ஸ்ரீ திருக்கோளூர் அம்மாள் வார்த்தைகள் ..

..’திண்ணம் என் இளமான்  புகும் ஊர் திருக்கோளூரே..என்று ராமானுஜர் அருளியதும் திருக்கோளூர்  அம்மாள்   சொன்ன 81 வார்த்தைகள் ..கேட்டதும் உள்ளம் மகிழ்ந்து தழிகை பண்ண சொல்லி உண்டு மகிழ்ந்தாராம் ..

..1..அழைத்து வருகிறேன்  என்றேனோ  அக்ருரரைப்  போலே  ..

..2. அகமொழித்து  விட்டேனோ  விதுரரைப்  போலே ..

..3. தேகத்தை விட்டேனோ  ருஷி பத்நியைப்  போலே  ..பத்தவிலோச்சனம்(நாச்சியார்  திருமொழி  12-6).
..4. தசமுகனைச்  செற்றேனோ   பிராட்டியைப் போலே ..

..5. பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே..

..6. பிண விருந்திட்டேனோ  கண்டகர்ணனைப்  போலே..
.. 7. தாய்க்  கோலம் செய்தேனோ  அநஸூயைப்  போலே ..

..8. தந்தை  எங்கே என்றேனோ துருவனைப் போலே .ஸ்ரீ வாஸூதேவ — துவாசத அஷர மந்த்ர -நாரதர் இடம் பெற்றார் ..

..9. மூன்று எழுத்து சொன்னேனோ  க்ஷத்ரபந்துவைப்  போலே -கோவிந்தா நாமம் ..

.. 10. முதலடியைப்  பெற்றேனோ  அகலிகையைப் போலே ..

..11. பிஞ்சாய்ப்  பழுத்தேனோ ஆண்டாளைப் போலே..

..12. எம்பெருமான்  என்றேனோ பட்டர்  பிரானைப்  போலே..

..13. ஆராய்ந்து  விட்டேனோ திருமழிசையார்  போலே..

..14. நான்  (அவன்  ) சிறியன் என்றேனோ ஆழ்வாரைப் போலே ..
..15. ஏதேனும்  என்றேனோ குலசேகரர்  போலே ..
..16. யான் சத்யம்  என்றேனோ கிருஷ்ணனைப்  போலே..
..17. அடையாளமும்  சொன்னேனோ கபந்தனைப்  போலே ..சுக்ரீவனை  காட்டி கொடுத்தான் ,,
..18. அந்தரங்கம்  சொன்னேனோ த்ரிஜடையைப் போலே ..
..19. அவன் தெய்வம்  என்றேனோ மண்டோதரியைப்  போலே ..
..20. அகம் வேத்மி  என்றேனோ விச்வாமித்ரரைப்போலே ..அகம்  வேத்மி மகாத்மானம்  ராமம் சத்ய பராக்ரமம் ..வசிஷ்டோபி  மகாதேஜோ  ஏசமே தபஸிஸ்திதா..
..21. தேவு  மற்றறியேன்  என்றேனோ மதுரகவியைப்  போலே ..
..22. தெய்வத்தைப்  பெற்றேனோ தேவகியர்  போலே ..
..23. ஆழி  மறை என்றேனோ வசுதேவரைப்  போலே ..
..24. ஆயனை வளர்த்தேனோ  யசோதையரைப் போலே ..
..25. அநுயாத்திரம் செய்தேனோ அணிலங்களைப் போலே ..
..26. அவல்   பொறியை ஈந்தேனோ  குஸேலரைப்  போலே ..
..27. ஆயுதங்கள் ஈந்தேனோ  அகச்தியரைப்  போலே ..
.. 28. அந்தரங்கம் புக்கேனோ  சஞ்சயனைப் போலே ..
..29. கர்மத்தால்  பெற்றேனோ ஜனகரைப் போலே ..
..30. கடித்து  அவனைக்  கண்டேனோ  திருமங்கையர் போலே ..
..31. குடை  முதலானது  ஆனேனோ  அனந்தாழ்வான்  போலே ..
..32. கொண்டு திரிந்தேனோ திருவடியைப்  போலே ..
..33. இளைப்பு விடாய் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே ..
..34. இடைகழியில் கண்டேனோ முதலாழ்வர்களைப் போலே ..
..35. இரு மன்னர்  பெற்றேனோ வால்மீகியைப் போலே ..
..36. இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்பொடியார் போலே ..
..37. அவன் உரைக்கப்  பெற்றேனோ திருக்கச்சியர்  போலே ..
..38. அவன் மேனி ஆனேனோ திருப்பாணர் போலே ..
..39. அனுப்பி வையும்  என்றேனோ வசிஷ்டரைப்  போலே..
..40. அடி வாங்கினேனோ கொங்கூர்  பிராட்டியைப் போலே..
.. 41. மண்  பூவை இட்டேனோ   குறும்பு அறுத்த நம்பியைப் போலே..
..42. மூலம்  என்று அழைத்தேனோ  கஜ ராஜனைப்  போலே ..
.. 43. பூசக் கொடுத்தேனோ  கூநியைப் போலே ..
..44. பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே..
..45. வழி  அடிமை  செய்தேனோ லக்ஷ்மணனை போல ..
..46. வைத்த  இடத்து இருந்தேனோ  பரதனைப்  போலே ..
..47. அக்கரைக்கே  விட்டேனோ குஹப்பெருமாளைப் போலே ..
..48. அரக்கனுடன்  பொருதேனோ  பெரிய  உடையாரைப்  போலே ..
..49. இக்கரைக்கே  சென்றேனோ  விபீஷணனை  போலே ..
..50. இனியது  என்று வைத்தேனோ  சபரியைப்  போலே ..
..51. எங்கும்  உண்டு  என்றேனோ பிரகலாதனை  போலே ..
..52. இங்கு இல்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே ..
..53. காட்டுக்குப் போனேனோ  பெருமாளைப்  போலே ..
..54. கண்டு  வந்தேன்  என்றேனோ திருவடியைப் போலே..
..55. இரு கையும்  விட்டேனோ திரௌபதியைப்  போலே ..
..56. இங்கு பால்பொங்கும்  என்றேனோ வடுகநம்பியைப் போலே ..நம் பெருமாள் புறப்பாடும் சேவிக்காமல் கைங்கர்யம் செய்தவர் ..
..57. இரு மிடறு  பிடித்தேனோ  செல்வப்பிள்ளையைப் போலே”…..சாரங்கபாணி தளர்  நடை நடவானோ….” வாராய் என் செல்வ பிள்ளாய்..
..58. நில் என்று பெற்றேனோ இடையரரூர் நம்பியைப்  போலே .வருஷத்து நான்கு ப்ரஹ்ம உத்சவமும் எல்லா நாளும் சேவித்தவர் ..100வயசு வரை..100th வயசில் 6th நாள் உத்சவத்தில் நம் பெருமாள் அருளியதும் ஸ்ரீ வைகுண்டம் எழுந்து அருளினவர்  ..
..59. நெடும் தூரம்  போனேனோ நாதமுநியைப் போலே ..
..60. அவன் போனான்  என்றேனோ மாருதியாண்டான் போலே..  கிருமி கண்ட சோழா ராஜா பெயர் சொல்லாமல் அவன் என்பார்  ..
..61. அவன் வேண்டம்  என்றேனோ ஆழ்வானை   போலே ..
..62. அத்வைதம்  வென்றேனோ எம்பெருமானாரைப்  போலே ..
..63. அருளாழி  கண்டேனோ  நல்லானைப்  போலே..பிணத்தின் கைகளில் சங்கு சக்கர லாஞ்சனம் பார்த்து சம்ஸ்காரம் பண்ணினவர் நல்லான் சக்கரவர்த்தி ..
..64. அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரை  போலே ..”கெடும் இடராயவெல்லாம்  …கடுவினை  களையலாகும் … எழில்  அணி  அனந்தபுரம் … நடமினோ நமர்கள்  உள்ளீர்  ..10-2..குருகை  காவலப்பன் இடம் யோக விஷயம் கேட்க்காமல் போனார் ..
..65. ஆரியனைப் பிரிந்தேனோ  தெய்வரியாண்டன் போலே..ஆளவந்தாரை பிரிந்த துக்கத்தால் நோய் வாய்ப்பட்டு ஆளவந்தாரை திரு அனந்த புர பெருமாள் என்றவர் ..
..66. அந்தாதி சொன்னேனோ அமுதனாரை போலே ..
..67. அநுகூலம் சொன்னேனோ மால்யவானைப்  -ராவணின் தாத்தா -போலே ..
..68. கள்வன்  இவன்  என்றேனோ லோக குருவைப்  போலே.. “கள்ள வேடத்தைக்  கொண்டு போய்ப்  புறம்  புக்கவாறும் – 5-10-4..கொள்வன் நான் மாவலி  மூவடி தா  என்ற  கள்வனே .-3-8-9….கள்வா! எம்மையும்  ஏழுலகும்  நின்  உள்ளே  தோற்றிய  இறைவா -2-2-10…..” நீரகத்தாய் … கார் வானதுள்ளாய் கள்வா–புள் ஊரும் கள்வா நீ  போகேல்  ..
..69. கடலோசை  என்றேனோ பெரியநம்பியைப் போலே..மாறனேர் நம்பிக்கு சம்ஸ்காரம் பண்ணினார் ..
..70. சுற்றிக்  கிடந்தேனோ திரு  மலை யாண்டான்  போலே  ..
..71. ஸூளுறவு கொண்டேனோ கோட்டி யூரரைப்  போலே ..
..72. உயிராய  பெற்றேனோ ஊமையைப் போலே
..73. உடம்பை வெறுத்தேனோ  நறையூராரைப் போலே.. தொட்டியம் வேத நாராயண பெருமாளை கட்டி கொண்டு உடல் நீத்தவர்  ..
..74. என்னைப்  போல் என்றேனோ உபரிசரனைப்  போலே..யாகத்தில் மிருக தர மறுத்தவர்  ..
..75. யான் சிறியேன்  என்றேனோ திருமலை  நம்பியைப் போலே..
..76. நீரில்குதித்தேனோ  கணபுரத்தாளைப்  போலே நம் பிள்ளை உடன் படகில் செல்லும் போது நீரில் குதித்து காத்தவள் ..
.. 77. நிறோருகம்  கொண்டேனோ காசி  சிங்கனைப்  போலே ..நிறோருகம்   =தாமரை பூ..
.. 78. வாக்கினால்  வென்றேனோ பட்டரைப்  போலே ..
..79. வாயில்  கையிட்டேனோ  எம்பாரைப் போலே ..
..80. தோள் காட்டிவந்தேனோ  பட்டரைப் போலே.. நம் பெருமாள் புறப்பாடில் கூட்டம் கலைக்க பெல்ட் கொண்டு அடிக்கும் போது மற்றவர் மேல் படாமல் பராசர பட்டர் தோள் காட்ட பெல்ட் அடித்தவன் வெட்க்க பட்டானாம்  ..
..81. துறை  வேறு  செய்தேனோ  பகைவரைப் போலே .. திரு வஹீந்திர  புரத்தில் வில்லி புத்தூர் பாகவதர் நித்யம் வேற இடத்தில நீராடுவாராம் ..வர்ண ஆச்ரம தர்மம்  வேறு நித்ய அனுஷ்டானம் வேறு என்று ..
 
————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் கோளூர் அம்மையார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: