ரதிபாத்யமான தேவைதயும் அவமதிக்கிறேன் .
..சிறிதும் அச்சம் படுவது இல்லை..இது என்ன விந்தை ..இப்படி ஏமாற்றும் குணம் உடையவன் ஆனாலும் உம் அடியவர் திரளில்
மோசக்காரர் அல்லாதவர் போல சந்தோஷமாக நடிக்கிறேன் ..ஆகையால் நான் மூர்க்கன்  ..

..10..ஹா ஹந்த ஹந்த மனஸா க்ரியயா ச வாசா ..யோஹம் சராமி   ஸததம் த்ரிவிதாபசாராந்.
.ஸோஹம் தவ அப்ரியகர பிரிய க்ருத்வதேவ ..காலம் நயாமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க ..

யதி ராஜனே… ஆ ஆ ஐயோ  ஐயோ.. நான் மனத்தாலும் செய்க்கையாலும் சொல்லாலும் சர்வ காலத்திலும் மூன்று வித
அபசாரங்களையும் செய்து கொண்டு உமக்கு பிரியத்தை செய்பவன் போல நடித்தி கொண்டு
கால ஷேபம் செய்து கொண்டு இருக்கிறேன் ..ஆகையால் நான் மூர்க்கன்   ..

..11..பாபே க்ருதே யதி பவந்தி பயாநுதாய..லஜ்ஜா புந காரணமச்ய கதம் கடேத
..மோஹேந மே ந பவதீஹ பயாதிலேச ..தஸ்மாத் புந புநரகம் யதிராஜ குர்வே

யதிராசனே பாபம் செய்த அளவில்  என்ன தீங்கு விளையுமோ என்கிற  பயம் ,தீமை செய்து விட்டோமோ என்கிற
பச்சாதாபம் ,வெட்கம் ஆகிய இவை இருக்கும்   ..ஆகில் இந்த வித செய்கையை திரும்பவும் செய்வது எப்படி கூடும்..
மோகத்தால், மதி மயக்கத்தால் எனக்கு இப்படி பாபம் செய்வதில் பயம் கொஞ்சம் கூட இல்லை
..அதனால் நான் திரும்பவும் திரும்பவும் தீங்கை செய்கிறேன்..

..12..அந்தர் பஹிஸ் ஸகல வச்துஷு  ஸந்தமீஸம்..அந்த புரஸ் ஸி்த்திதமிவாஹ மவீஷமாண.
.கந்தர்ப்ப வச்ய ஹ்ருதய   ஸததம் பவாமி ..ஹந்த த்வதக்ரகமநஸ்ய யதீந்த்ர  நார்ஹ

எல்லா பொருள்களிலும் உள்ளேயும் வெளியிலும் இருக்கிற ஈஸ்வரனை, குருடன் எதிரே நிற்பவனை  பார்க்காதவன்  போல  ,
   நான் பார்க்காமல் எப்பொழுதும் மன்மதனுக்கு வசப்பட்டவன் போல் இருக்கிறேன்..
மனத்தை அடக்கிய யதிகளில் சிறந்தவரே உம் எதிரில் செல்ல யோக்க்யன் அல்லன்..

..13..தாபத்ரய ஈஜநித துக்க நிபாதி நோசபி ..தேஹ ஸ்த்திதெள மம ருசிஸ்து   ந தந்நிவ்ருத்தெள.
.ஏதஸ்ய காரணமஹோ மம பாபமேவ ..நாத த்வமேவ ஹர தத் யதிராஜ சீக்ரம் .. 

ஆத்யாத்மிகம்,ஆதிதைவிகம் ,ஆதி பெளவ்திகம்  மூன்றிலும் விழுந்தி வருந்தினாலும் எனக்கு சரீரம் இருப்பதிலே ஆசை
..இதற்க்கு என் பாபமே காரணம் ..என் நாதனே யதி ராஜரே அந்த பாபத்தை விரைவில் போக்கி அருள வேணும்..

..14..சுத்தாத்ம யாமுந குரூத்தம கூர நாத.. பட்டாக்ய தேசிக வரோக்த ஸமஸ்த நைச்யம் .
.அத்ய அஸ்தி அஸங்குசிதமேவ மயீஹ லோகே..தஸ்மாத் யதீந்த்ர கருணைவ து மத்கதிஸ்தே..

பரிசுத்தமான மனம் உடைய ஸ்ரீ ஆளவந்தார் ,கூரத் ஆழ்வான் , பட்டர் மூவராலும் சொல்ல பட்ட நீச தன்மைகளும்
இப் பூ மண்டலதிலே இன்றே என் இடத்தில் மிக்க விரிவாய் இருக்கிறது ..ஆகையால் யதிகட்க்கு இறைவனே உம் கிருபை தான் எனக்கு கதி..

