திவ்யபிரபந்தத்தில்-பெரிய திருமொழி – மனத்து உள்ளான் பாசுரங்கள்..

..காமனார் தாதை நம் உடை  அடிகள் தம் அடைந்தார் மனத்து இருப்பார் –1-1-3..

..மின்னார் முகில் சேர் திரு வேங்கட மாமலை மேய  என்னானை   என் அப்பன் நெஞ்சில் உளானே -1-10-6..

..தேனே திரு வேங்கட மாமலை மேய  கோனே என் மனம் குடி கொண்டு இருந்தாயே-1-10-7..

..வந்தாய்  என்  மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் -1-10-9..

..வானவர் தங்கள்  சிந்தை போல் என் நெஞ்சமே இனிது வந்து மாதவ மானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற எந்தை -2-1-1..

..தொண்டர் தங்கள் சிந்தை உள்ளே முளைத்து எழுந்த தீங்  கரும்பினை-2-5-1..

..உள்ளுவார்   உள்ளத்தே உறைகின்றானை–2-5-7..

..திரு மார்பனை சிந்தையுள் வைத்தும் என்பீர்-3-2-2..

..இலங்கு  மையார் மணிவண்ணனை எண்ணி நும் தம் மனத்தே இருத்தும் படி வாழ வல்லீர்  -3-2-6..

..தெய்வ திரு  மா மலர் மங்கை தங்கு திரு மார்பனை சிந்தையுள் வைத்தும் என்பீர் -3-2-7..

..வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும் என் சிந்தனைக்கு இனியாய்  ! திருவே ! என் ஆர் உயிரே ! -3-5-1..

..அரவணை வேலை தலை கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய்  -3-5-2..

..நென்னல் போய் வருமஎன்று எண்ணி இராமை என் மனத்தே புகுந்தது இம்மைக்கு என்று இருந்தே -3-5-3..

..கந்த மா மலர் எட்டும்  இட்டு நின் காமர் சேவடி கை தொழும் எழும் புந்தியேன் மனத்தே புகுந்தாயை போகல் ஒட்டேன்-3-5-5..

..-உலவு திரை கடல் பள்ளி கொண்டு வந்து உன் அடியேன் மனம் புகுந்த அப்  புலவ புண்ணியனே !  புகுந்தாயை போசல் ஒட்டேன்    -3-5-7..

.. அருள் புரிந்து இங்கு என்னுள் புகுந்தாய் ! இனி போயினால் அறையோ  !  -3-5-8..

..களங் கனி  வண்ணா ! கண்ணனே ! என் தன் கார் முகிலே  ! என நினைந்திட்டு  உளங் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்து ஊறிய தேனை 4-3-9..

..சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே ! மருவினிய மைந்தா ! அம் தண் ஆலி மாலே!  சோலை மழகளிறே !..-4-9-2..

..சிந்தை தன்னுள் முந்தி நிற்றீர் சிறிதும் திரு மேனி இந்த வண்ணம் என்று காட்டீர்  இந்தளூரீரே   -4-9-9..

..பெருகு  காதல் அடியேன் உள்ளம் உருக புகுந்த ஒருவரூர் போல் -5-2-9..

..தன் அடியார் மனத்து என்றும் தேனாகி  அமுதாகி திகழ்ந்தானை -5-6-3..

..சிந்தனையை தவநெறியை திரு மாலை பிரியாது வந்து எனது மனத்து இருந்த வட மலையை -5-6-7..

..அடியேற்கு அணியனாய்   வந்து என் சிந்தையுள் வெந் துயர் அறுக்கும் ஆயனாய் அன்று குன்றமொன்று எடுத்தான் -5-7-9..

..வானே  ! மா நிலமே ! வந்து வந்து என் மனத்து இருந்த தேனே  ! நின் அடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே !-6-2-3..

.. உள்ளே  நின்று என் உள்ளம்  குளிரும் ஒருவா  ! கள்வா ! கடல்  மல்லை  கிடந்த கரும்பே ! வள்ளால் ! உன்னை எங்கன்னம் மறக்கேனே?-7-1-4..

..என் மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா !-7-2-2..

..என் நெஞ்சின் உள்ளே உறைவாய் உறைந்தது  தான்    அறியாது இருந்து அறியேன் அடியேன்  -7-2-4..

..என் நெஞ்சின் உள்ளே  புகுந்தாயை போகல் ஒட்டேன்–7-2-5..

..என் நெஞ்சின் உள்ளே  வந்தாயை போகல் ஒட்டேன்-7-2-6..

..என் நெஞ்சத்து  உள்ள இருந்து இங்கு இனி போய் பிறர் ஒருவர் வன் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன்  -7-2-7..

.. இப் போது என் நெஞ்சின் உள்ளே  புகுந்தாயை போகல் ஒட்டேன் -7-2-8..

..அடியேன் மனம் புகுந்த தேனே ! தீம்கரும்பின் தெளிவே ! என் சிந்தை தன்னால் நானே  எய்த பெற்றேன் நறையூர் நின்ற நம்பீயோ ! -7-2-9..

..வந்த நாள் வந்து என் நெஞ்சு  இடம் கொண்டான் மற்றோர் நெஞ்சு அறியான் -7-3-3..

..இங்கே புகுந்து என் கண்ணும் நெஞ்சும் வாயும் இடம்கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன்னுள் விண்ணுளார் பெருமானை எம்மானை -7-3-7..

..என் மனத்தே இருக்கும் புகழ் தஞ்சை ஆளியை-7-3-9..

..எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே -7-4-2..
..தண் சேறை எம்பெருமான் தாளை நாளும் உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என் உள்ளம் உருகுமாறே -7-4-9..
..வெள்ளத்து உள்ளோர் ஆலிலை மேல் மேவி அடியேன் மனம் புகுந்து என் மனத்து உள்ளும் கண் உள்ளும் நின்றார் -7-5-4..
..ஏடிலங்கு  தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்தருளி மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார்-7-5-6..
..மலை புகுந்தது மலர் அணை மேல் வைகி அடியேன் மனம் புகுந்து என் நீல கண்கள் பனி மல்க நின்றார் -7-5-7..

..பந்தார் மெல் விரல் நல் வளை தோளி பாவை பூ மகள் தன்னோடும் உடனே வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய்  -7-7-2..

..சிறுபுலியூர் சல சயனத்து உள்ளும் என் உள்ளத்து உள்ளும் உறைவாரை உள்ளீரே -7-9-1..

..மறை நான்கின் உளாயோ தீயோம்புகை மறையோர் சிறு புலியூர் சல சயனத்தாயோ உனது அடியார் மனத்தாயோ அறியேன் ..7-9-7..

..மாயனை மதிள் கோவலிடை கழி மைந்தனை அன்றி அந்தணர் சிந்தையுள் ஈசனை 7-10-4..

..எம்மானை எம்பிரானை ஈசனை என் மனத்துள் அம்மானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே -8-9-1..

..மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் புக்கானை புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை தக்கானை கடிகை தடம் குன்றின் மிசை இருந்த அக்கார கனியை அடைந்து உய்ந்து போனேனே -8-9-4..

..வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை எந்தாய் பாய் அறியாய் இதுவே  அமையாதோ -8-9-5..

..தேவபிரான் திரு மா மகளை பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட பேர் அருள் ஆளன்
-9-5-10..

..எங்கள் எம் இறை எம்பிரான் இமையோர்க்கு நாயகன் எத்தடியவர் தங்கள் தம் மனத்து பிரியாது அருள் புரிவான் -9-10-1..

..அடியேனை ஆளுகந்து ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான் -9-10-8..

..நறையூர் கண்டு என் உடலையுள் புகுந்து உள்ளம் உருக்கி உண் விடலையை சென்று காண்டும் மெய்யதுள்ளே -10-1-5..

..கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள் என்னோ கழன்ற இவை என்ன மாயங்கள்  -11-3-7..

..வெள்ளத்தான் வேங்கடத்தானேலும் கலிகன்றி உள்ளத்தின் உள்ளே உளன் கண்டாய் சாழலே  -11-5-10..

Thirumangai Azvaar, Azvaar, Emberumaanaar, Jeeyar thiru Adikaley sarannam…திருமங்கை ஆழ்வார், ஆழ்வார் ,எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: