அர்ச்சை -திருவரங்கம் ,திருமலை, பெருமாள் கோவில் ஏற்றங்கள் -ஸ்ரீ உ .வே. வேளுக்குடி வரதாச்ர்யா ஸ்வாமிகள் ..

அம்பச்யாபரே புவனச்ய மத்யே நாகச்ய ப்ருஷ்டே மஹதோ மஹீயான் சுக்ரேண ஜ்யோதீம்ஷி
ஸ மனுப்ரவிஷ்ட  பிரஜாபதி சரதி கர்பே அந்த ….வேத வாக்யம்..

விண் மீது இருப்பாய் மலை மேல் நிற்ப்பாய் கடல் சேர்ப்பாய் மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் ….பிரபந்தம்..

ஏவம் பஞ்ச பிரகாரோகம்..அவன் வாக்கியம் .

பகல் ஓலக்கம் இருந்து கருப்பு உடுத்து சோதித்து காரியம் மந்திரித்து வேட்டை ஆடி ஆராமங்களிலே விளையாடும் ராஜ நீதி ..ஆசார்ய ஹ்ருதயம்..
பரம் வ்யூகம்  விபவம் ஹார்த்தம் அர்ச்சை  ..இவை ஐந்தையும் இப்படி சொல்லும் ..

நீர்மைக்கு எல்லை அர்ச்சை ….
இதம் பூர்ணம் அத பூர்ணம் பூர்ணாத் பூர்ணம் உத்ரிச்யதே பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூர்ணமேவ அவசிஷ்யதே சர்வம் பூர்ணம் சகோம்….

ஆஸ்ரித காரிய ஆபாத குணங்கள் — ஞான சக்தி பிராப்த்தி பூர்த்திகளும், ஆச்ரயண சௌகர்ய ஆபாதாக குணங்கள்–
வாத்சல்ய ஸ்வாமித்வ சௌசீல்ய சௌலபாதிகளும்.. புஷ்கலங்கள் ..

அர்ச்சையில் பிரவர்த்தி அநுஷ்டித்தார்கள்..
திரு வேம்கடத்தானே புகல் ஓன்று இல்லா அடியேன் உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே –நம் ஆழ்வார்
ஆழி வண்ணா! நின் அடி இணை அடைந்தேனே அணி பொழில் திரு அரங்கத்தானே –திரு மங்கை ஆழ்வார் 
ஸ்வாமித்வ ஸொவ்லப்ய பூரணமான அர்சையே பரம உத்தேசம்

ஆராமம் சூழ்ந்த அரங்கம் வேர்பற்றான திவ்ய தேசம் ..
அதனால் ஸ்ரீமந் ஸ்ரீ ரெங்க ச்ரியம் அனுபத்ரவாம் அனுதினம் சம்வர்தய  என்று நித்யம் பிரார்த்திக்கிறோம்
வேரில் நீரிட்டால் செடி வாழுமா போல..

வள்ளல் மால் இரும் சோலை மணாளனார் பள்ளி கொள்ளும் இடம் ஸ்ரீ ரெங்கம் என்று
சகல திவ்ய தேச பெருமாளும் பள்ளி கொள்ளும் இடம் இதுவே
பதின்மர் பாடும் பெருமாளும் இவனே
திரு வேம்கடமுடையான் இரு மருங்கிலும் பால் கொடுத்து இரட்டை குழந்தைகளை ரஷிக்கும் மாத்ரு போல்வான்  ..

காஞ்சி தியாக மண்டபம் ..வேண்டுவார் வேண்டும் வரங்களை வாரி வழங்கும் வள்ளல் வரதன்..
எம்பெருமானாரையே திருஅரங்கனுக்கு தானம் செய்த த்யாக ராஜன் இவன் ..
இமையோர் தலைவன்..அயர்வறும் அமரர்கள் அதிபதி
திரு மங்கை ஆழ்வாருக்கு நிதி காட்டி  கொடுத்தான் ..
ஆளவந்தார் திரு கச்சி நம்பிகளுடன் -ஆ முதல்வன் -என்று ராமானுசரை கடாஷிததும் பெருமாள் கோவிலே தான் .
அர்ச்சை சமாதி குலைத்து  கொண்டு ஆறு வார்த்தை அருளினான் 
எம்பெருமானாரை விந்த்ய அடாவில் இருந்து காத்து தந்தவரும் இவரே
யக்ஜ மூர்த்தியை வாதத்தில் ஜெயிக்க ஸ்வபநத்தில் வந்து பிரகாச படுத்தினவரும் இவரே  .
அதனால் அவருக்கு அருளாள பெருமாள் எம்பெருமானார் என்ற திரு நாமம் இட்டார்
பிள்ளை லோகாச்சர்யர் ஆக அவதரித்து அஷ்டாத ரகஸ்ய விரிவு அருளினார்
ஆகையால் தேவ பெருமாள் திருவோண புறப்பாடு கண்டு அருளுகிறார்.
ஈடு முப்பத்தாறு உலகத்தில் பிரகாசம் ஆனதும் இவராலே –
சம்பிரதாய பெருமாளாக பிரகாசிக்கிறான் 
அதனால் தென் அத்தியூர் கழலிணை கீழ் பூண்ட அன்பாளன் ராமானுசன் என்கிறார் அமுதனார்

பிரமாணமான அருளிச் செயலும்
ப்ரேமேயமான தேவ பெருமாளும்
பிரமாதாவான எம்பெருமானாரும் வாழிய வாழியவே —

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: