திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-6-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள்

November 6, 2012

வள்ளலே! மதுசூதனா! என்மரதக மலையே!
உன்னை நினைந்து
எள்கல் தந்த எந்தாய்! உன்னை எங்ஙனம் விடுகேன்?
வெள்ள மேபுரை நின்புகழ் குடைந்துஆடிப் பாடிக்
களித்து உகந்துகந்து
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்துபோந்து இருந்தே.

    பொ-ரை: ‘வள்ளலே! மதுசூதனா! என்னுடைய மரதக மலையே! உன்னை நினைத்தலால், மற்றைப்பொருள்களை இகழும்படியான தன்மையை எனக்குக் கொடுத்த எந்தையே! வெள்ளத்தைப் போன்ற நின் புகழ்களில் மூழ்கி ஆடிப்பாடி மகிழ்ந்து அம்மகிழ்ச்சியிலே உயர்ந்து என்னிடத்திலுள்ள நோய்களை எல்லாம் நீக்கி அதனால் உயர்வு பெற்று உன்னிடத்திற்போந்திருந்தேன்; ஆதலால். இனி, உன்னை எங்ஙனம் விடுகேன்!’ என்றவாறு.

    வி-கு : நினைந்து -செயவென் எச்சத்திரிபு. ‘நினைத்தலால் எள்கல் தந்த எந்தாய்’ என்க. புரை – உவம உருபு. உகத்தல் – உயர்தல்; ‘உகப்பே உயர்தல் உவப்பே உவகை’ என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். இருந்து – வினைமுற்று. ‘கழிந்தது பொழிந்தென வான் கண் மாறினும், தொல்லது விளைந்தென நிலம்வளம் கரப்பினும்’ ( புறம். 203 ) என்ற இடத்துக் கழிந்து, பொழிந்து என்பன, வினை முற்றுப்பொருளவாதல் காண்க. அன்றி, இதனை எச்சமாகக் கோடலுமாம்.

    ஈடு : நாலாம் பாட்டு. ‘நாம் மருவி நன்கு ஏத்தி உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட’ என்று தம்முடைய தாழ்வினைச் சொன்னவாறே, ‘இவர் நம்மை விடின் செய்வது என்?’ என்று அவன் ஐயம் கொள்ள, ‘நிர்ஹேதுகமாக 1உன் வடிவழகை என்னை அனுபவிப்பிக்க அனுபவித்து அத்தாலே உருக்குலைந்த நான் உன்னை விடக் காரணம் உண்டோ?’ என்கிறார்.

    வள்ளலே – 2நிர்ஹேதுகமாக உன்னை எனக்குத் தந்த பரம உதாரனே! மதுசூதனா – நீ உன்னைத் தருமிடத்தில் நான் ஏற்றுக் கொள்ளாதபடி பண்ணும் விரோதிகளை,’ மதுவாகிற அசுரனை அழித்தது போன்று அழித்தவனே! என் மரதக மலையே -1உன்னை நீ ஆக்கும்படி உன்னிலும் சீரியதாய், சிரமத்தைப் போக்கக் கூடிய தாய், அளவிட முடியாத வடிவழகை அன்றோ எனக்குக் கொடுத்தாய்? உன்னை நினைந்து எள்கல் தந்த எந்தாய் – உன்னை நினைத்தால் மற்றைப் பொருள்களை நான் விடும்படி பண்ணினவனே! இனி, ‘என்கல் தந்த’ என்பதற்கு, ‘உன்னை நினைத்தால், 2‘காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்’ என்கிறபடியே, அள்ளி எடுக்க வேண்டும் படி பண்ணித் தந்த என் நாயனே!’ என்று பொருள் கூறலும் ஆம். எள்கல் – ஈடுபாடு. முன்னைய பொருளில், கொடைத்தன்மை விளங்கும். உன்னை எங்ஙனம் விடுகேன் – 3‘உன் விஷயத்திலே இப்படி ஈடுபட்ட யான் உன்னை விடக் காரணம் உண்டோ?’ என்னுதல்; ‘உன்னை நினைத்தால் மற்றைப் பொருள்களில் விரக்தனான யான் விட மரியாதை உண்டோ?’ என்னுதல். 4உதாரன் அல்லை என்று விடவோ? விரோதியை அழிக்கின்றவன் அல்லை என்று விடவோ? உனக்கு வடிவழகு இல்லை என்று விடவோ? எங்ஙனம் விடுவேன்?’ என்றபடி.

    இனி, மேல் எல்லாம் அவனுடைய ஐயத்தினைத் தீர்க்கிறார்; வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப் பாடிக் களித்து உகந்து உகந்து – கடலோடு ஓத்திருந்துள்ள உன்னுடைய நற்குணங்களை நாலு மூலையும் புக்குப் பரந்து, நான் 5மறுநனைந்து பிரீதியினாலே தூண்டப்பட்டவனாய்க் கொண்டு பாடி, அத்தாலே செருக்கி மிகவும் பிரீதனாய். உள்ள நோய்கள் எல்லாம் துரந்து – கர்மம் காரணமாக வருமவை, உன்னைப் பிரிந்து படுமவை, ‘தாழ்ந்தவன்’ என்று அகன்று வருமவைமுதலிய நோய்கள் எல்லாவற்றையும் ஓட்டி. உய்ந்து – 1‘கடவுள் உளன் என்று நினைத்தால் இவனும் உள்ளவன் ஆகின்றான்’ என்கிறபடியே உய்வு பெற்று. போந்து -சம்சாரிகளைக்காட்டிலும் வேறுபட்டவனாய். இருந்து – பாரம் இல்லாதவனாய் இருந்து. ‘வள்ளலே! மதுசூதனா! உன்னை எங்ஙனம் விடுகேன்?’ என்க.

நாம் ஆட -நைச்சயம்  அனுசந்தித்தவாறே -விடில் செய்வது என் -அதி சங்கை 
உன் வடிவழகை  அனுபவித்து -நிர்ஹெதுகமாக காட்டி கொடுத்த பின் -விடுவேனோ -
வள்ளலே மது சூதனா -உன்னை நினைந்து உருக வைத்த பின் எங்கனே விடுவேன் -
மாசுச -என்கையாலே சோக ஜனகம் -
விட்டு விடுவாரோ அதி சங்கை பட்டான் -
வள்ளலே – தன்னையே -நிர்ஹெதுகமாக உன்னை தந்த -ஈகை 
மது சூதனே -விரோதி நிரசனம் -கொடுக்கும் இடத்தில் -விரோதி அழித்து -
என் மரகத மலை -கீழே பொன் —மரதகம் மரகதம் 
பவளம் பளவம் போல் -
உன்னை நீ ஆக்கும் படி -உன் வடிவு அழகு தானே -
ஸ்ரமகரம் -அபரிசேதமான வடிவு அழகு மரகத மலை -பரந்து விரிந்த தத்வம் -
உன்னை நினைந்து எள்கல்-எள்ளிநகை ஆட மற்ற    விஷயங்களை அலஷியம் 
எள்கல் ஈடுபாடே -கால் ஆளும் நெஞ்சு அழியும் -வாரி எடுத்து அனுபவிக்க 
உன்னை எங்கனம் 
உதாரன் இன்றி விடவோ 
விரோதி நரசன் இன்றி விடவோ 
வடிவழகு இல்லை என்று விடவோ 
உன் விஷயத்தில் ஈடுபட்ட பின் -இதர விஷயங்களில் எள்கல் வந்த பின் 
இனி மேல் எல்லாம் அவன் அதி சங்கை தீர்க்கிறார் 
கடல் போல்கல்யாண குணங்களை – 
நன்றாக -மறு நைந்து -முதுகு நனையும் படி குடைந்து ஆடி பாடி கழித்து உகந்து 
உள்ள நோய்கள் எல்லாம் துரந்தேன் 
கர்ம நிபந்தனம் -உன்னை பிரியும்  படும் அவை -அயோக்யன் என்று அகலுகை -எல்லாம் -
ஒட்டி -உய்ந்து -உள்ளபடி அறிந்து -அசந்நேவ பவதி-அசத்-நினைத்தால்நாம் அசத் 
பிரம சத் இத வேததே சந்தநேவ – பிரம ஞானம் உள்ளவன் சத் 
உஜ்ஜீவித்து 
போந்து -சம்சாரிகளை விட்டு வந்து -
இருந்து-நிற்பரனாய் இருந்து 
வள்ளலே உன்னை எங்கனம் விடுவேன் -விடுகை ஒருக்காலும் இல்லை 

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-6-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள்

November 6, 2012

 தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும்
தலைமகனைத் துழாய்விரைப்
பூமருவு கண்ணி எம்பிரானைப் பொன்மலையை
நாம்மருவி நன்குஏத்தி உள்ளி வணங்கி
நாம்மகிழ்ந்து ஆட நாஅலர்
பாமருவி நிற்கத் தந்த பான்மையே! வள்ளலே!

    பொ-ரை : தாமரைக்கண்ணனாய் விண்ணோர் துதிக்கின்ற தலைமகனாய் வாசனையையுடைய பூக்கள் பொருந்திய திருத்துழாய் மாலையைத் தரித்த எம்பிரானாய்ப் பொன்மலையாய் இருக்கின்ற உன்னை, வள்ளன்மை உடையவனே! நான் வந்து கிட்டி நன்கு ஏத்தி நினைத்து வணங்கி நான் மகிழ்ந்தாடும்படியாக நாவிலே அலரும்படியான பாசுரங்களிலே பொருந்தி நிற்கும்படி திருவருள் செய்த தன்மைதான் என்னே!

வி-கு : ‘தாமரைக்கண்ணனை’ என்பது போன்ற இடங்களில் ஐகாரம்: அசைநிலை. அலர்பா : வினைத்தொகை.

ஈடு : மூன்றாம் பாட்டு. 2‘நித்தியசூரிகளுக்கும் அவ்வருகானவன் தன்னை நான் தேசிகனாய் அனுபவிக்கும்படி பண்ணின இதுவும் ஓர் ஒளதார்யமேதான்’ என்கிறார். தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை – ஒருகால் திருக்கண்களாலே குளிர நோக்கினால் அதிலே தோற்றுச் சன்னிசுரம் பிடித்தவர்களைப் போன்று 1அடைவு கெட ஏத்தாநிற்பர்கள் ஆயிற்று நித்தியசூரிகள்.2‘ஜமதக்நியின் புதல்வரும் அடைவு கெடப் பேசுகிறவருமான பரசுராமரிடத்தில் இப்பொருள் கேட்கப்பட்டது’ என்பது பாரதம். தலை மகனை – இவர்கள் ஏத்தாநின்றாலும் 3‘குற்றம் இல்லாதவர், அடைவதற்கு முடியாதவர்’ என்கிறபடியே, அவன் பரன் ஆகவே இருப்பான். துழாய் விரை பூமருவு கண்ணி எம்பிரானை – விரையும் பூவும் மருவி இருந்துள்ள துழாய்க்கண்ணி எம்பிரானை. நித்தியசூரிகளைக் கண் அழகாலே தோற்பித்தான்; இவரைக் கண்ணியிலே அகப்படுத்தினான். அதாவது, ‘மார்வில் மாலையைக் காட்டி மால் ஆக்கினான்’ என்றபடி. பொன் மலையை – என்னுடைய கலவியால் எல்லை இல்லாத அழகையுடையவனாய், கால் வாங்க மாட்டாதே இருக்கிறவனை. இனி, ‘தாம் ஏத்தியபடியாலே வளர்ந்தபடியைத் தெரிவிப்பார், 5பொன் மலையை’ என்கிறார்’ எனலுமாம். ஆக, இதனால், இவரைப் பெற்ற பின்பு வளர்ந்து புகர் பெற்றபடியைத் தெரிவித்தபடி. நாம் மருவி – 6‘அருவினையேன்’ என்று அகலக்கூடிய நாம் கிட்டி. நன்கு ஏத்தி – நித்தியசூரிகள் ஏத்தக்கூடிய பொருளை நன்றாக ஏத்தி; 7‘வானவர் சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனை, எந்தையே என்பன்’ என்று முன்பு அகன்றவர் ஆதலின், இப்பொழுது ‘நாம் நன்கு ஏத்தி’ என்கிறார். இனி 8‘ஆனந்த குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள் திரும்புகின்றனவோ?’ என்கிறபடியே, வேதங்களுங்கூட மீண்ட விஷயத்தை மறுபாடுருவ ஏத்துகின்றார் ஆதலின், ‘நன்கு ஏத்தி’ என்கிறார் எனலுமாம்.

    உள்ளி -1‘நினைந்து’ என்று அநுசந்தானத்திற்குப் பிராயச் சித்தம் தேடவேண்டாமல் நினைத்து. வணங்கி – குணங்களின் பலாத்காரத்தால் தூண்டப்பட்டுச் செருக்கு அற்று வணங்கி. இனி, 2‘வணங்கினால், உன் பெருமை மாசு உணாதோ’ என்று நாம் வணங்கி எனலுமாம். நாம் மகிழ்ந்து ஆடபகவானுடைய அனுபவத்தால் வந்த பிரீதியான பொருளைக் கனாக்கண்டு அறியாத நாம் மகிழ்ந்தவராய் அதற்குப் போக்கு விட்டு ஆட. நா அலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே – நாட்பூ அலருமாறு போன்று நாக்கின் நுனியிலே மலர்கின்ற பாவானது என்பக்கலிலே நிற்கும் படியாகத் தந்த இதுதன்னை இயல்பாக உடையையாய் இருக்கிற பரம உதாரனே! 3மனத்தின் துணையும் வேண்டாதபடி இருத்தலின் ‘நா அலர் பா’ என்கிறார்.

    ‘தாமரைக் கண்ணனாய் விண்ணோர் பரவும் தலைமகனாய்த் துழாய் விரைப்பூமருவு கண்ணி எம்பிரானாய்ப் பொன் மலையாய் இருக்கிற தன்னை, நாம் மருவி நன்கேத்தி உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆடும்படி, நா அலர் பா மருவி நிற்கத் தந்த பான்மை 4ஏய்ந்த வள்ளலே!’ என்று சொல்லுகிறார் ஆகவுமாம். அன்றி, ‘தாமரைக் கண்ணனை’ என்பது போன்ற இடங்களிலுள்ள ஐகாரத்தை அசைநிலை ஆக்கி, ‘தாமரைக் கண்ணனாய், பொன் மலையாய் இருக்கிற நீ, நாம் மருவி – நா அலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே- இதுவும் ஒரு தன்மையே! வள்ளலே – பரமோதாரனே!’ என்கிறார் ஆகவுமாம்.-

நித்ய சூரிகளுக்கும் அவ்வருகு -அடியேனும் அனுபவிக்க பண்ணினானே
இது என்ன ஆச்சர்யம் என்கிறார்–நான் தேசிகனாய் -வல்லவனே -கரை கண்டவனாய் -அனுபவிக்கும் இதுவும் ஔ தார்யம்

தன்னை முற்றூட்டாக கொடுத்த வள்ளல் தன்மை
எனக்கே தன்னை தந்த கற்பகம் அப்புறம் சொல்லுவார் -கேசவன் தமர்
மனுஷ்யர்க்குள் தேவா போல் -தேவர்க்கும் தேவாவோ -
தாமரைகண்ணன் -விண்ணோர் தலைவன்
திரு துழாய் விரை பரிமளம் மிக்க தொடுக்கப் பட்ட மாலை
பொன் மலை -ஒக்கம்
நாம் மருவி -நன்கு ஏத்தி -உள்ளி -வணங்கி மனோ வாக்கு காயம்
மகிழ்ந்து ஆட -குடைந்து பருகும்படி
நா வலர் -கவிகள் பா மருவி -நிற்கத் தந்த பான்மையே -வள்ளலே -கொண்டாடுகிறார் -
ஒரு கால் -குளிர நோக்கினால் அதிலே தோற்று -ஜுர சந்நிதபர் போல் -அடைவு கெட ஏத்த
விண்ணோர்கள் தாமரை கண்ணன் என்று பரவுகிரார்கள் -சேர்த்து அர்த்தம்
மோஷ தர்மம் -விஷ்ணு தர்மம் -ஜாம தக்னாஸ் ஜல்பனம் –அது போல் -பிரமாணம் -
சாந்தோக்ய தஸ்ய யதா கப்யாசம் -அவனே -தாமரை கண்ணன்
தலை மகன் -இவர்கள் ஏத்தா நின்றாலும் பரனாக இருப்பான்
நிரவத்யா பரே பரண் -
துழாய் விரை -நித்ய சூரிகளை கண் அழகால் தோற்ப்பித்தான்
இவரை கண்ணி அழகால் தோற்பித்தான் -
திரு மஞ்சனம் வெள்ளை வஸ்த்ரம்-திரு துழாய் -சர்வ ஸ்தானம் -மறைக்காமல் அனுபவிக்க கொடுக்கிறான் -
ஜெய்ஷ்டாபிஷேகம் -கவசம் கூட இல்லை
முற்றூட்டாக அனுபவம் -
மார்பில் மாலையை காட்டி மால் ஆக்கினான் -பித்து -
விரை பரிமளம்
விரையும் பூவும் மருவி
பொன் மலையை -என் ஓட்டை கலவியால் அபரிச்சித்த மலை போல் -
கால் வாங்காமல் ஸ்திரமாக நிற்கிறான் -
நான் ஏத்த வளருகிறான் -
இவரைப் பெற்ற பின்பு வளர்ந்து புகர் பெற்ற படி பொன் மலை -
நாம் மருவி -அவனோ விண்ணூர் பரவும் தலைமகன்
நான் அருவினையேன் கிட்டிவானோர் இறையை -அங்கே வள எள் உலகில்
நித்ய சூரிகள் -ஸ்தோத்ரம் செய்வது போல் -நன்கு ஏத்தி
வானோர் சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனை எந்தையே -சொல்லி அகன்றவர்
இப்பொழுது அகல மாட்டாமல்
வேதம்மீண்ட விஷயத்தை மறு பாடு உருவ -பாட வைத்தான் -பூர்த்தி
விளாக்குலை கொள்ளுதல் -பூரணமான அனுபவம்
ஏத்தி சொல்லி பின்பு உள்ளி
உள்ளி நினைந்து -அனுசந்தானத்துக்கு பிராயச்சித்தம் பண்ண தேடாதே -நினைந்து -
இவரை போய் ஸ்தோத்ரம் பண்ணினோமே என்று இல்லாதபடி நினைந்து -
வாயினால் பாடி சொல்லி மனத்தினால் சிந்திக்க ஆண்டாளும் -
அங்கு அர்த்தம் ஈடுபாட்டால் பதற்றத்தால் கரணங்கள் நான் முந்தி மேல் விழ -
சரியான விஷயம் தான் அனுசந்தித்தோம்
வணங்கி குணத்தால் பலாத்காரம் -இழுத்து குணங்கள் இட்டாய் -உயர் நலம் உடையவன்
உன் புகழ் மாசூணதோ இறாய்த்து சென்றவன் உள்ளி நினைத்து வணங்கி -
கனாக் கண்டு அறியாத நாம் ஹ்ருஷ்டராய்
நா வலர் நாக்கில் அலர பா -நாள் பூ அலறுமா போலே -நாட்பூ
நாள் பூ இல்லை
நாள் கள் நாள்கள் -நாட்கள் தப்பு -
ஜிஹ்வாக்ரகத்தில் நாக்குக்குள் மலரும் -
பான்மையே -வள்ளலே -ஸ்வாபாவம் -ஆக உடையவன்
நாவலர் பா -மனச சக காரமும் வேண்டாது இருக்காய் -
பகவத் அனுக்ரகத்தால் நாவில் வந்த பா -
மகிழ்ந்து ஆடும் படி
பான்மையே -தன்மையாக உடையவன்
பான்மை எய்ந்து இருக்கும் வள்ளல்
தாமரைக் கண்ணன் —நீ இப்படி பான்மை ஏய்-

 

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திரு-விருத்தம்-68..

November 6, 2012

கால மயக்கு-

மலர்ந்தே யொழிந்தில   மாலையும் மாலைப் பொன் வாசிகையும்
புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி பொரு கடல் சூழ்
நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்
கலந்தார் வர வெதிர்கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே – – 68- -
பாசுரம் -68-மலர்ந்தே ஒழிந்தில மாலையும் -கால மயக்கு காலம் இளையது என்றல் -கொண்ட பெண்டிர் -9-1-
அவதாரிகை -
கலந்து பிரிந்த தலைமகன் -கொன்றை பூக்கும் காலத்திலே வருகிறேன் -என்று காலம் குறித்துப்
போனானாய் -அக்காலம் வந்து அவையும் பூக்கச் செய்தே -அவன் வாராமையாலே தலை மகள்
தளர -அத்தைக் கண்ட தோழியானவள் -அக்காலம் அல்ல என்ன ஒண்ணாதபடி அது முடிகிக் கொடு
 நிற்கையாலே  -இவை பூக்க உத்யோகிக்கிறன  இத்தனை -பூத்துச்சமைந்தன வில்லை காண் -
ஆனபின்பு அவனும் வந்தானத்தனை –நீ அஞ்சாதே கொள் -என்று அவளை யாஸ்வசிப்பிக்கிறாள்-
வியாக்யானம் -
மலர்ந்தே ஒழிந்தில -அக்காலம் அல்ல காண் -என்னாமே தோழி –  கெடுவாய்
இவை இங்கனே மலரா நிற்க அல்ல காண் -என்னும்படி எங்கனே -என்ன -மலர உபக்ரமித்த
இத்தனை காண் -மலர்ந்து சமைந்தது இல்லை காண் -
மாலை இத்யாதி -மாலைகளாகவும் -
அம்மாலைகளாலே சமைந்த பொன் வாசிகை போலே -சுருளவும் இறே யவை தான் பூப்பது -
கண்டாருடைய ஹ்ருதயங்கள் அபஹ்ருததாம்படி -என்னுதல் -தழைப் பந்தல் தண்டுற நாற்றி
மலர்ந்தே ஒழிந்தில -என்னுதல் -தண்டுற நாற்றிக் கார்த்தன -என்னுதல் -
தழைப் பந்தலாக பணைகள் தோறும் -
கண்கள் தோறும் -நாற்றி -
புலந்தோய் -புலம் -இந்திரியங்களாய்-தோய்கை-அபஹரிக்கையாய் -
புலம் -பூமியாய் -தோய்கை-ஸ்பர்சிக்கையாய் -தரையிலே வந்து தோயும்படி -என்னுதல்
பொரு கடல் இத்யாதி -அவனுடைய அழியாத நித்ய விபூதியோடு ஒத்து உள்ளவள் அல்லையோ நீ -
அவன் உன்னை அழிய விட்டு இருக்குமோ -ஆவது அழிவது ஒரு விபூதியும் -அழியக் கூடாததொரு
விபூதியுமாய் இறே இருப்பது -அழிய விட்டு மீட்டிக் கொள்ளும் லீலா விபூதியை -முதலிலே அழிகைக்கு
சம்பாவனை இல்லாதபடி நோக்கும் நித்ய விபூதியை –பொரா நின்றுள்ள கடலாலே சூழப்பட்ட
பூமியை தாவி அளந்து கொண்டு -அச் செய லாலே ஆஸ்ரித வர்க்கத்துக்கு அடங்க நாதனானவன் -
தனது வைகுந்த மன்னாய் -உனக்கு ஸ்வரூப ஞானம் இன்றிக்கே ஒழியுமோ -
அவனதான நித்ய விபூதியோடு  ஒத்து இருந்துள்ளவள் அன்றோ நீ -அவ் விபூதியை விடில்
அன்றோ உன்னை விடுவது -உன்னை தளர விட்டு இருக்குமோ
-கலந்தார் -உன் ஸ்வ ரூபத்தை அழியாது
ஒழிந்தால் -அவன் தன் ஸ்வ ரூபத்தையும் அறியாது ஒழியுமோ -உன்னோடு கலந்து சுவடி அறிந்தவன் -
உன்னை விட்டு இருக்குமோ -கலந்தார் -என்றே காணும் அவனுக்கு நிரூபகம் -
வா வெதிர் கொண்டு -
வாசி யறியாத ச்த்தாவரங்களும் கூட -அகால பலி நோ வ்ருஷா -என்று அவன் வர உத்யோக்கிகிற   படியைக் கண்டு
அலராமல் நிற்க -நீ தளரும் இத்தனையோ -வன் கொன்றைகள் -அவன் வரில்  அலரக் கடவதாய் -இல்லையாகில்
தவிருமதாய் -இப்படி அவன் வரவோடு தப்பாதான கொன்றைகள் -கார்த்தன -சினைத்தன -கருவடைந்தால்
ஒரு நிறம் உண்டு இறே இடுவது -அத்தை சொல்லிற்றாதல் -அன்றியே கார்காலத்தை காட்டி நின்றன -என்றது ஆதல் -
பொருகடல் சூழ் நிலம் தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய் -வன்கொன்றைகள்
கலந்தார் வர வெதிர் கொண்டு கார்த்தன -மாலையும் மாலைப் பொன் வாசிகையும் புலந்தோய்
தழைப் பந்தல் தண்டுற நாற்றி மலர்ந்தே ஒழிந்தில -அன்றிக்கே கார்த்து மலர்ந்தே ஒழிந்தில  -என்னுதல் -
ஸ்வா பதேசம் -
இத்தால் அவனுடைய குண ஜ்ஞானத்தாலும் -இத்தலையை அவன் அவஹாகித்த படியாலும்
போக யோக்யமான காலத்தில் வாராது ஒழியான் என்று பார்ஸ்வச்தர் ஆஸ்வசிக்கிறபடியை   சொல்லுகிறது -
தழைப் பந்தல் தண்டுற நாற்றி -தழை -செறிந்த  -பந்தல் -பந்தலாக -தண்டு -சாகைகளிலே
 -உற -சிக்கென -நாற்றி -நாலா நின்று கொண்டு -என்று சப்தார்த்தம் -
சினைத்தல் -கர்ப்பமாதல்- மொட்டாதல்
————————————————————————————————————————————————————————————-
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

திரு-விருத்தம்-67..

November 6, 2012
தலைவன் பாங்கனுக்குத் தன் வலி யழிவு உரைத்தல்-
காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு அசுரைச் செற்ற
மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்
தூவியம் பேடை யன்னாள் கண்களாய துணை மலரே – – 67- -
பாசுரம் -67-காவியும் நீலமும் வேலும் கயலும் பல பல -தலைவன் தன்  வலி யழிவு  உரைத்தல் -உலகமுண்ட பெரு வாயா -6-10-
அவதாரிகை -
இப்பாட்டும் -கண் அழகு தன்னையே தலைமகன் சொல்லுகிறான் -
வியாக்யானம் -
காவியும் -இத்யாதி -இக் கண்ணுக்கு ஒப்பு தேடப் புக்கால் -விஷ்ணு நா சத்ருசோ வீர்யே -என்கிறபடியே -
ஒரோவாகாரங்களாலே ஒன்றாக பலவற்றையும் பிடித்தால் எல்லாம் கூட ஒப்பாக வற்றோ -மாட்டாதோ -
என்னும்படி இறே இவை தான் இருப்பது – விஷ்ணு நா சத்ருசோ வீர்யே -பரத்வம் வீர்ய குணம்
ஒன்றுக்கே ஒப்பாம் இத்தனை -இப்படி சீலாதி களைக் கண்டு அனுபவிக்க ஒண்ணாது இறே அங்கு -
சிவப்பாலே செங்கழு நீரை வென்று -கருமையாலே நெய்தலை வென்று -ஓர் ஆளும் ஓர் நோக்கும்
நேராய் இருக்கும் படியாலே -வேலை வென்று -மௌ க்த்யத்தாலே கயலை வென்று -மற்றும் ஒப்பாக
சொல்லும் அவற்றை அடைய புக்க விடம் புக்கு என்று -ஆவியின் தன்மை அளவல்ல பாரிப்பு -
தன்னடையே அழியும் அவற்றை யழிக்கை வெற்றிக்கு உடலோ -வென்று அழியாதான ஆத்மா
வஸ்துவையும் -அழிப்பதாக கோலா நின்றது -ஆவியின் தன்மை அளவல்ல -இவ் வாத்ம வஸ்துவின்
அளவு அன்றிக்கே -இதனுடைய சத்தா ஹேதுவான பதார்த்தத்து அளவும் செல்லுவன போலே
இரா நின்றது -இவளுடைய அவயவங்கள் அவனையும் கூட மலக்கவல்ல போலே காணும் -
அசுரரை இத்யாதி -அசூர வர்க்கத்தை அடைய அழியச் செய்து -மகானாய் -அவன் தன்னோபாதியும்
பெரியனாய் -விச்மயநீயமான வியாபாரங்களை உடையனாய் இருந்துள்ள பெரிய திருவடியை
கருத்து அறிந்து நடத்த வல்லவன் -மாதவன் -கருட வாஹனன் ஏற்றத்துக்கு மேலே   லஷ்மி பதி
என்னும் ஏற்றத்தை உடையவன் -கோவிந்தன் -அவளோட்டை கலவியாலே ஆஸ்ரித சுலபனாய்
அந்த சௌலப்யம் தான் பரத்வம் என்னும்படி திருமலையிலே வந்து சுலபனானவன் -
கோவிந்தன் உடைய வேங்கடத்தில் சேருமதாய் – புறம்பு ஓர் இடத்திலும் பொருந்தாதான
தூவியம் பேடை உண்டு -அழகிய சிறகை உடைய அன்னப்பேடை -அத்தோடு ஒத்து இருந்தவள் -
அன்றிக்கே -தூவியம்பேடை -என்று பெரிய பிராட்டியை சொல்லிற்றாய் -அவளோடு ஒத்து இருந்துள்ளவள்
என்னவுமாம் -கருட வாஹனன் லஷ்மி பதி -என்கிற இவை இப்போது சொல்லுகிறது என் என்னில் -
சௌலப்யம் சொல்ல நினைத்து -அது குணம் ஆகைக்கு அடியான பரத்வத்தை சொல்லி -பின்பு
அந்த சௌலப்யம் எல்லையில் வந்தார் -
கண்களாகிய துணை மலரே -கண்கள் என்ற வ்யபதேசத்தாலே
ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய் இருப்பன -இரண்டு பூக்கள் ஆயிற்றின -கண்களாய  துணை மலரின் பாரிப்பு
காவியும் நீலமும் வேலும் கயலும் பல பல வென்றாவியின் தன்மை யளவல்ல -
ஸ்வா பதேசம்
இத்தால் -திருமலையிலே வந்து நிற்கிறவனுடைய சீல குணத்திலே
வித்தராய் இருக்கிற ஆழ்வார் படி போக்தாக்கள் அளவல்ல -என்று ஸ்ரீ வைஷ்ணவர்கள்
சொல்லுகிற பாசுரத்தை பார்ஸ்வச்த்தர் பாசுரத்தால் தாம் அனுபவிக்கிறார் -
அவன் தன்னோபாதி பெரியனாய் -வியம -விஸ்மயநீயமான – வியாபாரங்களை உடைய -
புள் -பெரிய திருவடியை -அசுரரைச் செற்ற மாவியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன்
வேங்கடம் சேர் தூவியம் பேடை அன்னாள் கண்களாய துணை மலரினுடைய பாரிப்பு -
காவியும் நீலமும் வேலும் கயலும் பல பல வென்றாவியின் தன்மை யளவல்ல -என்று அந்வயம் -
காவி -என்கிற நிறத்தாலே -ராகத்தை சொல்லி பக்தி நிஷ்டரையும் -
நீலம் -என்ற   அஞ்ஞனத்தாலே -பிரகாசத்தை சொல்லி -ஞான நிஷ்டரையும் -
வேலும் கயலும் -என்ற சகாரத்தாலே -கர்ம நிஷ்டரையும் -
எல்லாரையும் ஜெயித்து இருக்கும் ஆழ்வார் உடைய ஞானம் என்றபடி -
கடைக் கண் சிகப்பினால் செங்கழு நீரையும்
கரு விழியின் கருமையினால் -கரு நெய்தலையும்
நோக்கின் கூர்மையினால் வேலாயுதத்தையும்
ஆகார சௌந்தர்யம் -கெண்டைகளையும் -
இப்படி மற்று உள்ள குணங்களினால் மற்ற வஸ்துக்களையும் -
அதிசயித்து -என் ஆத்மாவையும் அபகரித்து -எனக்கு ரஷகனான ஸ்ரீ ய பதியையும்
வசீகரிப்பதாய் வியாபிக்கத் தொடங்கிற்று -ஆகையால் நான் இதன் நின்றும் மீள சக்தன் ஆகிறிலேன்-
—————————————————————————————————————————————————————————–
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திரு-விருத்தம்-66..

November 5, 2012
தலைவன் பாங்கனுக்கு கழற்றெதிர் மறுத்தல்-
உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்வினவாம் எரி நீர் வளி வான்
மண்ணாகிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாள்
கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே – -66 – -
பாசுரம் -66-உண்ணாது உறங்காது உணர்வுறும் எத்தனை -தலைவன் தோழன் பேச்சை மறுத்தல் -ஆராவமுதே -5-8-
அவதாரிகை
தலைமகள் கண் அழகில் ஈடுபட்ட தலைமகன் வார்த்தை இதுவும்
வியாக்யானம் -
உண்ணாது இத்யாதி -பிராக்ருத போகங்களால் தரியாதாராய் -பிரக்ருதிப்ராக்ருதங்கள்
த்யாஜ்யம் -என்னும் புத்தியை உடையராய் -அவ் வாத்மா வஸ்து தான் ஸ்வ தந்த்ரம் -என்று
இருக்கை யன்றிக்கே -ஆத்மா யாதாம்ய ஜ்ஞான பூர்வகமாக -ஈஸ்வர ஜ்ஞானத்தை உடையராய் -
இது அவனுக்கு பிரகாரம் -என்று இருக்கும்படி -பரம யோகம் கை வந்துள்ள அவர்களுக்கும் -
எண்ணாய் மிளிரும் இயல்வினவாம் -அவர்களும் இக்கண்ணுக்கு இலக்கானாராகில்
அவர்களுக்கும் ஆஸ்ரயமான பரத்வம் தன்னையும் காற்கடை கொண்டு – இத்தையே
அது அது -என்று எண்ணும்படி பிரகாசிக்கையே ஸ்வ பாவமாய் உள்ளன -
எரி இத்யாதி -காரணமான பூத பஞ்சகங்களும் கார்ய ஜாதத்துக்கு எல்லாம்  உப லஷணம்-
அக்நி-நீர் -காற்று -ஆகாசம் -பூமி -இவை அடைய தனக்கு விபூதியாக உடையவன் -
எம்பெருமான் -அவனுடைய விபூதி யோகம் தமக்கு பேறாய் இருக்கிறபடி –  அவனுடைய
குணங்களோபாதி   விபூதி யோகமும் தமக்கு உத்தேயமாய் இருக்கிறபடி -
தனது வைகுந்த மன்னாள் -மானாதி போல் ஆவது அழிவதாம் விபூதி போல் அன்றிக்கே -
ஒரு நாளும் அழியாததாய் -அவனுக்கு அசாதாரணமாய் -அந்தரங்கமாய் இருக்கும்
நித்ய விபூதி உடன் ஒத்து இருக்கிறவள் -
கண்ணா இத்யாதி -அப்படிப் பட்டவள் பக்கலிலே வந்தவாறே -
பிரதான அவயவகமாய் -என் பக்கலிலே வந்தவாறே -அசேத்யமாய் -அதாஹ்யமாய் -அழியாதாய்
இருந்துள்ள ஆத்மா வஸ்துவாய் -பாதகமாம் இடத்தில் ஸ்வதந்த்ரமாய் -கண்ணுக்கு விஷயமாய் நின்று
பாதகம் ஆகா நின்றன -
அரு வினையேன் -ரஷகம் ஆனவை வே பாதகமாம் படி பாபத்தை பண்ணினேன் -
உயிர் ரான காவிகளே -அவள் பக்கலிலே வந்தவாறே கண்ணாய் -என் பக்கலிலே வந்தவாறே உயிராய் -
இவை தான் நிரூபித்த வாறே வடிவு சில காவிகளாய் இரா நின்றன -உயிரான காவிகளே  -உயிர் தான்
கொண்டு நின்று பாதகம் ஆகுமா -
ஸ்வா பதேசம்
இத்தால் ஆழ்வார் உடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை கண்டு அனுபவிக்கும்
பாகவதர்களுக்கு -தேவு மற்று அறியேன் -என்னும் படி இறே இருப்பது -அவர்கள் அதை ஆதரிக்கிறது
பகவத் சம்பந்தத்தால் இறே -அதுக்கு அடியான பகவத் விஷயத்தை அநாதரித்து -இவரை ஆதரிக்க
வேண்டும்படி இவருக்கு ஸ்ரீ வைஷ்ணத்வம்  தலை நிரம்பின படியை சொல்கிறது -சரம அவதியை
கண்டு அனுபவித்தவர்கள் பிரதம அவதியில் நில்லார்கள் இறே -
எரி நீர் வளி வான் மண்ணாகிய எம்பெருமான் தனது வைகுந்த மன்னாள் கண்ணா
அருவினையேன் உயிரான காவிகளே -உண்ணாது உறங்காது உணர்வுறும் எத்தனை
யோகியர்க்கும் எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்-
என்று அந்வயம் –
——————————————————————————————————————————————————————————–
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திரு-விருத்தம்-65..

November 5, 2012

தலைவி நோக்கின் வாசி கண்டு தலைவன் குறிப்பறிந்து உரைத்தல் -

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று ஒரோகரும
முற்றுப் பயின்று செவியொடு உசாவி உலகமெல்லாம்
முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்றவே – – -65 -
பாசுரம் -65-கற்றுப் பிணை மலர்க் கண்ணின் குல -ம் வென்று -தலைவியின் கண்கள் கவர்ந்ததைத் தலைவன் கூறல் -நோற்ற நோன்பு -5-7-
அவதாரிகை -
தலை மகள் நோக்கி வீடுபட்ட தலைமகன் -ஆக்கங்கள் தனக்கு பாதகமானபடியை
பாங்கனுக்கு சொல்லுகிறான் -
வியாக்யானம் -
கற்றுப் பிணை மலர் -கன்றான மான் -முக்தமான மானுடைய கண் -
மலர்க்கண் -மலர் போல் இருக்கிற கண் என்னுதல் -விகசிதமான கண் என்னுதல் -
குலம் வென்று -அஜ்ஜாதியாக வென்று
ஒரோகருமம் இத்யாதி -ஒரோ கார்யத்திலே உற்று -அதிலே நெருங்கி -
அதை செவியொடு உசாவி -சர்வ விஷயமாக ஓர் இடத்திலும் பற்று இன்றிக்கே இராமே -ஒன்றிலே துணிந்து -
அதிலே நெருக்கி அத்தை தேசிகரோடே-போத யந்த பரஸ்பரம் -பண்ணுவாரைப் போலே
இவனையே ச விஷயமாக கடாஷிப்பது -இவன் பார்த்தவாறே கண்ணை மாற வைப்பதா
இருந்தபடி -யான் நோக்கும் காலை நிலை நோக்கு நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும் -
என்கிறபடியே -
உலகம் எல்லாம் இத்யாதி -சர்வ ரஷகனாவன் திருவடிகளில் இருந்து -அவன் எல்லைக்குள்ளே
இருந்ததாயிற்று பாதகம் ஆகிறது -
உற்றாம் உறாது மிளிர்ந்த -மாறுபாடுருவும்படி இவனை நோக்குவது -
அந் நோக்கிலே பரவசனாய் -இவன் பார்த்தவாறே அந் நோக்கை மாற வைப்பதாக கொண்டு
மிளிரா நின்றுள்ள -
கண்ணா யெம்மை உண்கின்றவே -கண் என்கிற வ்யபதேசத்தாலே -ஒரு பாதக
பதார்த்தம் என்னை நலியா நின்றது -
ஸ்வா பதேசம்
-இத்தால் ஆழ்வார் படியை கண்டவர்கள் இருக்கிற படி இறே இது -
கற்றுப் பிணை மலர்க்கண்ணின்
குலம் வென்று -என்கிற இத்தால் கார்ய புத்தி இல்லாத மௌ க்த்யத்தை -நினைக்கிறது
-ஒரோ கருமம்
உற்ற பயின்று -என்ற இத்தால் பிரபத்தியை சொன்னபடி இறே
-இது பின்னை ஜ்ஞான கார்யம் அன்றோ -
கீழ் சொன்ன மௌ க்த்யத்துக்கு சேர்ந்த படி எங்கனே என்னில் -அதில் கர்த்தவ்யாத புத்தி இன்றிக்கே
இருக்கையை நினைக்கிறது -இது தன்னை செய்யா நிற்கச் செய்தே -சாதனத்தில் அன்வயியாதே
ஸ்வரூபத்தில் அந்தர்பவித்து இருக்கும் இறே
-கண்ணா இத்யாதி -சொன்ன படியை அடையராய் இருக்கிற
இருப்பு தான் கண்டவரை ஈடுபடுத்துகிற படியை சொல்லுகிறது -
கற்றுப் பிணை மலர்க்கண்ணின் குலம் வென்று இருப்பதாய் -ஒரோ கருமமும் உற்றுப் பயின்று -
செவியொடு உசாவினால் போல் இருப்பதாய் -உலகம் எல்லாம் முற்றும் விழுங்கி உமிழ்ந்த
பிரானார் திருவடிக் கீழ் இருந்து -உற்றும் உறாத மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்ற -
என்று அந்வயம் -

—————————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திரு-விருத்தம்-64..

November 5, 2012
தலைவன் பேர் கூறித் தரித்து இருத்தலைத் தலைவி தோழிக்கு கூறி இரங்கல்
இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளினை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே – -64 – -
பாசுரம் -64-இருக்கு ஆர் மொழியால் நெறி இழுக்காமை -தலைவன் பேர் கூறி தரித்து இருத்தலைத் தலைவி தோழிக்குக் கூறி இரங்கல் -பாமுரு மூவுலகும் -7-6-
அவதாரிகை
திருக் கண்களால் குளிர கடாஷித்தான் என்று இறே கீழ் நின்றது -அல்லாதார் மேல் வையாதே
தம்மேல் விசேஷ கடாஷம் பண்ணுகைக்கு நிபந்தனம் என் -என்று ஆராய்ந்தார் -அஹ்ருதயமாக
திரு நாமத்தை சொன்னேனே என்ன -அத்தாலே ஆகாதே -என்கிறார் -
வியாக்யானம் -
இருக்கார் மொழியால் -இருக்கில் ஆர்ந்த மொழியாலே -பிரதிபத்தாக்களுடைய புத்தி விசெஷங்களாலே
அறை வயிறாகவும் பதறாகவும் பார்க்கலாயிருக்கும் இடங்கள் உண்டாய் இருக்கும் ஆயிற்று -
வேதங்களிலே அவன் விபூதியை பரக்க சொல்லா நின்றால்-அதிலே ஏக தேச பூதரானவர்கள்
பக்கலிலே பரத்வ பிரதி பத்தியை பண்ணியும் –  ப்ரசம்சாபரம் என்றும் சொல்லா நிற்பார்கள் -
அவன் ஸ்வரூப ரூப குண விபூதிகளை பேசுகிற இடத்தில் -ஸ்வரூப ரூப குண விபூதிகளில்
பிரமிப்பார்க்கும் பிரமிக்க அவகாசம் இல்லாதபடி பேசுகிற அநந்ய பரமான நாராயண அநு வாகாதிகளை
ஆயிற்று -அதில் ஆர்ந்த மொழியாக சொல்லுகிறது -சர்வே வேதாய த்ரைகம்பவந்தி -என்ற வாக்யங்களுக்கும்
ஒருவனே வாச்யன் ஆகை இறே உக்தம் –உத்க்ருஷ்ட பதார்த்தங்களுக்கு வாசகமான சப்தங்களை
இவ் அநு வகத்தில் நின்றவன் பக்கலிலே பிரயோக்கிகை யாலே எல்லாம் அவனையே சொல்லுகிறதாக
வேணும் இறே -
நெறி இழுக்காமை -பகவத் சமாராதனம் ஆகிற வைதிக மரியாதையை தப்பாமே -
உலகு அளந்த திருத் தாளினை -இவை அறியுமாம் -அறியாது ஒழியுமாம்  -என் உடம்பை நான் விடேன் -
என்று ச்வீ கரிக்கும் ஸ்வா பாவனாய்  உள்ளவனை -இவை அறியாது இருக்கச் செய்தே -தானே எல்லை நடந்து
மீட்டுக் கொண்டான் இறே -
நிலத் தேவர் வணங்கும் -சம்சாரத்தில் வர்த்தியா நிற்கச் செய்தே -விண்ணுளாரிலும்
சீரியர் -என்னும்படியான பூஸூரர்  ஆனவர்கள் -உலகு அளந்த திருத் தாளினை நெறி இழுக்காமை வணங்குவர் -
யாமும் -அவர்கள் உடைய பரிகரம் இன்றிக்கே இருக்கிற நானும் -அவா ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து -
சப்தாதி விஷயங்களில் உண்டான அவாவை -பகவத் விஷயத்தில் ஒருங்க பண்ண ஒட்டாத பாபத்தோடும்-அத்தை
அனுஷ்டித்த என்னோடும் கூட நொந்து -இப்படி இருப்பதொரு பாபம் உண்டாவதே – இத்தை அனுஷ்டிக்கைக்கு
நான் ஒருவன் உண்டாவதே -என்று நொந்து
-கனி இன்மையில் கருக்காய் கடிப்பவர் போல் -நெறி இழுக்காமை
வணங்கும் படி அவர்கள் தம் பாவம் எனக்கு இல்லை யாகிலும் -கனி இல்லாமையாலே கருக்காய்
மெல்லுவாரைப் போலே –பழம் இல்லாமையாலே பசும் காயைக் கடிப்பாரைப் போலே -
திரு நாமம் சொல் கற்றனமே -இதில் அர்த்த அனுசந்தானம் எனக்கு இல்லை -
 -

இதில் நான் உட்புகாத நிலை பார்க்கிறிலேன் -நிர்ஹேதுகமாக கடாஷித்தான் இத்தனை -
அன்றிக்கே -
அவா -இத்யாதி -பகவத் விஷயத்தில் அபிநிவேசத்தை அங்கு நின்றும் மீட்டு இதர
விஷயங்களிலே மடை மாற ஒட்டாத வினை உண்டு -பக்தி -அத்தோடும் -இப்போது பகவத்
அலாபத்தாலே படுகிற கிலேசத்துக்கு ஹேதுவாகையாலே பக்தி யை வினை என்னலாம் இறே -
அநிஷ்டாவஹம் பாபம் இத்தனை இறே -இது இல்லாதார் உண்டு உடுத்து சுகமே திரியா நின்றார்கள் இறே
கனி இன்மையால் கருக்காய் கடிப்பார் போல் -கனி இல்லாமையால் கருக்காய் கடிப்பார் போல் ஆயிற்று
இவருடைய அபிநிவேசத்துக்கு திரு நாமம் -அவனைக் கண்ணாலே கண்டு கையாலே அணைக்க
ஆசைப்பட்டாருக்கு  அவன் பேரைக் கொண்டு என் செய்வார்
-அன்றிக்கே
-கனி இன்மைக்கு இங்கனே பொருள் ஆகவுமாம் -

மேல் கனி இன்றிக்கே ஒழியும்படி முன்பே கருக்காய் கடிப்பாரைப் போலே -நித்ய சூரிகளுக்கு போக்கியம்
அன்றிக்கே ஒழியும்படி இவ்வஸ்துவை  நான் பேசி அழித்தேன் என்று ஆகவுமாம் -
பரமே வணங்கும்படி -அவர்களைப் போல் -சதுர்த்த வர்ணத்வாத் -அதிகாரம் இல்லை யாகிலும்
-திரு நாமம் மாத்ரம் சொன்னேன் -இத்தை வ்யாஜ்யமாக்கி நிர்ஹேதுகமாக கடாஷித்தான் என்றபடி -
அவர்களைப் போல் பக்தி பரவசனாய் அனுபவிக்க பெறாமை இழந்தேன் என்றும் -அவர்கள் அனுபவிக்கும்
விஷயத்தை கிட்டி அவத்யத்தை விளைத்தேன் என்றும் விஷாதத்திலே தாத்பர்யம்  -
—————————————————————————————————————————————————————————-
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திரு-விருத்தம்-63..

November 5, 2012
தலைவனை இயல் பழித்த தோழிக்குத் தலைவி இயல் பட மொழிதல் -
வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர் விழிய
தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
எண்ணம் புகுந்து அடியேனோடு யக்காலம் இருக்கின்றதே – – 63- -
பாசுரம் -63-வண்ணம் சிவந்துள வான் நாடு அமரும் -தலைவி தோழியிடம் தலைவன் இயல்பை எடுத்துக் கூறுதல் -இவையும் அவையும் -1-9-
அவதாரிகை -
முறையோ -என்று கூப்பிட்டால் ஆறி இரான் இறே -வந்து குளிர நோக்கினான் -
வியாக்யானம் -
வண்ணம் சிவந்துள -திருக் கண்களுக்கு சிவப்பு பிறப்பே ஸ்வா பாவமாய் இருக்கும் இறே -இப்போது
வண்ணம் சிவந்துள -என்கிற இத்தால் -பூர்வ அவஸ்தையிலும் வைவர்ண்யம் அத்தலையிலே
 என்னும் இடம் தோற்றுகிறது-ந ஜீவேயம் ஷணம் அபி – என்னும் ஆற்றாமையில் ஏற்றம் அத்தலை இறே -
ஆகையால் கண்ணும் -காணாமையால் வந்த சிவப்பில் வைவர்ண்யம் தீர்ந்தது இப்போது என்று
தோற்றும்படி இருக்கை -
வானாடு அமரும் குளிர் விழிய -த்ரிபாத் விபூதியாக -கண்ணில் குமிழி கீழே யாயிற்று
ஜீவித்து கிடப்பது -வானாடு அமரும்படியான -குளிர்ந்த கடாஷங்களை உடைய -அமருகை யாவது -இத்தாலே
உண்டு உடுத்து வர்திக்கை -தாரக போஷாக போக்யமும் -எல்லாம் இவையாய் இருக்கை -
தண் இத்யாதி -குளிர்ந்து மிருதுவாய் இருப்பதொரு -தாமரைப் பொய்கை பரப்பு மாறப் பூத்தால் போலே
யாயிற்று திருக் கண்கள் இருப்பது -தாம் இவையோ -தஸ்ய யத்ர கப்யாசம் புண்டரீக மேவ அஷணீ-என்று
கேட்டார் வாய் கேட்டு இருந்தோமே -அவை தான் இருக்கும்படி இதுவே -
கண்ணன் திருமால் -திருமால் கண்ணன் -
ஸ்ரீ ய பதி யாகையாலே  ஆஸ்ரிதர்க்கு கையாளானவன் -திரு முகம் தன்னோடு காதல் செய்தேற்கு -அழகிய
திரு முகத்தோடு வந்து -குளிர நோக்க நோக்க வேணும் என்று ஆசைப்பட்ட எனக்கு -எண்ணம் புகுந்து -நான் மநோ ரதித்த
படியே -கை புகுந்தது என்னுதல் -அன்றிக்கே எண்ணம் புக்கு என்றாய் -என்னுடைய மநோ ரதத்தை தானே ஏறிட்டு கொண்டு -
அடியேனோடு-ஜிதம் -என்கிறார் -அஹம் அர்த்தத்தின் உடைய ஸ்வரூபம் அடியேன் என்று போலே காணும் இருப்பது -
ஜீவ ஸ்வரூப பரமான வாக்யத்தில் படியே இறே சொல்லுகிறது -அது ஜீவ ஸ்வரூப பரமோ  என்றால் -
ஒமித் யாத்மானம் யுஞ்சித -என்றும் உண்டு -ஓங்காரோ பகவான் விஷ்ணு -என்றும் சொல்லா நின்றது இறே -
இக்காலம் -இப் பேற்றுக்கு வருமாறு முனை நாள் அறிந்திலேன் கிடீர் -இருக்கின்றனவே -நச புன ஆவர்த்ததே -
என்னும் பேற்றைப் பெற்றோம் என்று -தோன்றி இரா நின்றது -ஒரு நாளும் இனி பிரிக்கைக்கு -
சம்பாவனை இல்லை என்று தோற்றும்படி இரா நின்றது -பிரத்யஷ சாமாநகாரம் ஆகிலும் இவருக்கு
சாமானகாரமாக தோற்றாதே
-பிரத்யஷம் என்று இறே தோற்றுவது -
கண் அழகுக்கு தோற்று அடியேன்  என்கிறார் என்னுதல் -ஸ்வா பாவிகமான சேஷத்வத்தை இட்டு சொல்லுகிறார் ஆதல் -
குண க்ருதம் ஆதல் -ஸ்வரூபம் ப்ரயுக்தம்  ஆதல் -
சிறந்த வர்ணத்தை உடையவனாய் -வானாடு அமரும்படியான குளிர்ந்த கடாஷத்தை உடையவனாய் -
தண் மென் கமலத் தடம் போல் பொலிந்து இருப்பவனவான இந்த கண்களானவை -திருமால் கண்ணனுடைய
திருமுகம் தன்னோடும் காதல் செய்த என்னுடைய எண்ணம் புகுந்தபடி -அடியேனோடு -இக்காலம் இருக்கின்றது -
என்று அந்வயம் -
ஜீவ ஸ்வரூப -ராஜ புருஷ -சப்த பிரதாந்யத்தாலே ஜீவ பரமும் -ராஜ்ஞா புருஷ  -என்கிற அர்த்த பிரதாந்யத்தாலே
பகவத் பரமுமாய் இருக்கும் என்றபடி -இருக்கின்றதே -அவதாரணத்தாலே நிச்சிதம் என்று தோற்றுகையாலே
அருளிச் செய்கிறார் -
——————————————————————————————————————————————————————————–
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

திரு-விருத்தம்-62..

November 5, 2012

தலைவியின் ஆற்றாமையைத் தோழி தலைவனுக்கு கூறுதல் -

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல்  ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணைமேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே – – – 62- -
பாசுரம் -62-இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண் பால் -தலைவியின் ஆற்றாமையைத் தோழி தலைவனுக்குக் கூறுதல் -தேவிமார் ஆவார் -8-1-
அவதாரிகை -
கீழ் கிருஷ்ண அவதார சௌலப்யம் இறே  அனுசந்தித்தது -அந்த அவதார சம காலத்திலேயே
தாம் உளராக பெறாமையாலே வந்த ஆற்றாமையாலே -கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி தசையை -
பிராப்தரானார் -அவள் பிறிவாற்றாமைக்கே மேலே கடலோசையும் பாதகமாக நின்றது
என்று திருத் தாயார் சொல்லுகிறாளாய்  இருக்கிறது-
வியாக்யானம் -
இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இறையோ இரங்காது–
காலிலே விழுந்து சரணம் புகச் செய்தேயும் -
சரணம் புக்கை தான் மிகையாம்படிக்கு ஈடே இறே இவள் தசை -என்று தசையை காட்டச் செய்தேயும் -
புறம்பொரு புகல் இல்லாதாள் ஒரு அபலை கிடாய் -என்னச் செய்தேயும் -ஏக தேசமும்  இரங்க்குகிறது  இல்லை -
பாதகர்க்கு இத் தலைவி எளிமையை அறிவித்த அளவாய் விட்டதே -இத்தனை எளிதாகில் நாமக்கு
நினைத்தபடி பாதிக்கலாம்  ஆகாதே என்று அதிலேயும் முறைக்கைக்கு உடலாயிற்று  –இது தான் சரணம் என்றால்
இரங்கும் அதும்  அன்றிக்கே -அம்புக்கு முகம் காட்டுமது இறே -

அது ஆர்த்திக்கு இரங்கும் அது அல்லவே -அம்புக்கு இரங்கும் அது இறே -தனக்கு சரணம் என்றால்
இரங்கும் அது   அன்றே -மரணமானால்  இரங்கும் அது இறே -
அறையோ என நின்றதிரும்  கருங்கடல் -
இங்கனே வெளியிலே புறப்பட்டாயோ -அறையோ அறை என்று கூறுவாரைப் போலே இரா நின்றது -
கருங்கடல் -அகவாயில் சீற்றம் உடம்பிலே நிழல் இட்டால் போலே இருக்கை -சிவப்பும்கருப்பும் சினம் -
என்னக் கடவது இறே -
ஈங்கு இத்யாதி -இவ் அவஸ்தா பந்னையான இவளுடைய அடக்கமானது -
உன் திருவருளால் அன்றி காப்பது அரிதால் -உம்முடைய பிரண யித்வத்தால் நோக்கும் எல்லை கழிந்தது இறே -
ஸ்வரூப பிரயுக்தமான கிருபையாலே -அல்லது நோக்க ஒண்ணா தாய்  – வந்து விழுந்தது -ஊரார் சொல்லும் பழிக்கு
 அஞ்சி மீளும் எல்லையும் கழிந்தது
-முறையோ -தத் தஸ்ய சத்ரு சம்பவேத் -என்று இருக்கும் நிலை கழிந்து -
கூப்பிட்டு பெற வேண்டும் தசையை வந்து விழுந்தது -
அரவணை -இத்யாதி -செங்கற்கீரை கட்டி கூப்பிட்டாகிலும்
பெற வேண்டும் படி யாயிற்று வடிவு அழகும் படுக்கையும் -அரவணை மேல் -இவள் கடின ஸ்த்தலத்திலே கிடக்க
நீர் மெல்லிய படுக்கையை தேடிக் கிடக்கிறீரே -
முகில் வண்ணனே -இத்தை எம்பார் அருளிச் செய்கிற போது -இயலை
சொல்லுகிறவரைப் பார்த்து -இவ்வளவிலே முகம் காட்டாதே செங்கற்கீரை கட்ட இருக்கிறவர் -முதலிகளாய்  இருப்பார் -
தலையிலே பிரம்புகள் விழிலும்-முகில் வண்ணரே -என்னீர் -என்று அருளிச் செய்தார் -இருவருமான வன்று சேர நிற்கவும்
பிரிந்த வன்று தாய்க்கூற்றிலே நிற்குமவர் இறே இவர் -
முகில் வண்ணன் -என்று ஏக வசனமாக சொன்னால் -நம்மை ஏக வசனமாக உதாசீனமாக சொல்லுகிறது -என் -என்றபடி -
ஆகையால் முகில் வண்ணர் -என்று பூஜ்யமாக சொல்லீர் என்று அருளிச் செய்தார் -என்றபடி -மிதுனமே உத்தேச்யமாய் இருக்க -
எம்பார் பிராட்டி பஷமாய் இருந்து ஈஸ்வரனை வெறுக்கிறது என் என்ன என்று அருளிச் செய்கிறார் -
ஸ்வாபதேசம் -
இப்பாட்டால் ஸ்வரூபத்தாலே பெற இருக்கை அன்றிக்கே -ஸ்வரூபத்தை அழித்தாகிலும்
பெற வேண்டும்படி -ஆற்றாமை கரை புரண்டபடி சொல்லுகிறது -
கருங்கடல் இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இறையோ  இரங்காது  -அறையோ என நின்று அதிரும்
இனி ஈங்கிவள் தன் நிறையோ உன் திருவருளால் அன்றி காப்பது அரிது -அரவணை மேல் பள்ளி கொண்ட
முகில் வண்ணனே -முறையோ -என்று அந்வயம்
ஒ ஸ்வாமி  -இப்போது நீ இவள் இடம் அருள் செய்து -உன் வடிவு அழகை காட்டினால் அல்லது
இவள் ஜீவிக்க உபாயம் இல்லை -ஆகையால் ஒருகால் நீ வந்து தோற்ற வேணும் என்கிறார்கள் -
———————————————————————————————————————————————————————————————-
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-6-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள்

November 5, 2012

சிக்கெனச் சிறிதுஓர் இடமும் புறப்படாத்
தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததன்பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர்விளக்காய்த் துளக்குஅற்று
அமுதமாய் எங்கும்
பக்கம்நோக்கு அறியான்என் பைந்தாமரைக் கண்ணனே.

    பொ – ரை : அழகிய தாமரை போன்ற கண்களையுடைய என் இறைவன், மிகச்சிறிய இடமும் புறம்பு போகாதபடி உலகுகளைத் தன் நினைவிற்குள்ளே ஒரே விதமாக அடக்கி, வெளியில் புறப்படாதபடி என் மனத்திற்புகுந்தான்; புகுந்த பின்னர், ஞானவெள்ளத்தால் வந்த மிக்க ஒளியை உடையவனாய் நடுக்கமும் தீர்ந்து, அமுதம் போன்று இனியனாய், ஓரிடத்திலும் பக்கத்தைப் பார்க்கின்றிலன்.

    வி-கு : ‘சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள் ஒக்கவே விழுங்கிச் சிக்கெனப் புகுந்தான்’ என மாற்றுக. விழுங்குதல் – அடக்குதல். ‘புறப்படா விழுங்கினான்’ எனக் கூட்டுக. புறப்படா – புறப்படாதபடி.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 1மேல் பாசுரத்தில் இறைவன், ‘இவர் நம்மை விடின் செய்வது என்?’ என்று ஐயங்கொண்டபடியை அருளிச்செய்தார்; இவர், ‘விடேன்’ என்ற பின்பு அவனுக்கு வடிவிற்பிறந்த பௌஷ்கல்யத்தைச் சொல்லுகிறார் இப்பாசுரத்தில்.

    சிறிது ஓர் இடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள் ஒக்கவே விழுங்கிச் சிக்கெனப் புகுந்தான் – மிகச்சிறியதாய் இருப்பது ஒரு பொருளும் தன் பக்கல்நின்றும் பிரிகதிர்ப்பட்டு நோவுபடாதபடியாகத் தன் நினைவில் ஆயிரத்தில் ஒரு கூற்றிலே உலகங்களை ஒருகாலே வைத்து, இனிப் பேராதபடி புகுந்தான். ‘நாம் ஆழ்வாரை அனுபவிக்கும் போது, செருப்பு வைத்துத் திருவடி தொழப் புக்காற் போலே

1ஆக ஒண்ணாது’ என்று பார்த்து, உலகத்தைப் பாதுகாத்தற்கு வேண்டும் வியாபாரங்களை எல்லாம் செய்து முடித்து, வேறு ஒன்றில் நோக்கு இல்லாதவனாய் அனுபவித்துப் போக மாட்டாதே இருந்தான் என்றபடி. இராசாக்கள் அந்தப்புரத்திற்புகுவது, நாட்டுக் கணக்கு அற்ற பின்பே ஆதலின், ‘உலகுகள் ஒக்க விழுங்கிப் புகுந்தான்’ என்கிறார். இனி, ‘சிக்கெனப் புகுந்தான்’ என்பதற்கு, 2‘அநந்யப் பிரயோசனமாகப் புகுந்தான்’ என்று கூறலுமாம்.

    புகுந்ததன் பின் மிக்க ஞானச் சுடர்விளக்காய்த் துளக்கு அற்று – இவரோடே வந்து கலந்து, அக்கலவியில் அதிசங்கையும் தீர்ந்த பின்பாயிற்று, 3விகஸித ஸஹஜ ஸார்வஜ்ஞனுமாய் விஜ்வரனும் ஆயிற்றது. என்றது, 4தனக்கு நித்திய தர்மமான ஞானத்தை யுடைத்தான ஆத்மவஸ்து, கர்மம் காரணமாக ஒரு சரீரத்தை மேற்கொண்டு இந்திரியங்களாகிய வழியை விரும்பிக்கொண்டு சஞ்சரிக்க வேண்டும்படி போந்தது, ஒரு நாள் வரையிலே பகவானுடைய திருவருளும் பிறந்து ஞானக் குறைவும் கழியக் கடவதாய் இருக்கும் அன்றே? அங்ஙனம் ஓர் ஏதுவும் இன்றிக்கே இருக்கிற சர்வேஸ் வரனும் இவரோடே வந்து கலப்பதற்கு முன்பு குறைவுபட்ட ஞானத்தை உடையவனாய் இவரோடே கலந்த பின்பு மலர்ந்த ஞான வெள்ளத்தையும் உடையவன் ஆனான்; திவ்விய மங்கள விக்கிரஹமும் புகர் பெற்றது இப்போது என்றபடி. துளக்கு அறுதலாவது, ‘ஆடி ஆடி’ என்ற திருவாய்மொழியில் உண்டான 1ஆற்றாமையால் வந்த உள் நடுக்கமும் தீர்தல் 2‘நடுக்கமற்றவனானான்’ என்றார் ஸ்ரீ வால்மீகி. இனி, துளக்கு அறுதலாவது, ‘இவர் நம்மை விடின் செய்வது என்?’ என்கிற உள் நடுக்கமும் தீர்ந்தான் இப்போது என்று கூறலுமாம்.

    அமுதமாய் – 3‘மிக மகிழ்ந்தார்’ என்கிறபடியே, இறைவன் தம்மை விரும்பிப் போக்கியமாக நினைத்திருக்கிற இருப்புத் தமக்குப் போக்கியமாய் இருக்கிறபடி. இறைவன் தம்மை அனுபவித்து இனியனாய் இருக்கும் இருப்பு இவர்தமக்குப் போக்யமாய் இருத்தலின் ‘அமுதமாய்’ என்கிறார் என்றபடி. எங்கும் பக்கம் நோக்கு அறியான் -‘ஆழ்வார் பக்கல் இறைவனுக்கு உண்டான 4அளவு கடந்த காதலைத் தவிர்க்க வேண்டும்’ என்று நாய்ச்சிமார் விரும்பி வார்த்தைகள் கூறினும் அவர்கள் பக்கல் கண் வைக்க மாட்டுகின்றிலன்.

    இங்கே ஆளவந்தாருக்குக் குருகை காவலப்பன் அருளிச் செய்ததாக அருளிச்செய்யும் வார்த்தை: ‘அப்பன் ஸ்ரீ பாதத்திலே ஒரு ரஹஸ்ய விசேஷம் உண்டு’ என்று மணக்கால் நம்பி அருளிச்செய்ய, ‘அது கேட்கவேண்டும்’ என்றுஆளவந்தாரும் எழுந்தருள, கங்கை கொண்ட சோழபுரத்து ஏற, 5அப்பனும் அங்கே ஒரு குட்டிச் சுவரிலே யோகத்திலே எழுந்தருளியிருக்க, ‘இவரைச் சமாதி பங்கம் பண்ண ஒண்ணாது’ என்று சுவருக்குப் புறம்பே பின்னே நிற்க, அப்பனும் யோகத்திலே எழுந்தருளியிருக்கிறவர் திரும்பிப் பார்த்து,

‘இங்கே 1சொட்டைக் குலத்தில் யாரேனும் வந்தார் உளரோ?’ என்று கேட்டருள, ‘அடியேன்’ என்று ஆளவந்தாரும் எழுந்தருளி வந்து கண்டு, ‘நாங்கள் பின்னே தெரியாதபடி நிற்க இங்ஙனம் அருளிச்செய்கைக்கு ஏது என்?’ என்ன, ‘நானும் தானுமாக அனுபவியாநின்றால், பெரிய பிராட்டியார் அன்பு நிறைந்த வார்த்தைகளைக் கூறினும் அவள் முகங்கூடப் பாராத சர்வேஸ்வரன், என் கழுத்தை அமுக்கி நாலு மூன்று தரம அங்கே எட்டிப் பார்த்தான்; இப்படி அவன் பார்க்கும்போது சொட்டைக் குடியிலே சிலர் வந்தார் உண்டாகவேண்டும் என்று இருந்தேன் காணும்,’ என்று அருளிச்செய்தார். என் பைந்தாமரைக் கண்ணன் – ‘ஆடியாடி’ என்ற திருவாய் மொழியில் ஆற்றாமையால் வந்த தாபமும் தீர்ந்து திருக்கண்களும் குளிர்ச்சி பெற்றவன் ஆனான்.     

இவர் விடில் செய்வது என் -அதி சங்கை பண்ணினார் முன்பு -
விடேன் என்ற பின்பு வடிவில் வந்த பௌஷ்கல்யம் சொல்கிறது இந்த பாசுரம் -
த்வயம் பூர்வ வாக்கியம் -சொல்லிய  பின்பு அவனுக்கு மாசுச சொல்வது உத்தர வாக்கியம் -
சுடர் விளக்காய் -புகுந்ததன் பின் -
சிக்கனே சடக்கென உலகு விழுங்கி
நெஞ்சுக்குள் புகுந்த பின் மிக்க ஞான வெள்ள சுடர் விளக்கு -
துளக்கற்று அமுதமாய் என் பைம் தாமரை கண்ணன்
எங்கும் பக்க நோக்கு அறியான் -
சிறிது இடமும் இன்றி உலகுகளை விழுங்கி புகுந்தான் -எதற்கு
உலகு எழ தன்னுள் ஒடுக்கி தயிர் வெண்ணெய் உண்டான் -
ஆழ்வார் திருமேனி வைகலும் வெண்ணெய் கை கலவாமல் –என் மெய் கலந்தானே -
வெண்ணெய் விழுங்கினார் -புகுந்த லோகம் புகுவீர் வள எழ உலகும் -
இத்தால் ஆழ்வார் திரு உள்ளம் =வெண்ணெய்
எல்லா கார்யம் முடித்த பின் புகுந்தார்
செருப்பு வைத்து திருவடி தொழ ஒண்ணாதே
தீர்த்தம் சாதிக்க -சொல்லாமல் செருப்பு சாதிக்க கேட்டாராம் -நினவு
உலகு ரஷணம்-எல்லாம் பண்ணி -பின்பு அநந்ய பரனாய் ஆழ்வாரை அனுபவித்து போக மாட்டாதே
முழுவதும் அகப்பட கரந்து – -
புகுந்ததன் பின் எங்கும் பக்க நோக்கு அறியான்
ராஜாக்கள் அந்த புரம் புகுவது  நாட்டு கணக்கு முடிந்த பின்பு தான் -
அதி அல்பமாய் இருந்த பதார்த்தமும் பிறிகதிர்  பட்டு நோவு படாதபடி
சங்கல்பத்தின் சகஸ்ரத்தில் ஏக தேசத்தால் -
சிக்கனே -
கலவியிலும் அதி சங்கை -தீர்ந்த பின்பு விகசிதிக்க சகஜ சார்வஞ்ஞானாய்
ஞான  ஸ்வரூபன் ஆடி கொண்டு இருந்ததானாம் முன்பு விகசித மலர்ந்த
சகஜ -விஜ்சுரனுமாய் ஆனதாம் -தனக்கு நித்ய தர்மம் ஆத்மா வஸ்து தர்ம பூத ஞானம் -
அவன் ஞானம் குறையாதே நித்யம் தானே -
கர்ம நிபந்தனமாக ஆத்மா ஞானம் இந்திரிய த்வாரா பிரகாசிக்க வேண்டி இருக்கிறது -
பகவத் பிரசாதமும் பிறந்து

சந்குசித ஞானனாய் -நன்றாக மலர்ந்த
திவ்ய மங்கள விக்கிரகமும் புகர் பெற்றது -
அவிகாராயா ரூபாயா -
கலந்தால் மட்டும் போறாது பிரிந்து போக மாட்டார்
ஆடி அடியில் ஆழ்வாருக்கு வந்த ஆற்றாமை
கண்டு அவனுக்கு உல் நடுக்கம் பெற்றான்
அது தீர்ந்தது
விஜுராக என்ன கடவது இறே-பிரமுதொதாக -மொத முமுமொத -பிரமுமொத superlative
அப்புறம்தான் ராமன் ஆனான் -ஹா -இப்படியும் ஆச்சர்ய படுகிறான் ரிஷி
துளக்கு அற்று உள் நடுக்கம்
அமுதமாய்
அவன் இப்படி ப்ரீதியாய் என்று ஆழ்வாருக்கு சந்தோஷம் -
தன்னை விரும்பி போக்யமாய் இருக்கும் இருப்பு பற்றி
முதல் ஆனந்தம் கூடாது பதில் ஆனந்தம்
திரு முலை தடத்தாலும் நெருக்கினும்
அவர்கள் பக்கல் கை வைக்காமல்
ஐதிக்யம் குருகை காவல் அப்பன் -யோக ரகஸ்யம்-அப்யாசம் -
குட்டி சுவருக்கு அந்தண்டை அனுபவித்து கொண்டு இருக்க -
சொட்டை குலத்தார் யாரேனும் வந்தார் உண்டோ
ஸ்ரேஷ்ட குலம் -சொட்டை குலம்
அடியேன் -திரு பேரன்
பிராட்டியே கூப்பிட்டாலும் திரும்பி பார்க்காதவன் -
அப்பன் இடம் இருக்கு என்று மணக்கால் நம்பி அருள -கங்கை கொண்ட சோழ புரம் -
சுவருக்கு புறம்பே பின்னே நிற்க -சாமாதி குலைக்க கூடாது -
பின்னே தெரியாத படி இருக்க அறிந்தமைக்கு ஹேது -
திரு முலை தடத்தாலும் முகம் காட்டாதவன் -
என் கழுத்தை அமுக்கி எட்டி பார்த்தான்
சரீர விநியோக காலம், தான் கொடுப்பேன் -நாள் குறித்துபோக
புஷ்பக விமானம் பெற்றிலோமே -
நம் பிள்ளை
கங்கை கொண்ட சோழன் ராஜ ராஜ சோழன் பிள்ளை
ஆள வந்தார் காலத்தில் வேற பெயர் நம்பிள்ளை எழுதி இப்படி குறிக்க
ஆழ்வார் ஆசார்யர் அனுபவம் -பைம் தாமரை கண்ணன் -
ஆடி ஆடியில்-ஆழ்வாருக்கு வந்த ஆற்றாமையால்அதுதீர -
அவனுக்கு வந்த தாபம் தீர்ந்து -கண் முதலில் தெரியுமே -பசை உடன் இருக்கிறான் -

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 68 other followers