திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-2-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 9, 2012

ஏத்த ஏழுலகும் கொண்ட கோலக்
கூத்தனைக் குருகூர்ச் சடகோ பன்சொல்
வாய்த்த ஆயிரத் துள்இவை பத்துடன்
ஏத்த வல்லவர்க்கு இல்லைஓர் ஊனமே.

    பொ – ரை : ‘ஏழ் உலகங்களிலும் உள்ளவர் எல்லாரும் ஏத்த, எல்லா உலகங்களையும் தன் திருவடியால் அளந்துகொண்ட அழகு பொருந்திய கூத்தன் விஷயமாக, திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபரால் அருளிச்செய்யப்பட்ட பொருந்திய ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் பொருள் உணர்வோடு கற்று உணர்ந்து துதிக்க வல்லவர் ஒரு குற்றமும் இலர் ஆவர்,’ என்பதாம்.

    வி – கு : ‘ஏத்த, கொண்ட கூத்தன்’ என்க. வல்லவர் – வினையாலணையும் பெயர். ஊனம் – குற்றம். குற்றமாவது, ஒப்பாரும் மிக்காரும் இலாத

இறைவனை மற்றைத் தேவர்கட்கு ஒப்ப நினைத்தல்; அன்றி, அவனைக் குறைய நினைத்தல்; அன்றி, அவனைக்காட்டிலும் மற்றைத் தேவர்களை உயர்வாக நினைத்தல்; ஆக, இவற்றால் உளவாய குற்றம்.

    ஈடு : முடிவில், ‘இத்திருவாய் மொழியைக் கற்று உணரவல்லவர்கட்கு, மற்றைத் தேவர்களை இறைவர்களாக நினைத்தலாகிய குற்றம் இல்லை,’ என்கிறார்.

    ஏழ் உலகம் ஏத்த ஏழ் உலகும் கொண்ட – 1‘வானத்திலும் பூமியிலும் உள்ள அமரர் கூட்டமும், அவ்வாறே மனிதர்களும், அங்கேயே சஞ்சரிக்கிற தேவர்களும் துதிக்க, இவ்வுலகங்களை எல்லாம் தன் அடிகளால் அளந்தவன் எவனோ, அவ்விறைவனான திரிவிக்கிரமன், என்னுடைய மங்களங்களின் விருத்தியின் பொருட்டு எனக்கு எப் பொழுதும் அருள் புரியவேண்டும்,’ என்கிறபடியே, ஏத்தித் துதிக்க, அம்மகிழ்ச்சியாலே எல்லா உலகங்களையும் திருவடியின்கீழே இட்டுக் கொண்ட. கோலக் கூத்தனை – திருவுலகு அளத்தருளினபோது வல்லார் ஆடியது போன்று இருந்தானாதலின் ‘கூத்தனை’ என்றும், அப்போதைய வடிவழகின் மிகுதியினைக் கூறுவார், ‘கோலக் கூத்தனை’ என்றும் அருளிச்செய்கிறார். இதனால், இந்திரன் இழந்த தனது ராஜ்யத்தைப் பெறும் பொருட்டு வணங்கியதுபோன்று, இவர் ஒரு பயனைக் கருதி வணங்குமவர் அல்லர் என்பதூஉம், அவ்விறைவனுடைய வடிவழகினை அனுபவித்தலே இவர்க்குப் பேறு என்பதூஉம் போதரும்.

    குருகூர்ச் சடகோபன் சொல் – 2ஆப்திக்கு இன்னார் கூறியது என்ன வேண்டுதலின், ‘குருகூர்ச் சடகோபன்’ என்கிறார். இதனால், வேதாந்தத்தைக் காட்டிலும் ஆழ்வாரிடத்தில் பிறந்த திருவாய்மொழிக்குள்ள உயர்குடிப்பிறப்பின் சிறப்பினைக் கூறியபடி வாய்ந்த ஆயிரம் இத்தனைபோது இவர் கூறி வந்த பரம்பொருள் நேர்பட்டாற்போலேயாயிற்று இப்பிரபந்தமும் நேர்பட்டபடி. அன்றி,

1வாச்சியத்திற்காட்டில் வாசகம்நேர்பட்டபடி என்றுமாம். அதாவது, விஷயத்தை உள்ளபடி பேசவற்றாய் இருக்கை. இவை பத்து உடன் ஏத்த வல்லவர்க்கு – இத்திருவாய்மொழியை மனமாரத் துதிக்க வல்லவர்கட்கு. ஓர் ஊனம் இல்லை – இவ்வாத்துமாவுக்கு ஊனமாவது இறைவர் அல்லாதாரை இறைவர் என்று எண்ணுதலும், இறைவனை இறைவன் என்று எண்ணாமையும். இப்படி வரக்கூடிய ஊனம் இது கற்றார்க்கு இல்லை.

    முதற்பாட்டில், மேல் பரக்க அருளிச்செய்கிற இத்திருவாய் மொழியின் அர்த்தத்தைத் தொகுத்து அருளிச்செய்தார். இரண்டாம் பாசுரம் முதல், துக்கத்தைப் போக்குமவன் ஆதலானும், சீலவான் ஆதலானும், சுகுமாரன் ஆதலானும், தாமரைக்கண்ணன் ஆதலானும், ஆபத்சகன் ஆகையானும், அகடிதகடநா சமர்த்தன் ஆதலானும், படைத்தல் காத்தல்களைச் செய்கையாலும், அழித்தலைச் செய்கையாலும், ஈஸ்வர அபிமானிகளாய் இருக்கிறவர்களுடைய துதிகள் முதலியவைகளாலும், இப்படிப் பல வகைகளாலே அவனுடைய பரத்துவத்தை அருளிச்செய்து, இது கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக்கட்டினார்.

நிகமத்தில் இல்லையோர் ஊனமே
தேவாந்தர  பஜனம் -செய்யும் ஊனம் இல்லை என்கிறார் .
ஏத்த ஏழு உலகும் கொண்ட
சங்கமாக ஏத்த -காழியன் கட்டம் -
மாங்கல்ய வருத்தி ஸ்லோகம் -
ஹர்ஷத்தாலே -
ஏழு உலகும் கொண்ட
தன் திருவடிகளில் இட்டு கொண்டான்
கோல கூத்தனலகான
திரு உலகு  அளக்கும் பொழுது -வல்லார் ஆடினது போல் இருந்தது
ஆப்திக்கு இன்னார் சொல்வதுகுருகூர் சடகோபன்
வேதம் போல் தான் தோன்றி இல்லை
சடகோபன்-வேதாந்தம் காட்டில் -ஆபிஜாத்யம் -உயர்ந்த குலம் -
வாய்த்த ஆயிரம்
பர வஸ்து நேர் பட்டது போல் திருவாய் மொழி யும் நேர் பட்டது -வாய்த்தது
வாசகம் வாச்யன்
விச்வாசத் துடன் – ஏத்த
ச ஹ்ருதயமாக ஏத்த
அவன் இடம் பரத்வம் பண்ணாமையும் மற்றவர் இடம் பரத்வம் பண்ணுகை யும்  ஊனம்
துக்க நிவர்தகன் சீலன் -சிருஷ்டி சத்தி சம்காரம்
ஈஸ்வர ஸ்தோத்ரம்
பகு பிரகாரங்கள்  வழியாக ல்பரத்வம்  காட்டினார்

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

        திண்ணியதாம் மாறன் திருமால் பரத்துவத்தை
நண்ணிஅவ தாரத்தே நன்குரைத்த – வண்ணமறிந்து
அற்றார்கள் யாவர் அவரடிக்கே ஆங்கவர்பால்
உற்றாரை மேலிடாது ஊன்.

திருமால் பரத்வத்தை திண்ணியதாக
நண்ணி
அவதாரத்தே நன்கு உரைத்தார்
தாழ விட்ட இடங்களிலும் பரத்வம் பொழிய
அறிந்து
அற்றார்கள்
அற்று தீர்ந்தார் -அவரடிக்கே
ஊனம் சேராது

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-2-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 9, 2012

‘கள்வா! எம்மையும் ஏழுல கும்நின்
உள்ளே தோற்றிய இறைவ!’ என்று
வெள்ளே றன் நான்முகன் இந்திரன் வானவர்
புள்ளூர் திகழல் பணிந்துஏத் துவரே.

    பொ – ரை : வெண்மை நிறம் பொருந்திய இடபத்தை வாகனமாகவுடைய சிவனும் பிரமனும் இந்திரனும் மற்றைத் தேவர்களும், ‘கள்வனே! எங்களையும் மற்றை உலகங்ளையும்  நின்னிடத்தினின்றும் தோன்றச்செய்த இறைவனே!’ என்று, கருடவாகனத்தையுடைய இறைவனுடைய திருவடிகளை வணங்கித் துதிப்பார்கள்.

    வி-கு : ‘கள்வா, இறைவ’ என்பன விளிப்பெயர்கள். ‘என்று பணிந்து ஏத்துவர்,’ என முடிக்க. ஊர்தி – ஊர்கின்றவன்; ஆண்பாற் பெயர். இத்திருப்பாசுரத்தின் முதலிரண்டு அடிகளைப் பரிபாடல் மூன்றாம் பாட்டின் முதல் பதினாறு அடிகளோடு ஒப்பு நோக்கல் தகும்.

    ஈடு : பத்தாம் பாட்டு. ‘இவ்வளவும் வர. நான் கூறிவந்த பரத்துவத்தை, நீங்கள் அடையத் தக்க தெய்வங்களாக நினைந்திருக்கிற அவர்களுடைய 3மேலெழுத்தைக் கொண்டாயினும் நம்புங்கோள்,’ என்கிறார்.

 கள்வா – 1சர்வேஸ்வரன் பக்கலிலே வந்து வரம் கொள்கிற இடத்திலே, ‘தேவர் இன்னம் எனக்கு ஒரு வரம் தரவேண்டும்.; நீர் தந்த வரம் நிலை நிற்கும்படி என் பக்கலிலே வந்து ஒரு வரம் பெற்றுப் போகவேண்டும்,’ என்று வேண்டிக்கொள்ள ‘அப்படியே செய்கிறோம்’ என்று விட்டு, ‘உருக்குமிணிப் பிராட்டிக்கு ஒரு பிள்ளை வேண்டும்’ என்று சென்று நின்று, ‘நமோ கண்டாய கர்ணாய’ என்றாற்போல ஏத்த, 2‘பார்வதியோடு கூடிய சிவன், இருகைகளையும் குவித்துக்கொண்டு விஷ்ணுவைப் பார்த்து, விஷ்ணுவினுடைய பெருமையினைச் சொல்லுதற்குத் தொடங்கினான்’ என்கிற படியே, புறப்பட்டு, 3‘நீ கறுப்புடுத்துத் தாழ நின்ற நிலையிலே இச் செயலைச் செய்தால் இதனை நாட்டார் 4‘மெய்’ என்றிருப்பார்களோ? ‘கள்வா’ என்பர்கள். ஈண்டுக் களவாவது, தன் ஸ்தவதந்தர்யத்தை மறைத்துப் பரதந்திரனாய் நிற்கும் நிலை. கைலாச யாத்திரியிலே 5‘நமோ கண்டாய கர்ணாய நம:’ என்று துதி செய்த அறியாத வாயானபடியால் 6மீன் துடிக்கிறபடி பாராய்’ என்றான். 7‘நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த’ என்கிறபடியே, துதி செய்து நாத்தழும்புபட்டுக் கிடப்பது அவர்களுக்கு அன்றோ?

    இவன் தாடி நின்ற நிலையும் துதி செய்த நிலையும் களவு என்னுமிடத்தை விளக்குகிறார் மேல்: எம்மையும் ஏழ் உலகும் நின் உள்ளே தோற்றிய, ‘நீ இவற்றைப் படைக்கின்ற காலத்தில்எங்களை முன்னே படைத்து, பின்னர் மற்றைப்பொருள்கள் எல்லாவற்றையும் படைத்தாய். இறைவ – இறைவனே!’ என்பார்கள். ‘இங்ஙனே சொல்லுகிறவர்கள்தாம் யார்? என்னில், வெள் ஏறன் நான்முகன் இந்திரன் வானவர் – சிவன் முதலானோர். ‘ஆயின், கடவுளை வணங்குகின்றவர்கள்  வாகனத்தோடு வருதல் பொருந்துமோ?’ எனின்,இராஜசேவை செய்வார் தத்தமது அடையாளங்களோடே சட்டையும் பிரம்புமாய்ச் சேவிக்குமாறு போன்று, இவர்களும் தத்தம் அடையாளங்களோடே வந்து சேவிக்கிறார்கள். 1‘இரவியர் மணிநெடுந்தேரோடும் இவரோ? இறையவர் பதினொரு விடையரும் இவரோ?’ மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ?’ என்றார் தொண்டரடிப்பொடிகள். புள் ஊர்தி கழல் பணிந்து ஏத்துவர் – சர்வேஸ்வரன் பெரிய பிராட்டியாரும் தானுமாய் இருக்கிற இருப்பில் புக முடியாமையாலே, திருப்பாற்கடலுக்கு இவ்வருகே கூப்பிட்டால், இவர்கட்குக் காட்சி கொடுக்கைக்காகத் திருவடி திருத்தோளில் ஏறிப் புறப்படுவான், அப்பொழுது 2ஆட்டத்து வெளியில் யானைக்காலில் துகையுண்ணா நிற்பார்கள்.

நீங்கள் ஆஸ்ரயநீயராக நினைத்து இருப்பீர்கள் விச்வசித்து
வேறு யாரோ நினைத்து
அவர்களே இவனை ஸ்தோத்ரம் செய்யும் பொழுது
அவர்களின் மேல் எழுத்து கை எழுத்து இட்டு ஒப்புக் கொண்டு
விஸ்வசியும் கோள்
கள்வா – எம்மையும் எழ உலகும் நின் உள்ளே தோற்றிய இறைவா ஸ்வாமி
என்று வெளுத்த  ஏறு   ருத்ரன் பிரமன் இந்த்ரன்  தேவர் அனைவரும் ஏத்துவர்
இன்னும் வரம் கேட்டு அர்திக்க
என்னிடம் வந்து வரம் வாங்கி போ அந்த செயலால் எல்லாராலும் பூஜிக்க படுவேன்
அப்படியே செய்கிறேன் என்று விட்டு
ருக்மிணி பிராட்டி உடன்பிள்ளை வரம்
நம கண்டாய கட கடாயச
அர்த்தம் இன்றி
கருப்புடைய தாழ விட்டு -நின்ற நிலையில் மனுஷ்ய அவதாரத்தில் -செய்தாயே
பரத்வத்தில் கேடு இல்லை
ராஜா மாறு வேஷம் போக கருப்புடுத்து சோதித்து -விபவம்
கார்யம் மந்திரித்து சோதித்து -
பிரஜையாக குடி மகன் போல் காட்டிக் கொண்டு போக -=
இத்தை நாட்டார் மெய் என்று நினைப்பார்களா -
கள்வா என்பர்கள்
ஸ்வா தந்த்ர்யம் மறைத்து பாரதந்த்ர்யமாக இருக்கும் நிலை கள்வா
ஹரி வம்சம் -
ஸ்தோத்ரம் பண்ணிய படியை கேட்ட பிராமணன் -புராண ஸ்ரவண வேளையில் -
இதற்க்கு முன்பு ஸ்தோத்ரம் சொல்லி அறியாமல் –மீன் துடிக்கும்  படி -பாராய் -
நாத்தழும்ப நான் முகனும் ஈசனும் -அவர்களுக்கு உண்டே ஸ்தோத்ரம் செய்வதால் .
களவு கிரித்ரிமம்
எங்களையும் உண்டாக்கி -
முதலில் பரமனை ருத்ரனை எம்மையும் முதலில்
இறைவ என்பர்
வெளுத்த ஏற்றை வாகனமாக கொண்ட ருத்ரன்
ராஜ சேவை பண்ணுவார் தம் தம் அடையாளம் சட்டையும் பிரம்புமாக போவார்
மயில் கட்டு -தலை பா உடன் -போவார்கள் -
இறைவையர்-விடையர் மயிலினன் -தொண்டர் அடி போடி
புள்ளை ஊர்தி -சர்வேஸ்வரன்
பெரிய பிராட்டியார் இருக்கும் இருப்பு காண மாட்டாமல் -அந்த புரம்புகப் பெறாமையாலே
ஆட்டத்து வெளியில் ஆனைக் காலில் துவை உண்டு இருப்பார்கள்
யானை ஏறி போகும் பொழுது காண காத்து இருப்பார்கள்
திரு பாற்கடலில் இப்பால் கதற காட்சி கொடுக்க -புள் ஏறி போக
ஆட்டது வெளி -யானை மேல் ராஜா ஏறும் பொழுது -யானைக் காலில் விழுந்து கூப்பிடுவாரை  போலே
யார் பரன்
வையாளி வெளியிலே -நிர் அபிமானராய் துவை உண்டு
நின் உள்ளே தோற்றிய இறைவா -
உன் இடத்தில்
கேசவ திரு நாமம் இங்கே பெற்றார் சர்வேஸ்வரன்
கீதி-ககா பிரமம் ஈசானன் ருத்ரன் ஆவாம் தவாங்கம் சம்பவோ தஸ்மாத்  ப்ரமன்னோ ராம தாஸ்மான் கேசவ நாம
நின் உள்ளே
ஆவாம் தவாங்கோ -அவர்கள் வார்த்தை தானே இது தான் -

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-2-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 9, 2012

 காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்துதன் உந்தி உள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ உலகுகளே.

    பொ-ரை : எல்லா உயிர்களையும் பாதுகாத்தலையே தனக்கு இயல்பாகவுடையவன் கண்ணபிரானாகிய நம் இறைவன்; அவன், அழிக்கும் காலம் வந்தவாறே, எல்லா உயிர்களையும் தன் திருமேனியில் சேரச் செய்து, பின்னர், தனது திருநாபிக்கமலத்திலே, எல்லாக்குணங்களும் பொருந்திய பிரமனையும், இந்திரனையும், தேவர்களையும், தேவர்களுக்குரிய உலகங்களையும் உண்டாக்கினான்.

    வி – கு : ‘தன உந்தியுள்ளே ஆக்கினான்’ எனக் கூட்டுக. சேர்க்கை செய்தல் – அழித்தல்; ஒரு சொல். இனி, தன் திருமேனியில் சேர்தலாகிய தொழிலைச் செய்து என்று பொருள் உரைத்து இதனை இருசொல்லாகக் கோடலுமாம்.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. ‘படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் இம்முத்தொழிலையும் 1தன் அதீனமாம்படி இருக்கின்றான் ஆதலானும், இவனே இறைவன்,’ என்கிறார்.

    காக்கும் இயல்வினன் – 2‘செல்வங்களைக் கொடுப்பதிலும் ஆபத்துக்களை நீக்குவதிலும் ஆடவர் திலகனான திருமகள் கேள்வனைத் தவிர, வேறு ஒருவரும் ஆற்றலுடையவராகக் காணப்படுகின்றார் இலர்,’ என்கிறபடியே, காப்பாற்றுதலை இயற்கையாகவுடையவன். கண்ண பெருமான் – காப்பாற்றும்பொருட்டுக் கிருஷ்ணனாய் வந்து அவதரித்த இறைவன். சேர்க்கை செய்து – அழிக்கிற காலம் வந்த அளவில், காரிய வடிவமான இவ்வுலகங்கள் முழுதும் தன் பக்கலில்சேர்தலாகிய செயலைச் செய்து. 1தன் உந்தியுள்ளே – தன்னுடைய திருநாபிக்கமலத்தில். வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர் தெய்வ உலகுகள் ஆக்கினான் – பிரமன் இந்திரன் மற்றும் உண்டான தேவர்களோடே கூட அவர்களுக்கு இருப்பிடமான உலகங்களையும் கட்டளைப்பட உண்டாக்கினான். இறைவன், 2பிரமனைப் படைத்து அவனை நோக்கி, ‘உலகத்தை எல்லாம் படைப்பாய்’ என்று ஒருகால் ஏவிவிட்டால் பின்னைத் தன்னையும் கேட்க வேண்டாதபடி படைத்தலின் ஆற்றல் வாய்த்தவனாதலின் ‘வாய்த்த திசைமுகன்’ என்கிறார்.

. ‘பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனை’–
  என்றார் இளங்கோவடிகள்.

மூன்றும் சுவாதீனம்
சம்காரம் சங்கை வேண்டாம்
காக்கும் இயல்பினன்
சேர்க்கை செய்து உந்தி உள்ளே
திசை முகன்
தெய்வ உலகு ஆக்கினான்
நல்லது சேரவும் தீயதும் விலக்க சமர்த்தன் புருஷோத்தமன் ஒருவனே -
கண்ணா பெருமான் -நிரூபிக்க கிரிஷ்ணனான வந்த சர்வச்வரன்
கிரிஷ்ணனை எ தொட்டு கொண்டு போவார்
கிருஷ்ண த்ர்ஷ்ணா தத்வம்
கண்ணன் அடி மேல் குருகூர் சடகோபன்
தன் பக்கல் சேர்த்து கொண்டு
திரு நாபி கமலத்தில் ஆக்கி
வாய்த்த திசை முகன்
ஒரு கால் சிருஷ்டி என்று விட்டால் பின்பு –தன்னையும் கேட்க்காமல் செய்து கொண்டே -வாய்த்த அடை மொழி -
தானே சிருஷ்டிக்கும் சக்தன்
தெய்வ லோககங்களையும் கட்டளை பட உண்டாக்கி கொடுத்தான் .

 

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-2-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 9, 2012

கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப் 1பிரான்அன்றி யாரே
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தம்முள்
இருத்திக் காக்கும் இயல்வினரே?

    பொ-ரை : ‘தன் நினைவிலேயே எல்லாத் தேவர்களையும் எல்லாப் பொருள்களையும் உண்டாக்கின ஆச்சரியமான செயல்களையுடையவனை அல்லாமல், இம்மூன்று உலகங்களையும் திருந்தச் செய்து, தனது திருவுள்ளத்தே வைத்து, ஒரு நோவும் வாராதபடி காத்து நோக்குகின்ற இயல்பினையுடையவர் வேறு யாவர்? ஒருவரும் இலர்,’ என்றவாறு.

    வி-கு : ‘காக்கும் இயல்வினர் மாயப் பிரான் அன்றி யாரே?’ எனக்கூட்டுக. வருத்தித்த – உண்டாக்கின, காக்கும் – எச்சம்.

    ஈடு : எட்டாம் பாட்டு. படைத்தலையும் காத்தலையும் தனக்கு அதீனமாக உடையவன் ஆகையாலே இவனே இறைவன் என்கிறார்.

    கருத்தில் தேவும். இயல்வினர் யாரே – ‘தன்னுடைய நினைவினாலே தேவ சாதியையும் மற்றும் உண்டான எல்லாப் பொருள்களையும் உண்டாக்கின ஆச்சரியத்தையுடையனான சர்வேஸ்வரனை அன்றி, மூன்று உலகங்களையும் திண்ணிதான நிலையினையுடைய வாம்படி திருத்தி, தம்முள் இருத்தி, அவ்வப் பொருள்கட்குத் தகுதியான பாதுகாத்தல்களையும் திருவுள்ளத்தே வைத்துப் பாதுகாத்தலைச் செய்யுமிதனை 2இயல்வாக உடையவர் யார்?’ என்கிறார். 3‘‘காப்பாற்றுவதில் நிலைநின்றவனாயும் எல்லா உயிர்கட்கும் ஈஸ்வரனாயும் மகாத்துமாவாயும் இருக்கிற விஷ்ணுவைத் தவிர, காத்தலாகிய ஆற்றல் வேறு ஒருவர்க்கும் இன்று,’ என்பது விஷ்ணுபுராணம்.

சிருஷ்டியும் பாலனும் இவனே ஈஸ்வரன் காட்டி கொடுக்கும்

கருத்தில் -சங்கல்பத்தால்
தேவும் எப் பொருளும்
வருத்தித வ்ருதித்த்
மாயப் பிரானை அன்றி
திருத்திமூ உலகும் தன்னுள் இருத்தி
தின்னியதாக
ஸ்வபாவமாக உடையவன்
பகுச்யாம் பிரஜா -சங்கல்பம்
வர்திப்பித்த -உண்டாக்கின -
மாய பிரான் அன்றி யாரே -
திண் நிலை மூ உலகு -திண்ணியதாக ஸ்திதி உடையதாக திருத்தி
உண்டாக்கி திருத்தி வைத்து -
அதுக்கு மேல் தன்னுள் இருத்தி ரஷனம் -அனுபிரவேசித்து காக்கும் இயல்பினன்
இத்தை ஸ்வபாவமாக உடையவர்
வேறு யார் -

 

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-2-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 9, 2012

பள்ளி ஆலிலை ஏழுலகும் கொள்ளும்
வள்ளல் வல்வ யிற்றுப் பெருமான்
உள்உள் ஆர்அறி வார்அ வன்தன்
கள்ள மாய மனக்க ருத்தே?

    பொ – ரை : ‘ஆலந்தளிராகிய படுக்கையில் சயனித்திருக்கிற வள்ளல் தன்மையும் வலிமையும் பொருந்திய வயிற்றையுடைய பெருமான்; ஒருவர்க்கும் தோன்றாத ஆச்சரியமான, உள்ளே உள்ளே செல்லுகின்ற, அவனுடைய மனத்தின் எண்ணத்தை அறிய வல்லவர் எவர்தாம்? ஒருவர் இலர்,’ என்றவாறு.

    வி – கு : ‘கொள்ளும்’ என்னும் எச்சத்தை ‘வயிறு’ என்னும் பெயருடன் முடிக்க. ‘வள்ளல், வல்’ இவ்விரண்டும், வயிற்றுக்கு அடைமொழி. கள்ளம் – ஒருவருக்கு அறிய முடியாத தன்மை. மாயம் – ஆச்சரியம். ‘அறிவார் ஆர்?’ என்ற வினா, இன்மை குறித்து நின்றது.

    ஈடு : ஏழாம் பாட்டு, 1‘அகடிதகடநா சாமர்த்தியத்தாலும் இவனே இறைவன்,’ என்கிறார்.

    பள்ளி ஆல் இலை – அப்பொழுது தோன்றியது ஓர் ஆலந்தளிராகிய படுக்கையிலே ஏழ் உலகும் கொள்ளும் வள்ளல் வல்வயிற்றுப் பெருமான் – ஏழ் உலகங்களையும் வயிற்றிலே வைத்து அப்படுக்கையில் அறிதுயில் செய்கிறின்றவன்.2உள்ளே புக்க உலகங்கட்கு இடம் கொடுத்தலோடு அமையது. இன்னம் வேறு தனியாக உலகங்கள் இருப்பினும், அவற்றிற்கும் இடம் கொடுக்க வல்ல வயிறு ஆதலின், ‘வள்ளல் வயிறு’ என்றும், உள்ளே புக்க பொருள்கட்கு அச்சமென்பது சிறிதும் இல்லாத வண்ணம் காப்பாற்ற வல்ல மிடுக்கினையுடைத்தாய் இருத்தலின், ‘வல் வயிறு’என்றும், இப்படிக் காப்பாற்ற வேண்டிய கடமையினையுடையவனாதலின், காப்பாற்றுகிறான் என்பார்,‘பெருமான்’ என்றும் அருளிச் செய்கிறார்.அவன் தன் கள்ளம் மாயம் மனம் கருத்தை ஆர் அறிவார் – ஒருவரும் அறியாதவாறு இன்னம் உள்ளே உள்ளே இருப்பதாய், அறிந்த தன்மை ஆச்சரியமாக இருக்கிற அவனுடைய மனத்தின் வியாபாரத்தை யாவர் அறிவார்? ‘ஏன்? நீர் அறிந்து சொன்னீரே?’ எனின், கண்டது ஒன்றைச் சொன்னேன் இத்தனை. போக்கி, ‘முழுதும் யான் தான் அறிந்தேனோ?’ என்பார், ‘யார் அறிவார்?’ என்கிறார்.

அகதி கடனா சமர்த்தன்
பெரிய உலகம் சிறிய வயிற்றில் கொண்டவனே பரன்
ஏழாம் பாட்டு -
ஆல் இலை சரித்ரம் -
ஏழு உலகும் கொண்ட வாளால்
வால் வாயிற்று பெருமான்
அவன்தான் கள்ள கிருத்ரிமம்
மாய மனக் கருத்தை
உள்ளே சென்று யார் அறிவர்
பள்ளி -படுக்கை
பவனாய்- இருப்பதாய் -முகிளும் தளிர்  –ஆல் இலை -கூட இல்லை தளிர் தான்
அதிலே ஏழு லோகமும் -சப்த லோகம்
வள்ளல் -இன்னும் இடமாய் உண்டாகும் படி -வஸ்து இல்லையே -
வலிமை வயிற்ருக்கு உல் புகுந்த வச்துவுக்குபய பிரசங்கமின்றி மிடுக்கை உடையவன்
பெருமான் -ரஷிக்க வேண்டியது பெருமான் ஆனபடியால் -உடையவன் ஸ்வாமி சொத்து -பாவம்
அவனுடைய உள்ளுள் -கள்ள மாய மன கருத்தை யார் அறிவார்
கண்ட ஒன்றை பார்த்த  இத்தை  சொல்வதை போக்கி
யாருக்கும் அறியாதபடி கள்ளமாய்
ஆச்சர்யமாய் -மாய
மார்கண்டேயர் கண்ணால் கண்டதை சொல்லி நாமும் சொல்லிக் கொண்டு இருக்கிறோம் .
நளிர் மதி சடையன் எங்கோ முதல் தீர்த்த காரர்
அம் கண்ஞாலம் உண்ட பொது வெள்ளி வெற்பு அகன்றதோ கைலாச்யம்
பாஹ்யமான வியாபாரமும் நிலை அன்று
வெளி செயலும் பேச நிலம் அன்று

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-2-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 8, 2012

எவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வுஇன்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர்மூர்த்தி
அவர்எம் ஆழி அம்பள்ளி யாரே.

    பொ – ரை : உயர்திணையும் அஃறிணையுமான எல்லாப் பொருள்களும் ஒன்றோடு ஒன்று நெருக்கு உண்ணாதவாறு தன் வயிற்றில் ஒடுங்கும்படி நின்ற, பரந்து விரிந்த ஞானவெள்ளத்தினையுடைய ஒளி மிகுந்த திருமேனியையுடையவர் யாவர்? அவர்தாம், எமக்காகத் திருப்பாற் கடலில் அறிதுயில் செய்கின்றவர் ஆவர்.

    வி-கு :  ‘இன்றி ஒடுங்க நின்ற’ என முடிக்கஅவ்வாறு முடித்து ‘நின்ற’ என்பதனை ‘மூர்த்தி’ என்பதனோடு முடிக்க. மூர்த்தி – திரு மேனியையுடையவன். கவர்வு – ஒரு பொருளும் மற்றொரு பொருளும் நெருக்குண்டு அந்நெருக்கால் வருந்தல். பவர் – பரப்பு.

    ஈடு : ஆறாம் பாட்டு. 3‘ஆபத்துக் காலத்தில் துணைவன் ஆகையாலும் இவனே இறைவன்,’ என்கிறார்.

 எவரும் யாவையும் எல்லாப் பொருளும் – அறிவுடைப் பொருளும் அறிவில்லாத பொருளும் ஆகிய எல்லாப்பொருள்களும் பிரளய காலத்தில் தன் வயிற்றில் சேர்ந்திருந்தபோது. கவர்வு இன்றி – கவர்கையாவது, பற்றுகை: அதாவது, துன்பமாய் ஒருவரை ஒருவர் நெருக்காதபடி. தன்னுள் ஒடுங்க நின்ற -1‘உலகத்தில் சராசரங்களாக என்னால் பார்க்கப்பட்டவை எத்துணை உண்டோ, அவை எல்லாவற்றையும் நான் விஷ்ணுவினுடைய திருவயிற்றில் பார்த்தேன்,’ என்கிறபடியே, 2தன்னுள் அடங்க நின்ற. இனி ‘தன்னுள்’ என்பதற்கு, 3‘தன்னுடைய சங்கல்பத்தின் ஏகதேசத்தில்’ என்று பொருள் கூறலுமாம். பவர் கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி அவர் – இவர்களைக் காப்பதற்கு உறுப்பான பரம்பின ஞான வெள்ளத்தையுடையனாய். இப்படிக் காக்கப் பெற்ற இடம் தன் பேறு என்று தோன்றும்படி இருக்கிற திவ்விய விக்கிரகத்தை யுடையரான அவர், எம் ஆழி அம் பள்ளியாரே – 4தம் சம்சார மத்யஸ்தராய் இருக்கையாலே எல்லாரையும் கூட்டிக்கொண்டு, எங்களைப் பாதுகாத்தற்காக வந்து பிரளயத்தை அழகிய படுக்கையாவுடையவர் ஆனார். பள்ளி – படுக்கை. 5‘பாயலும் பள்ளியும் பாழியும் படுக்கை’ என வருதல் காண்க.

    ‘இப்படி ஆபத்துக்காலத்தில் துணைவனாய் 6அணியன் ஆகையாலும் இவனே ஈஸ்வரன்,’ என்கிறார்.                

ஆபத் சகன் ஆகையாலும் இவரே ஈச்வரனே என்கிறார்
எவரும் யாவையும் சேதனர் அசெதனர் பிதிர் கதிர் படாமல்
பரம்பி நின்று உள்ள ஞான வெள்ள சுடரே தேஜஸே திரு மேல்
திருப்பாற்கடல்    சயனம் ரசிக்க தன்
ஹிம்சை நெருக்காதவடி  கவர்வின்றி  -விசாலம் இடம் உண்டே
பிரளய காலத்தில்
தன்னுள் ஒடுங்க நின்ற -
மார்கண்டேயர் கரியே
விசாலமாக இருந்தது பச்யம் அஹம் சர்வம் -ஸ்லோகம் -
தன்னுள் சங்கல்ப ஏக தேசத்தில் வைத்து கொண்டான்
பவர் கொள் பரம்பிய ஞானம்
சுடர் பிரகாசிக்க ரஷித்தது தன் பேறாக தோற்றும் திவ்ய மங்கள விக்ரகம்
ஆழி சம்சார ஆர்ணவம்
ஏகார்ணவம் -
கொள்ளிடம் வட திருக்காவேரி பிரியும் பொழுது வேற பெயர்
ஆழி அம் பள்ளி -படுக்கை
ஆபத் சகன் -கிட்டியவன் அண்ணியவன்-
அவனே பரன் என்கிறார் .

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-2-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 8, 2012

தகும்சீர்த் தன்தனி முதலி லுள்ளே
மிகும்தேவும் எப்பொருளும் படைக்கத்
தகும்கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும்சோதி மேல்அறிவார் எவரோ?

    பொ – ரை : ‘படைத்தல் முதலிய தொழில்களுக்குத் தக்க ஞானம் சக்தி முதலிய குணங்களையுடையவன், தன்னுடையதாகித் தனித்த காரணமான மூலப் பகுதியினுள்ளே மேலான தேவர்களையும் மற்றும் எப்பொருள்களையும் படைக்கத் தகுதியான அழகிய தாமரை போன்ற திருக்கண்களையுடையவன், என்னை அடிமை கொண்டவன், பேரொளி உருவன் ஆன எம்பெருமானுக்கு மேம்பட்ட ஓர் இறைவன் உளன் என்று அறிகின்றவர் யாவர்? ஒருவரும் இலர்’ என்றபடி.

    வி-கு : தனி முதல் – தனித்த காரணமான மூலப்பகுதி. தனி என்பது, இரண்டாவது வேறு காரணம் இன்மையைக் குறிக்க வந்தது. மேல் – மேம்பட்ட பொருள். அறிவார் – வினையாலணையும் பெயர். ‘யவர்’ என்பது, முன்பு உள்ள பாடம். ‘எவர்’ என்னும் வினா ஈண்டு இன்மை குறித்து நின்றது.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. 1‘தாமரைக்கண்ணன் ஆகையாலும் இவனே இறைவன்,’ என்கிறார்.

    தகும் சீர் – படைத்தலுக்குத் துணையான ஞானம் சக்தி முதலிய குணங்களையுடையவன். தன் தனி முதலினுள்ளே – காரிய வர்க்கத்துக்கு அடையக் காரணமான மூலப் பிரகிருதி.

இனி, இதற்கு, 1‘நான் பல பொருள்கள் ஆகின்றேன்,’ என்கிற படியே, அந்த மூலப்பகுதிக்கும் காரணமான சங்கல்ப ரூப ஞானம் என்று பொருள் கூறலுமாம். 2‘உலகத் தோற்றத்திற்குப் பரமாணுக்களே காரணம்’ என்பாரும் உளராதலின், அவர் கொள்கையினின்றும் வேறுபடுத்துவதற்குத் ‘தனி’ என்னும் அடைபுணர்த்து ஓதுகிறார். மிகும் தேவும் – தன்னோடு 3மசக்குப் பரல் இடலாம்படியான தேவசாதியையும், 4‘சிவனுடைய வில் விஷ்ணுவின் ஆற்றாலால் ஒடிபட்டதனைக் கண்டு விஷ்ணுவே பரம்பொருள் என்று எண்ணினார்கள்,’ என்னலாம்படி அவர்களுடைய மிகை இருத்தலின், ‘மிகும் தேவும்’ என்கிறார்.

    எப்பொருளும் படைக்கத் தகும் கோலம் தாமரைக் கண்ணன் எம்மான் மிகும் சோதி – ‘மற்றும் உண்டான எல்லாப் பொருள்களையும் உண்டாக்குகைக்குத் தகுவான்-ஒருவன்’ என்னுமிடத்தைத் தெரிவிப்பனவாய், காக்குந் தன்மை இல்லையாயினும், ‘காட்சிக்கு இனியவாய்க் குளிர்ந்திருக்கிற திருக்கண்களையுடைவனாய், அக் கண் அழகாலே என்னை அடிமை கொண்டவனே மிக்க பேரொளியை யுடையவன். ‘தகும் கோலம் தாமைரைக் கண்ணன் எம்மான்’ என்று 5திருவடி தோற்ற துறையிலே இவரும் தோற்கிறார். 6‘பரஞ்சோதி என்னும் சொல்லுக்குப் பொருளான பரம்பொருளினை அடைந்து’ என்றும், 7‘பரம்பொருளும் நாராயணனே, பரஞ்சோதியும்

நாராயணனே’ என்றும் கூறப்படுமவன் ஆதலின், ‘மிகுஞ்சோதி’ என்கிறார். மேல் அறிவார் எவரே – இவனை ஒழிய நாராயணாநுவாகச் சித்தமாய் இருப்பது ஒரு பொருள் உண்டு என்று அறிவார் யாவரேனும் உளரோ? எவரோ -1‘எந்த வைதிகன்?’ என்றார் ஸ்ரீ ஆளவந்தார்.

    ‘உனக்கே உரியதான நாராயணாநூவாகாதிகளிலே கூறப்பட்ட பெருமையையுடைய உன் பக்கலிலே பொறாமை கொண்டிருப்பான் ஒரு வைதிகன் உளனோ? உளனாகில், அவன் அவைதிகனாமித்தனை’ என்றபடி. 2‘பரம்பொருளான விஷ்ணுவினிடத்தில் பத்தி இல்லாதான் ஒருவன் எல்லாச் சாத்திரங்களின் பொருள்களையும் அறிந்தவனாய் இருப்பினும், அவனிடத்தில் பிராமணத் தன்மை இல்லை; அவன் பிறவியினை ஆராய்தல் வேண்டும்,’ என்பது பத்மபுராணம்.

 

புண்டரீகாட்ஷன் இவன் ஒருவனே
தாமரை கண்ணன்
சங்கல்பம்
மிகும் தேவும் எல்லா பொருளையும் படைக்க தக்க எம்பெருமான்
மேல் பட்ட ஜோதி யார்
சிருஷ்டிக்கு -செய்ய உபயோகி ஞான  சக்தி யாதிகளை உடையவன்
தன் தனி முதல்
தனக்கு ச்வம்மாய் -சொத்து
மூல பிரகிருதி
பரமாணு காரனத்வாதியை வ்யாவர்த்திகிறது
ஏக காரணம் -பரமாணு காரணம் -அதுக்கும் இவன் காரணம்
பகு ச்யாம் சங்கல்பம்
மிகும் தேவும் -தன்னோடு விகல்பிகலாம் படி  அந்தர்யாமியாய் நின்றாலும் -
தானே நிற்கும் படி -கொடி படர சுள்ளி கால் கொள் கொம்பு -கொம்பே தெரியாமல் படர -கொடியே நிற்பதாக
அது போல் மிகும் தேவும் -இவனை மறைத்து
வில்லை வளைத்த போதாகா -வால்மீகி ராமாயணம் பரசு ராமர்
ஐந்தாம் பாட்டில்

தகும் சீர் -மூல காரணமான பிரகிருதி தனி

முதல் சங்கல்பம் இரண்டையும் சொல்லி -தனி முதல் -
மிகு சீர் -மசக்கு  பறல் இடலாம் படி போலி தேவ ஜாதி -duplicate -போலே
வில்லை வளைத்த பொது
தகும் போலே தாமரை கண்ணன்-ரஷகன் இல்லாவிடிலும்
கண் அழகில்
திருவடி தோற்ற துறையில் இவரும் தோற்றார்
விஸ்வ கர்மா இரண்டு வில் பண்ண -ருத்ரன் -நாராயணன் இருவருக்கும் கொடுக்க -
மூச்சு விட ருத்ரன் விழி முறிய ஹூங்காரம் -ஒன்றாலே -
அதிகம் மேனிரே விஷ்ணு சொல்லும் படி மிக்க தேவர் -
தகும் கோல தாமரை கண்ணன் ஸ்பஷ்டம்
ரஷகத்வம் இல்லை என்றாலும் ஜிதம் தோற்பித்த துறை கண் அழகு
விடப்போகாத தர்சநீயமான கண் அழகு
கார்ய வர்க்கம் தோற்ற துறையில் இவர் தோற்றார்
ராமக கமலா பத்ராட்ஷா -திருவடி வார்த்தை
சர்வ சத்வ மனோ கர -தேஜச ஆதித்ய சங்காச பிரகஸ்பதி சம புத்தா -
சர்வாங்க சுந்தராக இருக்கை -அதிலே சுழி ஆயிற்று கண் அழகு -அமிழுவாருக்கு வேண்டியது
கமலா பத்ர அஷர தாமரை இலை போன்ற கண் -காஞ்சி ஸ்வாமி -
கமலம் இவ அஷினி பத்ரம் இவ தேவ -அசாம் கண் காயம் உடம்பு இரண்டு அர்த்தம்
அக்கமலத்து இலை போலும் திருமேனி -
எல்லை எது சர்வ சத்யா மனோ கரைய
திர்யக் ஜாதியாக பனை தாவும் என்னையும் ஈர்த்ததே
தேக ஆத்மா குணம் -குறை அற்றவனாய் இருக்கிறான்
உத்பத்தி தொடக்கமாக -சகஜம் -
நாராயண பரம் ஜோதி மிகும் சோதி ஜோதிஸ் வடிவாக
வேத அபகாரக -ச்வாபிவிக அதிசய -பரத்வம் சொல்லி வைதிகன் அனைவரும்
அநந்ய பரர் -நாராயண அனுவாதிகம்
வைதிகன்  காக உண்டாகில் அவைதிகனாம் இத்தனை
உன்னை பரத்வமில்லை என்பவன் வைதிகன் அல்லன்
நாராயணம் பத்ம புரானம்விஷ்ணு பக்தி இல்லாதவன் சாஸ்திரம் கற்றவனாலும் ப்ராக்மானுயமும் இல்லை
புத்திரன் தகப்பனை த்வேஷித்தால் –
மேல் அறிவர் எவரே -

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-2-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 8, 2012

தேவும் எப்பொருளும் படைக்கப்
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே?

    பொ – ரை : தேவர்களையும் மற்றை எல்லாப் பொருள்களையும் உண்டாக்குவதற்குத் தனது திருவுந்தித் தாமரையினின்றும் நான்கு முகங்களையுடைய பிரமனைப் படைத்த ஒளியினையுடையவனான எம்பெருமானுக்கு அல்லாமல் ஏனையோர்க்கு மலர்களும் மலர்களால் அருச்சித்து வணங்கும் வணக்கமும் தகுவன ஆகுமோ? ஆகா என்றபடி.

    வி – கு : ‘தேவு – தெய்வத்துக்கு ஒரு பெயர்’ என்பர், நச்சினார்க்கினியர். (சிந். கட. வாழ்த்) ‘படைக்கப் படைத்த தேவன்’ என்றும், ‘அல்லால் தகுமோ?’ என்றும் முடிக்க. தகுமே – ஏகாரம் எதிர்மறைப் பொருளது. பூசனை – நாடோறும் கடவுளர்க்குச் செய்யப்படும் வழிபாடு முதலியன. ‘சிறப்பொடு பூசனை செல்லாது’ என்றார் திருவள்ளுவர்.

    ஈடு : நான்காம் பாட்டு 3‘சௌகுமார்யத்தாலும் முதன்மை யாலும் இவனே இறைவன்,’ என்கிறார்.

 தேவும் எப்பொருளும் படைக்கப் 1பூவில் நான்முகனைப் படைத்த தேவன் – தேவர்களுடைய கூட்டங்களையும் மற்றை எல்லாப் பொருள்களையும் உண்டாக்குவதற்காக, 2ஒரு பூவில் நான்கு பூக்கள் பூத்தாற் போன்று நான்கு முகங்களையுடைய பிரமனை உண்டாக்கினவன். தேவன் – பிரமனைப் படைத்தவன் ஆதலின், அதனால் உண்டான காந்தியினையுடையவன். இனி, ‘தேவன்’ என்பதற்குப் படைத்தல் முதலிய தொழில்களை விளையாட்டாக உடையவன் என்றும், அழகு முதலியவைகளால் வந்த விளக்கத்தினை உடையவன் என்றும் கோடலுமாம். எம்பெருமானுக்கு அல்லால் – படைத்தல் முதலிய தொழில்களைச் செய்த உபகாரத்தாலும் படைத்தலுக்கு உறுப்பான குணங்களாலும் என்னை அடிமை கொண்டவனுக்கு அல்லாமல். பூவும் பூசனையும் தகுமே – 3சிக்குத் தலையனுக்குப் பூத்தகாது; பிச்சை உண்ணிக்குப் பூசனை தகாது; பூத்தகுவது சுகுமாரனுக்கு; பூசனை தகுவது முதன்மையுடையவனுக்கு; ஆதலால், இவனை ஒழிந்தவர்க்குத் தகாது,’ என்கிறார்.

    இறைவனுடைய முதன்மையினை நெடும்போது விரிவாகக் கூறிக் கொண்டே வந்து, 5‘பெரியதாயும் விசாலமானதாயும் நீண்டதாயும் இருக்கிற திருக்கண்களையுடையவன்காண், உங்களுக்கு மைத்துனனாகப் புகுந்திருக்கிற கிருஷ்ணன்,’ என்று அவ்விறமைத் தன்மையினைக் கிருஷ்ணன்மேல் மாட்டெறிந்தான், தத்துவ ஞானியான வீடுமன். அவ்வாறு மாட்டெறிந்து முதன்மையினை அறுதியிட்ட வீடுமனுக்கு ஒரு சிறப்பும் செய்திலர் தேவர்கள், 6‘கிருஷ்ண பரமாத்துமாவை, இந்த இராய சூய யாகத்தில் பூசிக்கத் தக்கவராக நாங்கள் விரும்புகிறோம்; இச்சபையில் இருக்கிற நீங்கள் எல்லோரும்.

அவரைப் பூசிப்பத்தற்கு உங்கள் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தக்கவர்களாய் இருக்கின்றீர்கள்,’ என்று சகாதேவன் கூறித் தனது வைராக்கியத்தைத் தெரிவித்த காலத்தில், அவன் வைராக்கியத்தைக் கண்ட தேவர்கள், அவன் தலையில் மலர் மாரியைப் பெய்து அவனை வாழ்த்தினார்கள். இதனால், ஒருதலையாக வேண்டற் பாலது ஞானத்தைக் காட்டிலும் வைராக்கியமே என்பது புலப்படும். ஆதலால். இவரும், ‘அல்லது இல்லை ஒரு கண்ணே’ என்றும், ‘கோள அரியேறு அன்றி அருளால் அளிப்பார் ஆர்’ என்றும், ‘மால்தனில் மிக்குமோர் தேவும் உளதே?’ என்றும், ‘பூவும் பூசனையுந் தகுமோ?’ என்றும் அவ்வைராக்கியத்தையே அருளிச்செய்தார்.

 

 ‘ஒரு பூ’ என்றது, பிரமன் உதித்த உந்தித் தாமரையினை ‘நான்கு பூ’ என்றது, நான்கு
முகங்களை.

மென்மை மேன்மை சொவ்குமார்யம்
பூவும் பூசனை கொண்டு முதன்மை
தேவும் எப்பொருளையும் படைக்க நான் முகனை பூவை படைத்த
அவன் ஒருவனுக்குதான் பூவும் பூசனையும்
தேவ ஜாதிகளையும்
ஒரு பூவில் நான்கு பூ பூத்தாது போலே
தேவன் -க்ரீடா காந்தி சதுர முக ஸ்ருஷ்டாவால் வந்த தேஜஸ்
விளையாட்டு .
ஸ்ருஷ்டியாதி உபகாரம் குணம் இத்தால் என்னை  எழுதி கொண்டவன் எம்பெருமான்
மற்றவர்க்கு பூவும் பூசனையும் தகுமோ
சிக்கு தலையனுக்கு பூ தகாது -ஜடா முடியன் ருத்ரன்
பிச்சி உண்னிக்கு பூசனை   தகுமோ -
சிக்கு தலையன் பிரமா அரும் பதம்
எம்பார் -ஐ திஹ்யம்
உள்ளம் கை நாயனார் -காலஹஸ்தி பிரதிடை -எம்பெருமானார்
திருமலை நம்பி -கோவிந்தன் அப் பொழுது
திண்ணன் வீடு கால ஷேபம் செய்து -
தகாது தகாது தகாது -குடலை விட்டு எரிந்து திருவடிகளில் ஆஸ்ர்யயித்தார்
ராஜ சூயை யாகம் -வார்த்தை -சகா ஏஷா –தீர்க்காஷன் -சம்பந்தி தேக பந்து -ஜனார்த்தனன் -பீஷ்மர் நெடும் பொது சொல்ல
சுருதி சித்தமான தாமரை கண்ணன் கப்யாசம் புண்டரீகாஷம் ஏவம் அஷனி பரத்வம் அவன் தலையில் இட்டு
மார்கண்டேய புராணம் -
ஜீயர் அரும் பதம் -பிரமாண திரட்டு
விதி ரேகம் -பிரமாணம்
சத்யம் -சகாதேவன் வாக்கியம் –கூடாது என்பர் தலை மேல் காலை வைப்பேன் -சொன்னதும் -
புஷ்ப வ்ருஷ்டி விழ -
அன்வயம் பீஷ்மருக்கு விழ வில்லை
விதி ரேகம் சொல்வது விசேஷம் காட்ட
ஆழ்வாரும் அத்தால் சொல்லிக் கொண்டே போக -
ஞானம் விட வைராக்யத்துக்கு ஏற்றம் இத்தால்சொல்லி .

 

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-2-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 8, 2012

ஏறனைப் பூவனைப் பூமகள் தன்னை
வேறின்றி விண்தொழத் தன்னுள் வைத்து
மேல்தன்னை மீதிட நிமிர்ந்துமண் கொண்ட
மால்தனின் மிக்கும்ஒர் தேவும் உளதே?

    பொ – ரை : ‘இடப வாகனத்தையுடைய சிவனையும் தாமரைப் பூவில் பிறந்த பிரமனையும், தாமரைப் பூவில் வீற்றிருக்கிற பெரிய பிராட்டியாரையும் வேறுபாடு இன்றி, அயர்வறும் அமரர்கள் தொழும் படி தனது திருமேனியில் வைத்து, மேலே உள்ள உலகங்களுக்கு எல்லாம் மேலே செல்லும்படி வளர்ந்து உலகத்தை அளந்துகொண்ட அறப்பெரிய தெய்வத்தைக்காட்டிலும் உயர்ந்ததாகக் கூறத்தக்க வேறு தெய்வமும் உளதோ? இல்லை’என்றவாறு.

    வி-கு : ‘தொழவைத்து நிமிர்ந்துகொண்ட மால்’ என்க. உளதே – ஏகாரம் எதிர்மறைப்பொருளது. ‘மாறுகொள் எச்சமும்’ என்ற எழுத்ததிகாரச் சூத்திரத்தில் எதிர்மறைப்பொருளையும் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியுள்ளமை காண்க.

    ஈடு : மூன்றாம் பாட்டு. 2‘சௌசீல்யத்தாலும், உலகங்களை எல்லாம் மூன்று அடிகளால் அளத்தலாகிய மனிதர்கள் அளவுக்கு அப்பாற்பட்ட செயலாலும் இவனே இறைவன்,’ என்கிறார்.

 ஏறனை – சர்வேஸ்வரன் ‘கருடவாகனன்’ என்று இறுமாந்து இருக்குமாறு போன்று, ஓர் எருத்தைத் தேடிக் கைக்கொள் ஆண்டிகளைப்போன்று இறுமாந்து இருப்பவன். பூவனை – ‘திருநாபிக் கமலத்தில் நேரே பிறந்தவன் அன்றோ?’ என்று இறுமாந்து இருக்கும் நான்முகன். அதாவது, தாமரைப்பூவில் பிறந்தவனாதலின் பிறப்பு இல்லாதவன் என்று நினைத்திருப்பவன் என்றபடி. பூமகள் தன்னை – தாமரைப்பூவில் வாசனையும் உபாதானமாகப் பிறந்தவளாய், இன்பமே ஒரு வடிவு கொண்டவளாய், 1‘உனக்கு ஏற்கும்’ என்னும்படி தலைமை தோன்ற, ‘பூமகள் தன்னை’ என்கிறார். மற்றும், அவர்களை ‘ஏறனை, பூவனை’ என்கிற விருப்பம் இன்மையைப் புலப்படுத்துகிற வார்த்தைகளாற் கூறியவதனானும் இவளுடைய முதன்மை தோன்றும்.

    விண் தொழ வேறு இன்றித் தன்னுள் வைத்து – வேறு பொருள்களிலும் மனத்தைச் செலுத்துகிற பிரமன் சிவன் இவர்கட்கும், வேற்றிடத்து மனத்தைச் செலுத்தாத பெரிய பிராட்டியாருக்கும் ஒக்க முகங்கொடுத்து வைக்கிற சீலத்தை நினைத்து விண்ணினுள்ளார் தொழாநிற்பார்கள். ‘பிரமன் முதலானோர் எப்போதும் திருமேனியைப் பற்றி இருப்பார்களோ?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, 2‘ஒரோ ஆபத்துகளிலே திருமேனியிலே இடங்கொடுக்கிறான்; அந்நீர்மையை விடமாட்டாமையாலே ஆழ்வார்கள் அதனையே வாய் புலற்றுகிறார்களத்தனை’ என்று அருளிச்செய்தார். 3‘ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும் கூறாளும் தனி உடம்பன்’ என்கிறபடியே, வேறுபாடு இன்றி உடம்பைக் கொடுத்துள்ளானாதலின், ‘வேறின்றி’ என்கிறார். ’கட்டில் கத்துகிறது’ என்பது போன்று ‘விண்’ என்பது இடவாகுபெயர். இங்குள்ளார் 4‘ஜஸ்வரியம்’ என்றிருப்பார்கள்; அங்குள்ளார் ‘சீலம்’ என்று தோற்று இருப்பார்களாதலின், ‘விண் தொழ’ என்கிறார்.

    மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண்கொண்ட – மேலே உள்ள உலகங்களை 5‘அப்பால் மிக்கு’ என்கிறபடியே, விஞ்ச வளர்ந்து,

பூமிப் பரப்பெல்லாம் திருவடிகளின்கீழே இட்டுக்கொண்ட. மால் தனில் – இவ்வதிமா நுஷச் செயல்களையுடைய சர்வேஸ்வரனைக் காட்டிலும் மிக்கும். ஓர் தேவும் உளதே – ஒக்கப் பரிமாறாநிற்க, 1‘கட்டக்குடி’ என்று கழிக்கலாம் தெய்வந்தான் உண்டோ?

    2‘எல்லார் தலைகளிலும் காலை வைத்தவனை ‘ஈஸ்வரன்’ என்னவோ, இவன் காலிலே துகையுண்டவர்களை ‘ஈஸ்வரர்கள்’ என்னவோ?’ என்கிறார்.

சௌசீல்யம்  அதி மானுஷ செஷ்டிதம்
திரி விக்ரமன் வ்ருத்தாந்தம்
திருவடி நீட்டி ஒருவன் கழுவ
ஒருவன் தலையில் தாங்கமாத்ச்ய புராண பிரசித்தம் கபாலி மோஷம் அருளினார் முன்னர்

இதிகாச புராண பிரக்ரியை என்பதால்
இதில் அதி மானுஷ செஷ்டிதம்
சௌசீல்யம் திரு விக்ரமன் சரித்ரம் அருளுகிறார்
ஏறன்-எருகின்ற்றவன் ஏற்றி உடையவன் ஏற்றான் ருத்ரன்
பூவன் புஷ்பத்தில் உண்டானானவன்
பூ மகள் தன்னையும் -வாசி இன்றி -வேறின்றி-
விண் தொழ -இத்தை நினைத்து நித்ய சூரிகள தொழ
மேல் மீதிட -நிமிர்ந்து மண் கொண்ட -மால் தன்னில் மாறன் -
சர்வேஸ்வரன் கருட வாகனன் போலே
நானும் வாகனம் எருது கொண்டு இறுமாந்து இருக்கும் ருத்ரன்
வேதாத்மா விககேச்வரன் -வேதமே வடிவு எடுத்தவன் .
எருதை தேடி -கை கொள் ஆண்டி பூம் பூம் மாட்டுக்காரன் போலே -
குடுகுடைப்பை காரன் -இறுமாந்து இதற்கே
பூவனை-திரு நாபி கமலத்தில் அவ்வ்யதானம் இன்றி இடை வெளி இன்றி நேராக படைக்க பெற்ற இறுமாப்பு
பத்ம யோநித்வத்தால் அஜன் -என்று கருவித்து இருக்கிறான் -
மற்றவர் போலே பிறக்காதவன் அஜன் -யோனி சம்பந்தம் இல்லாமல் .
பரிமளம் உபாதாநமாக பிறந்தவள் குடத்துக்கு மண் உபாதானம் போல்
பூ வாசனையே இவள் போக்யதையே வடிவு
உனக்கு ஏற்ற கோல மலர் பாவை
பூ மகள் தன்னை சொல்லல் ஏற்றம் -
சாத்தனை கூத்தனை போல் அனாத யுக்தி ஏரன் பூவன்
பூ மகள் தன்னை விசேஷித்து சொல்லி
தன்னுள் வைத்து -விண் தொழ தன்னுள் வைத்து
வேறின்றி தன்னுள் வைத்து
அந்ய பரர் அநந்ய பெரிய ப்ராட்டியாருக்கும் -ஒக்க முகம் கொடுத்து வைக்கும் சீலம்
அனுசந்தித்து நித்ய சூரிகள் தொழ -தேவர்கள் இல்லை -பிரம ருத்ராதிகளை சொல்லுவதால்
இறையும் அகலகில்லேன் போல் இன்றி
நஞ்சீயர் பட்டர் சம்வாதம்
ஓர் ஒரு ஆபத்துக்களில் திரு மேனியில் இடம் கொடுக்கிறான் -
அத்தை நீர்மை விடமாட்டாமல் வாய் புலத்துகிறார்கள்-
வலத்தனன்  திரி புரம் உள்ளே குடி இருந்துநீங்கி போன பின்பும்  -இன்னார்இடம் சொல்லி கொள்வது போலே -
கூராளும்-விண் தொழ -மஞ்சா க்ரோசந்தி போலே கட்டில் சப்தம் போலே
ஊர் சிரிக்கும் -அது போல் ஆகு பெயர் இங்கும் .
பிரம ருத்ராதிகள் இருப்பதை
இங்குள்ளார் ஐஸ்வர்யம் என்று இருப்பார்கள்
அங்குள்ளார் சீலம் என்று இருப்பார்கள் .-நித்ய சூரிகள் -
மேல் தன்னை -உபரித லோகங்களை
ஒரு கால் நிற்ப -அண்டம் -அப்பால் மிக்கு -விஞ்ச வளர்ந்த பூமி பரப்பு எல்லாம் இட்டு கொண்ட
மகா பலி நினைத்ததுக்கு அப்பால் -
தாரகையின் புரம் தடவி அப்பால் மிக்கு -
மேல் தன்னை -திருவடிகளின் கீழே இட்டு கொண்டவன் -
மாறனில்-சர்வேஸ்வரன் -காட்டிலும் மிக்குமோர் தேவுமுளதோ
கட்டகுடி -கஷ்டக் குடி அதி நிர்த்தன குடும்பி -அல்ப ஜீவனம் எடுத்து கழிக்க கூட கழிக்க தெய்வம் இல்லை .
குடி மகன் அனைவரும் -
ஒக்க பரிமாறா நிற்க கட்டக்குடி என்று களிக்க
இவன் காலில் துகை உண்டவர்கள் அனைவரும்
பரத்வம் -விபவத்தில் -
இதிகாச புராண பிரக்ரியை
விதி ரேகத்தில் அருளி .
மால் தனில் -மாறனில் எதிகைக்கு ஆனது
காஞ்சி ஸ்வாமி-தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
மதுர கவி ஆழ்வார் ஆச்சார்யர் சொன்னதை தான் சிஷ்யன் சொல்லி
மாறனில் மிக்கதோர் தேவு உளதோ .அர்த்தம் வேண்டாம் சப்தம்

 

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-2-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 5, 2012

ஏஎபா வம்!பர மே!ஏழ் உலகும்
ஈபா வம்செய்து அருளால் அளிப்பார்ஆர்?
மாபா வம்விட அரற்குப் பிச்சைபெய்
கோபால கோளரி 3ஏறுஅன் றீயே?

    பொ – ரை : ‘பிரமனுடைய தலையினைக் கிள்ளியதனால் உண்டான பெரிய தீவினையானது விட்டு நீங்குபடி, சிவனுக்குப் பிச்சையினைப் பெய்து அவனைக் காப்பாற்றிய, கோகுலத்திற்பிறந்தார்க்கு எல்லாம் வலிய ஆண் சிங்கத்தினை ஒத்த கிருஷ்ணனை அன்றி, உலகங்கள் ஏழிலும் உள்ள அவ்வவ்வுயிர்கள் செய்த தீவினைகளையெல்லாம் போக்கி அவற்றை அருளோடு காப்பாற்றுகின்றவர் வேறு யாவர்? ஐயோ! பாவம்! இவ்வுண்மையினைக் கூறல் நம்மைச் சார்ந்து ஆவதே!’ என்கிறார்.

    வி – கு : ‘ஏஎ’ என்பது, இரக்கத்தின்கண் வந்தது. பரம் – பாரம்; கடமை.
ஈ – அழித்தல். ‘தழல் – அழல்; மலர் – அலர்’ என்பன போன்று, ‘வீ’ என்பது மெய்ம்முதல் கெட்டு ‘ஈ’ என உயிர்

மாத்திரையாய் நின்றது. ‘உலகு’ என்பது, ஈண்டு உயிர்களுக்கு ஆயிற்று. ‘விடப்பெய் கோபாலன்’ என முடிக்க, ‘அருளால் ஈ பாவம் செய்து’ என்று அருளால் என்பதனை முன்னுங்கூட்டுக. கோளரி ஏறு அன்றி அருளால் அளிப்பார் ‘ஆர்?’ என்க. யார் என்பது ‘ஆர்’ என மருவிற்று.

    ஈடு : இரண்டாம் பாட்டு. ‘அல்லது இல்லை’ என்று நீர் சொல்லுவான் என்? பிரமனும் சிவனும் இறையவர்களாகப் பேசப்படுகின்ற பிரமாணங்களும் சில இருக்கின்றனவே?’ எனின், ‘‘அவர்கள் நிலையினை ஆராய்ந்தால், தலை அறுப்பாரும் தலை அறுப்புண்டு நிற்பாருமாக இருக்கிறார்கள்; அவர்கள்ஆபத்தினைப் போக்கிக் காத்தளிக்கின்றான் இவன்; அவர்களோ, இவனோ சர்வேஸ்வரன்?’ என்கிறார்.

    ‘ஏஎ’ என்றது ‘ஓஒ’ என்றபடி. இதனால் துக்கத்தின் மிகுதியினைக் குறிக்கிறார். ஏஎ பாவம் – இரத்தினத்திற்கும் காட்டில் உலர்ந்து கிடக்கும் வரட்டிக்கும் வேறுபாடு உண்டு என்று சொல்ல வேண்டுவதே! மக்கள் சிற்றறிவினர்களாய் இருத்தலின், பகவானுடைய  பரத்துவத்தை விளக்கவேண்டி இருக்கின்றதே என்னும் இன்னாப்பாலே ’என்னே பாவம்!’ என்கிறார். பரமே -1‘பகவானுடைய குணங்களைஅநுபவிக்குமது ஒழிய, இது நமக்குக் கடமை ஆவதே! இதுநாம்செய்யக்கூடியதாக வந்து விழுவதே!’ என்றபடி. ஏழ் உலகும் -ஏழ் உலகங்களிலும் உண்டான மக்கள் இருக்தே குடியாகப் பாவங்களைச் செய்து அப்பாவங்களால் தங்களை நிறைத்துக்கொள்ள. ஈ பாவம் செய்து – பாவங்களை அழியும் படியாகச் செய்து. அருளால் – பாவங்களை அழிக்கும் போது, மக்கள் விரும்ப, தான் செய்தல் அன்றி நிர்வேஹதுகக் கிருபையாலே. அளிப்பார் ஆர் – இவர்களை ஈரக்கையால் தடவிக் காப்பார் ஆர்? அளிப்பான் இவன் என்னாதே ‘ஆர்’ என்கிறார். அவர்களுக்கும் சத்துவம் தலை எடுத்தபோது, ‘நீர் சொல்லுகிறவனே’ என்று இசையவேண்டும் பிரசித்தியாலே. 2‘ஸ்ரீராமா!! நீதான் எல்லா உலகங்களிலும் இருக்கின்ற எல்லா உயிர்களினுடைய பாவங்களை எல்லாம் போக்கித் தூய்மை ஆக்குபவன்,’ என்றும், 3‘காப்பாற்றுவதில் நிலை நின்றவனாயும் எல்லா உயிர்கட்கும் ஈஸ்வரனாயும் மகாத்துமாவாயும் இருக்கின்ற விஷ்ணுவைத் தவிர,

காத்தலாகிய ஆற்றலானது வேறு ஒருவர்க்கும் இன்று,’ என்றும் வருகின்ற பிரமாணங்களைக் காண்க. ‘மக்கள், தாங்கள் செய்த பாவங்களைப் பிராயச்சித்தத்தால் (கழுவாய்) போக்கிக்கொள்ள ஒண்ணாதோ?’ எனின், இவர்கள் செய்த பாவம் அவன் அருளால் போக்கில் போமத்தனை அல்லது, தாங்கள் பிராயச்சித்தம் செய்து போக்குதல் என்பது, அவற்றை மேன்மேலும் வளர்த்தலாகவே முடியும்.

    ‘அவன் எல்லாப் பொருள்களையும் காக்கின்ற தன்மை நிற்க; 1தந்தம் காலைத் தாம்தாம் நீட்டி முடக்க வல்லராய் இருக்கிறவர்களும் ஓரோர் அளவுகளிலே ஆபத்தை அடைவர்களாயின், அவற்றைப் போக்கிக் காக்கும்படியைப் பார்க்கலாகாதோ?’ என்கிறார் மேல்: மா பாவம் விட – 2‘பின்னால், கோபத்தால் பீடிக்கப்பட்டவனாயும் சிவந்த கண்களையுடையவனாயும் இருக்கிற என்னால் இடக்கைக் கட்டைவிரல் நகத்தின் நுனியால் அந்தப் பிரமனுடைய தலை கிள்ளப்பட்டது,’ என்கிறபடியே, உலகத்திற்கெல்லாம் குருவாயும் தனக்குத் தந்தையாயும் இருக்கிறவன் தலையை அறுத்துப் பாவத்தையுடையவனாய் நின்றான்; நின்ற அவனுடைய பெரிய பாவமானது அவனை விட்டு நீங்கும்படி. மற்றைத் தேவர்களைக்காட்டிலும் ஞானம் சத்தி முதலியவற்றால் ஓர் ஆதிக்கியத்தைப் படைத்த சிவனாற்செய்யப்பட்ட பாவமாதலின், ‘யானைக்கும் தனக்குத் தக்க வாதம்’ என்பது போன்று, அப்பாவத்தினை ‘மா பாவம்’ என்கிறார்.

    அரற்குப் பிச்சை பெய் கோபால கோள் அரி ஏறு – ‘சிவன், அழிக்கும் தலைவனான வேஷத்தோடே அதிகாரம் குலையாதே நின்று பாவத்தை விளைத்துக்கொண்டான்’ என்பார், ‘அரன்’ என்கிறார். ‘இறைவன், அவனுடைய துக்கத்தைப் போக்கியது அங்கே இங்கே தோன்றித் திரிகிற இடத்திலே என்பார், ‘கோபாலன்’ என்கிறார். இதனால், இவர்கள் எத்துணை உயர நிற்பினும் கேட்டினையே சூழ்த்துக் கொள்ளுவார்கள் என்பதும், இறைவன் எத்துணைத் தன்னைத் தாழவிட்டாலும் காப்பாற்றுமவனாம் என்பதும் சொல்லப்பட்டன. கோபால கோள் அரி ஏறு – கோபாலருடைய மிடுக்கையுடைத்தான ஆண் சிங்கம். கோள் – வலிமை. ‘பிறருடைய வலிமையினைக் கொள்ளுகின்ற’

என்று உரைத்தலுமாம். நித்தியசூரிகளை எல்லாம் ஏவுகின்ற இறைவன் ஆயர்களால் ஏவப்படுகின்றவனாய் இருக்கும் செருக்கினைத் தெரிவிப்பார், ‘அரியேறு’ என்கிறார்.

    ‘தீவினைகளால் பீடிக்கப்பட்டவர்களாய்த் துன்பத்தினை அடைகின்ற இவர்களை ஈஸ்வரர்கள் என்போமோ, ஆபத்துகளைப் போக்கிப் பாதுகாக்கும் இவனை ஈஸ்வரன் என்போமோ?’ என்கிறார்.      

பிரமாணங்கள் பிரம ருத்ராதிகளுக்கும் உண்டே

அவர்கள் நிலைகளை ஆராய்ந்து பார்த்தல்
தலை அறுப்பார் சிலரும் அறுப்புண்டு சிலரும்
அவர்கள் ஆபத்தை போக்கி ரஷித்தவன் இவன் தானே
எ பாவம் பரமே
இது கூட உங்களுக்கு சொல்ல வேண்டி இருக்கே
பிரசித்தமான விஷயம்
பரம் பாரம்
ஏழு உலக்கையும் ஈ பாபம் செய்து
பாகங்கள் அழித்து காத்து
மா பாபம் விட அரனுக்கு -பிச்சை பெய்த கோபால கோளரி
ஏ -ஒ ஒ பிராந்திய பாஷை -ஏ என்ன  இப்ப வந்தாய்
ஒ ஒ உலகினது இயல்பே
விஷாத அதிசய சூசகம் துக்கம் மிகுந்து .
ஏ பாவம் ரத்னம் கரிக்கு வாசி சொல்லியா வைஷன்மயம் சொல்ல வேண்டுமா -
ரசிகனே இல்லாதவனுக்கு சொல்ல வேண்டி இருக்கே ஏ பாவம் பரமே

மந்த மதிகளாய் -பகவத் பரத்வம் சொல்ல என்ன பாவம்
பகவத் குண அனுபவம் சொல்லி போகாமல் இது நமக்கு சாத்தியமாய் போனதே
ஏழு உலகும் -இருந்ததே குடியாக பாவங்களை கூடு பூரிக்க -மேலே மேலே சேர்த்து -கொண்டு -
ஈ பாவம் செய்து ஈயும் படியாக செய்து
அழியும் படி
இது தான் சேதனர் அர்த்திக்காமல் அருளால் கிருபையால்
ஈரக்கையால் தடவி ரஷிப்பார் யார்
அவன் அருளால் தான் போக்க முடியும்
பிராயச்சித்தம் செய்து போக்கினால் மேலும் வர்த்திக்கப்பண்ணும்
அளிப்பான் இவன் எண்ணாதே அளிப்பான் யார்
அவர்களுக்கும் சத்வம் தலை எடுக்கும் பொழுது
பாவனம் ஏற்படுத்துபவன் அவன் தான் என்பார்களே
பாலான சாமர்த்தியம் ஹரிம்
ஹரி அம்சம் கொண்டே ரஷணம் தர்ம சாஸ்திரம் -
ராஜ ஆக்ஜை தடையாக இருந்தால் அதை பின் பற்று-
விஷ்ணு அம்சம் கொண்டவனே ராஜா -சட்டம் சாஸ்திரம் விட உயர்த்தி இதனால்
பிரளய -சர்வ விஷயம்
தம் தாம் கால் தாம் தான் நீட்டி மடக்க -சாமர்த்தியம் -ஓர் ஓர் அளவுகளிலே ஆபன்னராய் ஆனால்
மா பாபம்விட -பெரிய பாபம்
பெரியவன் ஆனைக்கு தக்க வாதம் இறே
ஞான சக்திகளாலே ஆதிக்கம் அதிகம் -ஆபத்தும் அதிகம் -
அவற்றை கொண்டு லோக குரு தனக்கு பிதா -சங்கரனை தான் படைத்தான்
தலையை அறுத்து பாதகனே நின்றான்
இடது கை நகத்தால் கட்டை விரலால் எடுத்தான் மாத்ச்ய புராண ஸ்லோகம்
கபாலம் நிறைந்து அகலும் -ஹிமவந்தம் தத்ர நாராயணா ஸ்ரீ மான்
தாரை -தஸ்ய விஷ்ணு பிரசாதம் சுச்ரோணி -பார்வதி பார்த்து சொல்லுகிறான் -
சகஸ்ரமாக சிதற சொப்பன தனம் போனது போலே கையில் அடையாளம் இன்றி போனது
பிரமாணம் -
அடி முடி தேடின கதை சிவன் பரத்வம் சொல்லுவார் புராணங்களில் இல்லை
ஸ்தல புரானனம் யாரோ கட்டி வைத்தது
அரக்கு பிச்சை
சம்கர்த்தா வேஷத்துடன் -
அழிக்கிற உத்தியோகம் செய்ததும் பாபமாக போக
அங்கெ இங்கே ஆவிர்பவித்து திரிகிற இடம் -
கோபால கோளரி  -பிச்சை பெய்தவன்
தாழ விட்டாலும் ரஷகன் இவன்
அவர்கள் எத்தனை ஏற விட்டாலும் பாப்பம்
கோபால கோளரி
ஏறு எழும் வென்று அடர்த்த எந்தை -நம்பி திரு வழுதி நாட  தாசர்
ஏறி உருவம் உடையவன் எருது வாகனம் கொண்டவன்
ஏறு ஏறி
பாறேறி உண்ட தலை பருந்துகள் கவ்வ
தலை வாய் நிறைய
சொல்லில் கதை .
ஏழு எருதுகளை வதம் பண்ணி பாபம் இல்லை
தகப்பன் தலை கிள்ளி பாபம் இவனுக்கு
கோ கத்தி பாவம் வல்லையே
அவன் தான் பர தேவதை
கோள் மிடுக்கு -பிரதி பஷம் கொள்ளும் விரோதி அழித்து
நித்ய சூரிகளுக்கு நியமிக்கிறவன் இடையராக வந்த மிடுக்கு
மா பாவம் குருபாதகம் -வேத அபகார -தைத்ய பீடா அசுரர்களால் ஆபத்து
குரு பாதகம் பெரிய பாபம் மா பாபம்
ஆபத்து போக்கி ரஷணம்
ஏறு அன்றி அருளால் காப்பவர் யாரும் இல்லை
அன்வயம் எதிரேகம் இரண்டாலும் சொல்லி இங்கும் .
யார் அகத்தினார் கபாலம் பிள்ளை பெருமாள் ஐயங்கார்

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 68 other followers