..16..சப்தாதி போக விஷயா ருசி ரஸ்மதீயா..நஷ்டா பவத் விஹ பவத் தய்யா யதீந்த்ர .
.த்வத்தாஸ தாஸ கணநா சரமாவதெள ய ..     தத் தாஸதைக ரஸதா விரதா மமாஸ்து ..

.. விஷயங்களின் உள்ள எங்கள் ஆசை   யதீந்த்ரே! தேவரீரின் கிருபையால் இங்கே அடியோடு அழியட்டும்..
தேவரின் தாஸ தாஸ தாசன் என்று  கடை படியில் உள்ளவருக்கு ஆட்பட்டு அடிமை புரிவதில் இன்புறும் தன்மை நீங்காமல் இருக்க வேண்டும்..

..17..ஸ்ருத்யக்ர வேத்ய நிஜ திவ்ய குண ஸ்வரூப ..பிரத்யஷதா முபகதஸ்த்விஹ ரெங்கராஜ .
.வச்யஸ் சதா பவதி தே யதிராஜ தஸ்மாத் ..சக்த ஸ்வகீய ஜனபாப விமோசனே த்வம்..

யதிராசனே ச்ருதிகளின் சிரசாக இருக்கும் உபநிஷத்துகளால் அறிய வேண்டிய தன ஸ்வாபாவிக திவ்ய குணங்களையும் 
ஸ்வரூபத்தையும் உடைய கண்களால் காணும்படி அருகே வந்து இருக்கிற அரங்கத்தம்மான் உமக்கு எப்பொழுதும் வச்யராக இருக்கிறார் .
.ஆகையால் உம்மை சேர்ந்த ஜனங்களின் பாபத்தை போக்குவதில் நீர் சக்தி உள்ளவராய் இருக்கிறீர்..

..18..காலத்ரயேபி கரணத்ரய நிர்மிதாதி ..பாபக்ரியஸ்ய சரணம் பகவத் ஷமைவ .
.ஸா ச த்வயைவ கமலா ரமணேர்த்திதா யத்..ஷேமஸ்ஸ ஏவ ஹி யதீந்த்ர பவச் ச்ரிதானாம்..

யதீந்த்ரரே முக் காலத்திலும் முக் கரணங்களாலும் பாபங்களை செய்பவனுக்கு பகவானின் ஷமா குணமே தான் தஞ்சமாகும்
..அந்த ஷமை குணமும் ஸ்ரீ காந்தன் இடம் உம்மாலேயே பிரார்த்திக்க பட்டது ..அதுவே உம்மை ஆச்ரயித்தவர்களுக்கு மோஷம் என்னும் ஷேமம் ஆகும்   ..

..19..ஸ்ரீமந் யதீந்த்ர தவ திவ்ய பதாப்ஜ ஸேவாம்..ஸ்ரீ சைல நாத    கருணா பரிணா மதத்தாம்.
.தாமாந் வஹம் மம விவர்த்தய  நாத தஸ்யா ..காமம் விருத்த மகிலம் ச நிவர்த்தய த்வம் ..

பகவத் பக்தி பரீவாஹ கைங்கர்ய ஸ்ரீயை உடைய லக்ஷ்மண யோகியே எம் ஆசார்யர் ஸ்ரீ சைல நாதர் தயா காஷ்ட்டையாக
தந்து அருளிய உம்முடைய திவ்யமான திருவடி தாமரைகளின் சேவையான அந்த அரும் பேற்றை தினம் தோறும் எனக்கு
விசேஷமாக பெருக செய்ய வேண்டும் ..அந்த பேற்றுக்கு இடையூறான எல்லா வற்றையும்
அடியோடு தொலைக்க வேண்டும் ..எல்லா காமத்தையும் போக்க வேண்டும்..

..20..விஜ்ஞாபநம் யதி தமத்ய து மாமகீநம்..அங்கீ குருஷ்வ  யதிராஜ தயாம் புராசே
..அஜ்ஞோசயமாத்மா குனலேச விவர்ஜிதஸ்     ச ..தஸ்மாத நந்ய சரணோ பவதீதி மத்வா..

கருணை கடலான யதி ராஜரே! இன்று அடியேனுடைய இந்த உம் திருவடி தாமரையின் நித்ய சேவையான பிரார்த்தனை யாது ஓன்று உண்டு
..இவன் அறியாதவன் ..ஆத்மா குண லேசமும் அடியோடு இல்லாதவன் .ஆகையால் வேறு கதி இல்லாதவன் என்று எண்ணி திரு உள்ளம் பற்ற வேண்டும்..

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: